இறந்து கிடந்த தென்றல் – Crime Novel

சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு சொந்த வேலையாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தான் ரிப்போர்ட்டரான குமரன். வழியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால், இயற்கை உபாதைக்காக  பஸ்ஸை விட்டு இறங்கி ஒதுக்குப்புறமாகப் பார்த்து ஒதுங்குகிறான்.

திடீரென காலில் ஏதோ தட்டுப்பட, அரைகுறை வெளிச்சத்தில் கீழே பார்த்த குமரன் திடுக்கிட்டான். கணுக்கால் அளவு வெட்டப்பட்டிருந்த நைந்து போன மனிதக் கால். ரிப்போர்ட்டர் என்பதால் தைரியமாக போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்க நினைக்கிறான் அவன்.

பாதி வழியில் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்ட அவன், விஷயத்தை இன்ஸ்பெக்டரிடம் கூற, அவர் ஸ்பாட்டுக்கு குமரனுடன் விரைந்தார். விசாரணையில் அந்தக் கேஸில் பெரிய புள்ளி சம்பந்தப்பட்டிருந்ததால் இன்ஸ்பெக்டர் அவன் பார்த்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி குமரனை மிரட்டி அனுப்பிவிடுகிறார்.

அதே வேளையில் வறுமையில் இருந்த தமிழ் ஆசிரியரான மணிவாசத்தின் மூத்த மகளும் ரெண்டாவது மகளும் திருமணம் ஆகாமல் இருக்க, அவரின் மூணாவது மகள் மேகாவைத் தனது மகன் குணசீலனுக்கு கட்டி வைக்கச் சொல்லி கல்வி அமைச்சர் ஜோதி மாணிக்கம் மிரட்டுகிறார்.

ஜோதி மாணிக்கத்தின் மகனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பாத மணிவாசகம், நேர்மையான போலீஸ் அதிகாரியான மகேந்திரகுமாரைச் சந்தித்து நடந்ததை விளக்குகிறார். ஆனால், எதிரிகள் மகேந்திரகுமாரையும் விட்டுவைக்கவில்லை. அவரை மயக்க மருந்தை சுவாசிக்கச் செய்ய, அவர்  கோமாவிற்குச் செல்கிறார்.

இந்நிலையில் குணசீலனின் ஆட்கள் மேகாவைக் கடத்தி அவனுடைய பண்ணை வீட்டில் அடைத்து வைக்கின்றனர். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த மேகா, நடந்த போராட்டத்தில் மேகா உயிரிழக்கிறாள். வைக்கோல் போரில் வைத்து மேகாவின் உடலை எரித்துவிடுகின்றனர்.

நடந்த சம்பவங்களை யாரோ ஒரு மர்ம நபர் படம்பிடித்து ஜோதி மாணிக்கத்துக்கு அனுப்பி அவரை மிரட்டினான். யார் அந்த மர்ம நபர்..? முதலில் கணுக்கால் வரை வெட்டப்பட்ட மனிதக் கால், மேகாவின் மரணம் என அடுத்தடுத்த திருப்பங்களுடன் நம்மை  மிரட்டும் இறந்து கிடந்த தென்றல்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #irandhu_kidandha_thendral

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=251

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: