நிலவுக்கும் நெருப்பென்று பேர் – Crime Novel

காதலர்களான புவனேஷும் முகிலாவும் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். புவனேஷின் பால்ய சிநேகிதன் தருண் திருமணத்திற்குத் திட்டம் தீட்டிக் கொடுக்கிறான். அன்று அதிகாலை திருமணம். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய முகிலா கோவில் வந்து சேரவில்லை.

விஷயம் போலீசிற்கு செல்ல, விசாரணையில் முகிலா சென்ற டாக்ஸி கம்பெனி கண்டுபிடிக்கப்பட்டு டிரைவரை போலீஸ் விசாரிக்கிறது. ட்ரைவர் குடிபோதையில் இருக்க அவன் எடக்கு மடக்காக பதில் சொல்கிறான். மேலும் அவனுடைய டாக்ஸியில் உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடைக்கிறது.

டிரைவரை சந்தேகித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் அவனை லாக் அப்பிற்கு கொண்டு சென்று அவனுக்கு மண்டல பூஜை நடத்துகிறார். இதற்கிடையில் முகிலாவின் செல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து அவள் கடத்தப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் முயற்சி செய்ய ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவருகிறது.

முகிலாவின் செல்போன் ஐஎம்இஐ நம்பர் மாற்றப்பட்டிருந்தது. உண்மை அறிந்த புவனேஷ் ஹார்ட் அட்டாக்கில் விழுந்து கோமாவிற்குச் செல்கிறான். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் விசாரணையை முடுக்கிவிட, முகிலாவைப் பற்றிய தகவல் கிடைக்காமல் இரு குடும்பத்தினரும் கவலையில் ஆழ்ந்தனர்.

கேஸின் திருப்புமுனையாக திடீரென இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் விபத்தில் இறக்க, இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதாக போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில் கண்விழித்த முகிலா அவள் இருந்த அறையில் இருந்து வெளியே வந்து, மயக்கத்திலேயே மாடிப்படிகளில் இறங்கி வருகிறாள். கீழே புவனேஷின் நண்பன் தருண், தருணின் நண்பர்கள் இக்பால் மற்றும் ஜோஷ் மூவரும் தண்ணியடித்துக் கொண்டிருக்க..அந்த எமகாதர்களிடம் இருந்து முகிலா தப்பித்தாளா..? முகிலாவைக் கடத்தியதன் நோக்கம் என்ன..? இன்ஸ்பெக்டரை கொலை செய்தது யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #nilavukkum_neruppendru_per

want to read free : https://tamil.pratilipi.com/series/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-cv7vuex5gtas?category=%2Fcontinue-reading

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d