சிவப்பு இரவு..?! – Crime Novel

பிரபலம் இல்லாத டிவி சீரியல் நடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத அவனுடைய அம்மாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். கையில் காசில்லாமல் இருந்த அவனுக்கு நண்பன் ராகவன் வலிய வந்து உதவி செய்கிறான். உதவியைப் பெற சென்றவனின் வாழ்க்கை சிக்கலில் சிக்கிக்கொண்டது. சூழ்நிலை மோசமானது.

அண்ணாச்சியிடம்  பணத்தை வாங்கச் சென்ற முத்துக்குமாரிடம் ஒரு உதவி கேட்கிறார் அவர். தவிர்க்க முடியாமல் அண்ணாச்சி சொன்ன இடத்திற்கு ஆக்ட்டிங் டிரைவராகப் போகிறான் முத்துக்குமார். அங்கே தான் சரணை சந்திக்கிறான். சரண் வளர்ந்து வரும் ஒரு பிசினஸ் மேன்.

அந்த இரவு நேரத்தில் காரை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை சந்திக்கச் செல்கிறான் சரண். அவன் உள்ளே போன அரைமணி நேரத்திலேயே திரும்ப ஓடி வந்து காரில் ஏறுகிறான். சரணின் சட்டை முழுவதும் ரத்தம்.

மிரண்ட முத்துக்குமார் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் போது பதில் சொல்லாமல் காரிலேயே உயிரிழக்கிறான் சரண். பயந்த முத்துக்குமார் அண்ணாச்சிக்கு போன் செய்ய, அவருடைய கால் டாக்ஸி சென்டருக்கு அவனை வரச் சொல்கிறார்.

அம்மாவின் ஆபரேஷனுக்காக அன்றிரவே கிராமத்துக்குச் செல்ல இருந்த முத்துக்குமார், காரில் பிணத்துடன் மனதில் திகிலுடன் அடுத்தது என்ன..?

சரணின் பின்னணி என்ன..? சரணைக் கொலை செய்தது யார்..? முத்துக்குமார் கிராமத்துக்குச் சென்றானா..? அவனுடைய அம்மாவிற்கு ஆபரேஷன் நடந்ததா..? இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலாக எதிர்பாராத பரபர திருப்பங்களுடன் மிரட்டும் ராஜேஷ்குமார் நாவல்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sivappu_iravu

want to buy : https://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-iravu

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: