பஞ்சமாபாதகம் – Crime Novel

ஜர்னலிஸ்ட் என்ற போர்வையில் சென்னையில் இருந்து ஒடிஷாவிற்கு பயணப்படுகின்றனர் இனியனும் மான்யாவும். அவர்களுடன் தெர்மல் பிளாஸ்க்கில் பத்திரமாக கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்ய பெருமாள் சிலை. ஒடிஷாவில் மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்கி, தாங்கள் கொண்டு வந்த சிலையை பெரும் தொகைக்கு விற்கத் திட்டம் தீட்டியிருந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்து கோயில்களில் சிலைகள் களவாடப்பட்டு அவை வெளிநாட்டிற்கு விற்கப்படுவதாகவும், அந்த சிலைக் கடத்தலைக் கண்டுபிடித்து அது பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதப் போவதாகவும் பல்லவியிடம் இருவரும் பொய்யுரைக்கின்றனர்.

இருவரும் ஒடிஷா வந்த அன்று சாயந்திரமே ஐஸ்வர்ய பெருமாள் சிலையை விற்பதற்காக சுபாஷ் கபூர் என்ற நபரைச் சந்திக்கச் செல்கின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக சுபாஷ் கபூர் பழைய தகராறு காரணமாக கொலை செய்யப்படுகிறான்.

சுபாஷ் கொலையான நேரத்தில் இனியன்-மான்யா இருவரும் அவனுடைய வீட்டில் வேறொரு அறையில் இருந்தனர். உண்மையறிந்த இருவரும் போலீஸ் வருமுன் வீட்டை விட்டு கிளம்ப யத்தனிக்கையில், அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் அவர்களுடைய பார்வையில் படுகிறது.

எக்ஸ்ட்ராவாக கிடைத்த ஐம்பொன் சிலைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டில் அவர்கள் இருந்த தடயத்தை அழித்து விட்டு இனியனும் மான்யாவும் அங்கிருந்து கிளம்பினர். சிலைகளைப் பல்லவியின் வீட்டில் பதுக்கிவிட்டு வேறொரு பார்ட்டியைப் பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய இனியனும் மான்யாவும் திடுக்கிட்டனர். ஹாலில் பல்லவி உட்கார்ந்த நிலையில் செத்துக் கிடந்தாள்.

பல்லவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்திருந்தனர் எதிரிகள். நல்லவேளையாக, சிலை வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. இருவரின் சிந்தையும் சிலையின் மீதே இருக்க, திடீரென பல்லவியின் வீட்டுக்கு போலீஸ் வருகிறது. வீட்டில் பல்லவியின் பிணத்தை வைத்துக்கொண்டு இருந்த இனியன்-மான்யாவின் நிலை என்ன..? இருவரும் போலீசிடம் பிடிப்பட்டனரா..? இனியன்-மான்யாவின் சிலை கடத்தல் விவரம் வெளியில் வந்ததா..? பல்லவியைக்க கொலை செய்தது யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #panchamapadhagam

want to read free : https://tamil.pratilipi.com/series/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-gh7ybl0jt2ew?category=%2Fcontinue-reading

*Daily one chapter

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d