விஷ்வா – அஜந்தா இருவரும் காதலர்கள். இரண்டு வீட்டார் பக்கமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காதல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இன்னும் மூன்று மாதங்களே கல்யாணத்திற்கு உள்ள நிலையில், ஒரு அதிர்ச்சியான செய்தி அவர்களை வந்தடைகிறது ஹரிதா மூலமாக.
ஹரிதா – விஷ்வாவின் கல்லூரி தோழி, மும்பையில் வசித்து வருபவள். திடீரென மும்பையில் இருந்து சென்னை வந்த ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி, கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்குமாறு விஷ்வாவிடம் கூறுகிறாள். மீறி விஷ்வா திருமணம் செய்தால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கிறாள்.
கடுப்பான விஷ்வா சப்பைக் காரணத்தைக் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போடுவதை விரும்பாமல் அடுத்த மாதமே கல்யாணத்தை நடத்த வீட்டில் சம்மதம் வாங்குகிறான். மேலும் அஜந்தாவிடமும் ஹரிதா கூறிய விஷயத்தைக் கூறுகிறான். ஆனால் கதையில் திடீர் திருப்பமாக ஹரிதாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகிறது.
விஷ்வா-அஜந்தாவின் உயிரைக் காப்பாற்ற வந்த ஹரிதாவிற்கு அவளுடைய உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலை. விஷயம் அறிந்த விஷ்வா உடைந்து போகிறான். இதற்கிடையில் ஹரிதா உண்மையான காரணத்தை மறைத்து, நியூமராலஜியைக் காரணம் காட்டியிருப்பதாக ஹரிதாவின் அண்ணன் சுதர்சன் நினைக்கிறார்.
ஹரிதாவின் விபத்தைப் பற்றி சந்தேகப்பட்ட போலீஸ், அது ஒரு கொலைமுயற்சி என்பதைக் கண்டுபிடிக்கிறது. மேற்கொண்டு ஹரிதாவின் எதிரிகளைப் பிடிக்க விசாரணை நடந்துகொண்டிருக்க, ஆஸ்பத்திரியில் வைத்தே ஹரிதாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்படுகிறது.
பல எதிர்பாராத திருப்புமுனையில் மும்பையின் நிழல் உலக மனிதர்களுக்கும், நிஜ உலக மனிதர்களுக்கும் இடையில் கானல் நீரில் நீந்தும் மீன்கள்..!
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #kaanal_neeril_neendhum_meengal
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1033
Leave a Reply