இந்த ரோஜாவுக்கு நிறமில்லை – Crime Novel

போலீஸ் வேலையை விட்டுவிடுமாறு ப்ரதீபாவை சில நாட்களாகவே வற்புறுத்திக் கொண்டிருந்தான் அவளது கணவன் மகேஷ். முதன்முதலில் பஸ்ஸில் ரவுடிகளை தைரியமாக எதிர்த்து நின்ற ப்ரதீபாவின் துணிச்சலை தான் முதலில் விரும்பினான் மகேஷ்.

வீட்டில் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லிய மகேஷ் ஆரவாரமாக குடும்பத்தினருடன் ப்ரதீபாவின் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தான். வீட்டில் ப்ரதீபா இல்லை. மேலும் ப்ரதீபா போலீஸ் என்ற உண்மை தெரிந்ததும் வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றனர்.

பெண்கள் போலீஸ் வேலைக்கு செல்வதை விரும்பாத மகேஷின் ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்களைப் போராடி கன்வின்ஸ் செய்த மகேஷ், நடந்த சம்பவத்திற்கு ப்ரதீபாவிடம் மன்னிப்பு கோரி அவளைக் கரம்பிடித்தான்.

திருமணமான முதல் நாளே ப்ரதீபாவின் கடமை உணர்ச்சியினால் ப்ரதீபாவிற்கும் மகேஷிற்கும் இடையில் விரிசல் உருவாகிறது. நாளடைவில் அதுவே பழகிப்போகிறது மகேஷிற்கு.

இப்போது அவர்களுக்கு ஐந்து வயது மகள் லில்லி இருக்க, ப்ரதீபாவுடன் வாழ விரும்பாத மகேஷ் அவளுடைய சம்மதத்துடன் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறான். இந்நிலையில் ப்ரதீபாவின் நேர்மையின் காரணமாக பிரபல அரசியல் கட்சியின் அடியாட்கள் அவள் வீட்டில் இல்லாத நேரம் வந்து மகேஷை மிரட்டிச் செல்கின்றனர்.

மேலும் ப்ரதீபாவின் விவாகரத்து பற்றி அறிந்த கமிஷனர் அவளிடம் மிஸ்பிஹேவ் செய்ய, அதை மீடியாவின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறாள் ப்ரதீபா. இந்த விஷயம் மீடியாவில் வெளிவர விரும்பாத மகேஷ் டெலிகாஸ்ட் ஆகாமல் தடுக்கச் சொல்கிறான்.

ப்ரதீபா மறுக்க..நாட்கள் சண்டையில் போய்க்கொண்டிருக்க, திடீரென ஒருநாள் வீட்டில் மயங்கி விழுகிறாள் ப்ரதீபா. அவள் மீண்டு வரப்போவது இல்லை என்பதை அறிந்த மகேஷின் நிலை என்ன..?

இன்னும் பல புத்தகங்களின் அறிமுகத்திற்காக இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #indha_rojavukku_niramillai

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=335

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d