423.?!

அந்த பின்னிரவு நேரத்தில் காலிங்பெல் சத்தம் கேட்டவுடன் சற்று திடுக்கிட்டாள் டிஜிட்டல் மீடியாவில் வேலை பாக்கும் பிரியா. சற்று நிதானித்த அவள்  பின் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அடுத்த நாள் காலையில் இறந்து கிடந்தாள் அவள்.

கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்த போலீஸ் அதிகாரி கார்த்திகா அதிர்ந்தாள். கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் நெற்றியில் 423 என்ற எண்ணால் சூடு வைக்கப்பட்டிருந்தது. கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்த அந்தப்  பெண்ணின் இரண்டு பெருவிரல்களும் வெட்டப்பட்டு இருந்தது.

இந்தக் கொலை இதோடு நிற்கவில்லை. அடுத்தடுத்து ஆசிரியரான ஈஸ்வரமூர்த்தியும் யூடுபரான  ஷங்கரும் இதே பாணியில் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். கொலையாளி கருப்பு கலர் காரில் வந்து சாவகாசமாக கொலை செய்துவிட்டு செல்வதை டிடெக்டிவ் ராகவன் கண்டுபிடிக்கிறார். ஆனால் சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

ஆன்மிகம், கலாச்சாரம், தனிமனித தாக்குதல் இந்த மூன்று விஷயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு தனிமனிதனின் உச்சக்கட்ட கோபமே இந்தத் தொடர் கொலைகளுக்கான காரணம். இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வாசகர்கள் கதையின் முன்னுரையைப் படிக்கவும். சீரியல் கில்லரான அருணின் நோக்கம் சரியாக இருந்தாலும் அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறானது.

யூடுபில் சமையல் வீடியோக்களையும், காமெடி வீடியோக்களையும் மட்டுமே பார்த்து ரசித்து வந்த நாம், பின்னாட்களில் ஆன்மிக சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகளையும் எந்த எதிர் கேள்வியும் இன்றி நம்ப ஆரம்பித்துவிட்டோம். வாஸ்து பார்த்து வீடு கட்டுவதில் ஆரம்பித்து , ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்வது, நல்ல நேரம் பார்த்து குழந்தை பெற்றுக்கொள்வது என நம்முடைய மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் யூடுபை பார்த்து சுயமாக பிரசவம் பார்க்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

இங்க எல்லாருமே content-அ தேடி தான் ஓடிக்கிட்டு இருக்காங்க. அது நல்ல content- ஆ இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, உண்மையில்லாத பொய்யான content-ஆ இருந்தா..? இப்போதெல்லாம் Social Media-வை யூஸ் பண்ணாதவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அந்த அளவுக்கு Social Media நம்மளை ஆக்கிரமிச்சிருக்கு. காலையில எழுந்ததுல இருந்து நைட் தூங்கற வரைக்கும் மொபைல்ல ஷேர் பண்ற விஷயங்கள்ல எவ்வளவு விஷயங்கள் உண்மையாவும்.. ஆதாரப்பூர்வமா நிரூபிக்கப்பட்டும் இருக்குனு நாம யோசிக்கறதே இல்ல..அடுத்த முறை ஷேர் பட்டனை கிளிக் பண்றதுக்கு முன்னாடி யோசிங்க..!

நாம ஷேர் பண்ற, லைக் பண்ற விஷயங்களை வெச்சு நாம Social Engineering பண்ணப்படறோம்னு இங்க யாருக்குமே தெரியறது இல்ல..யாரை ஏத்தி பேசுனா நமக்கு பிடிக்கும்..யாரை கீழ வெச்சு பேசுனா நாம சந்தோஷப்படுவோம்..இப்படி பல விஷயங்கள்ல நமக்கே தெரியாம நம்மோட விருப்பங்களை மத்தவங்களுக்கு நாம தான் லீட்டா கொடுக்குறோம்.

எந்த ஒரு விஷயமும் கேட்க நல்லா இருக்கே, நமக்கு சாதகமா இருக்கேன்னு அதை ஏற்றுக்கொள்ளாதீங்க…ஏன், எப்படி, எதற்குன்னு கேள்வி கேளுங்க..அதுதான்  உண்மையை வெளிக்கொண்டு வரும்.

~புத்தகத்தில் இருந்து சில உண்மை வரிகள்..

கடைசியாக..இந்தக் கதையின் கரு பெரியதாக இல்லாவிட்டாலும், நம்மிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

#one_minute_one_book #tamil #book #review #sociopath #crime_thriller #social_media #na_siva #423

want to buy :

4 thoughts on “423.?!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d