இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட “அக்னி புத்திரன்” என்ற ராக்கெட்டை எதிரிகள் கடத்திச் செல்கின்றனர். ராக்கெட்டை மீட்பதற்காக எக்ஸ் ஏஜென்ட் விக்ரமை தொடர்புகொள்கிறது உளவுத்துறை.
தன் புது மனைவி மீராவுடன் தேனிலவைக் கொண்டாடிக் கொண்டிருந்த விக்ரம் உளவுத்துறைக்கு உதவ மறுக்கிறான். அதற்குள் விக்ரமின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட வில்லன் சுகிர்தராஜா, விக்ரமைக் கொலை செய்வதற்கு ஆட்களை ஏவி விடுகிறான்.
எதிர்பாராத விதமாக கொலைகாரன் விக்ரமிற்கு பதிலாக அவன் மனைவி மீராவை குறி தவறி சுட்டுவிடுகிறான். மீராவைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக களத்தில் இறங்குகிறான் விக்ரம்.
அப்படியே ராக்கெட்டைக் கண்டுபிடிப்பதற்காக உதவிக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ப்ரீத்தியை உடன் அழைத்துக் கொள்கிறான். எதிரி சலாமியா தீவில் இருப்பதாக விக்ரமிற்குத் தகவல் கிடைக்கிறது.
விசித்திரமான சட்டங்கள், வித்தியாசமான ஒரு ராஜா, கண்களிலேயே கொஞ்சும் ராஜகுமாரி, மொட்டைத்தலை ராஜகுரு என ஒரு குளுகுளு தேசம் தான் இந்த சலாமியா. சலாமியாவில் உயிர்போகும் நிலையிலும் விக்ரமின் சாகசங்கள் என பக்கத்திற்குப் பக்கம் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் பரபர திருப்பங்களுடன் சிலுசிலுவென நகரும் கதை.
பத்மஸ்ரீ கமலஹாசன் நடிப்பில் 1986-இல் வெளிவந்த, சினிமாவுக்கென்றே சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட திரைக்கதை தான் விக்ரம். படமாக எடுக்கும்போதே, ஷூட்டிங் போட்டோக்களுடன் குமுதம் இதழில் தொடராக வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த கதை விக்ரம்.
#one_minute_one_book #tamil #book #review #thriller #vikram #sujatha
want to buy : https://amzn.eu/d/bACaf04
Leave a Reply