அரேபிய ரோஜா..! – Crime Novel

இந்த நிமிடம்…ஃசாப்ட்வேர் என்ஜினீயரான மஹிமா அவளுடைய எக்ஸிகியூடிவ் டைரக்டர் அழைப்பை ஏற்று அவரை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறாள். அறையின் உள்ளே நுழைந்த அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மஹிமாவின் நீண்ட நாளைய கனவு ப்ராஜெக்ட்டான “அரேபிய ரோஜா”வை துபாயில் அரங்கேற்றுவதற்கு அல் அராஃபத் கம்பெனியினர் ஒப்புக்கொண்டதுதான்.

சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போன மஹிமா உற்சாகத்தில் அறைக்குத் திரும்பியவுடன், அவளுடைய பர்சனல் கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது டிஸ்பிளேயில் இருந்த மிரட்டல் செய்தி அவளை அதிர வைத்தது.

இதற்கு நடுவில் ப்ராஜெக்ட் சம்பந்தமான சில சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள அல் அராஃபத் கம்பெனியின் இம்ராவும் சர்புதீனும் துபாயில் இருந்து இந்தியா வந்தடைகின்றனர்.

இம்ரா-சர்புதீன் உடனான மீட்டிங்கை முடித்துக்கொண்டு கிளம்பிய மஹிமாவின் கையில் யாருக்கும் தெரியாமல்  ஒரு துண்டு காகிதத்தைத் திணிக்கிறாள் இம்ரா. மிரட்டல்களை பெரிதாக பொருட்படுத்தாத மஹிமாவிற்கு அதில் இருந்த செய்தி சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. துபாயில் மஹிமாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், துபாய் வந்ததும் இம்ராவைத் தொடர்புகொள்ள மொபைல் நம்பரும் அதில் எழுதி இருந்தது.

தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற துணிச்சலுடன் துபாய் சென்றடைந்த மஹிமாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இம்ராவின் தோழி ஹம்தாவுடன் அவளை சந்திக்க செல்கிறாள் மஹி. ஆனால் அங்கே பிணமாகக் கிடக்கிறாள் இம்ரா.

எதிர்பாரா விதமாக அங்கே வருகிறான் சர்புதீன். கதையின் திருப்புமுனையாக அல் அராஃபத் கம்பெனிக்கு அவர்களை அழைத்துச் செல்லாமல் வேறு எங்கேயோ கடத்திச் செல்கிறான். இதற்கிடையில் ஹம்தாவும் உயிரிழக்க உதவிக்கு யாரும் இன்றி மஹிமா எதிரிகளிடம் இருந்து எப்படி தப்பித்தாள்..? சர்புதீன் கடத்திச் சென்ற நோக்கம் என்ன..? இம்ராவைக் கொன்றது யார்..?

இவ்வளவு சூழ்ச்சிகளும் அந்த அரேபிய ரோஜாவைக் கைப்பற்றுவதற்குத் தான். அரேபிய ரோஜா என்பது “இறந்தவர்களை உயிர்பிக்கச் செய்யும் ரெசரெக்ஷன் டெக்னாலஜி”.

அரேபிய ரோஜா யார் வசமானது..?

கிளைமாக்ஸைத் தெரிந்துகொள்ள மேற்கொண்டு வாசியுங்கள் அரேபிய ரோஜா..இப்போது பிரதிலிபி செயலில் இலவசமாக..!

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #arebiya_roja #arebian_rose

want to read free : https://tamil.pratilipi.com/series/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-tde5zzzmojiz?uitype=old#comments-list

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d