ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்றைக்குத் தான் சிங்கப்பூரில் உள்ள அத்தை வீட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறாள் ராகினி. ஏர்போர்ட்டில் அவளுடைய அப்பா ஜகதீஸ்வரனைத் தேட, அவர் அவள் கண்ணில் சிக்கவில்லை.
மேற்கொண்டு அப்பாவிற்காக காத்திருக்காமல் டாக்ஸி பிடித்து வீட்டிற்குச் செல்கிறாள் ராகினி. வீட்டிற்குப் போகும் வழியிலேயே ரோட்டில் கூட்டம் கூடியிருக்க அவளுக்கு பழக்கமான அம்பாசடர் கார் நடுரோட்டில் நிற்க காரைச் சுற்றிலும் ஒரே நெரிசல்.
காரை நோக்கிச் சென்ற ராகினி அதிர்ந்தாள். அங்கே காரில் ஏராளமான கத்திக்குத்துகளுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார் ஜகதீஸ்வரன். அதைத் தவிர காரில் கிடைத்த நான்கு பிங்கர் ப்ரிண்ட்ஸ் போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியது.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த நபர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதை குற்றவாளிகள் விட்டுச் சென்ற தடயத்தில் இருந்தே போலீசார் அறிந்தனர். அதுமட்டுமின்றி ஜகதீஸ்வரன் போலி மருந்து கம்பெனி நடத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது.
கேஸ் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க பொறுமை இழந்த ராகினி டிடெக்ட்டிவின் உதவியை நாடுகிறாள். ஹை டெக் டிடெக்ட்டிவ் ஏஜென்சியின் ப்ரியேஷும் குருவும் சேர்ந்து, ராகினிக்கு உதவிக்கொண்டிருப்பதை அறிந்த எதிரிகள் கடிதம் மூலமாக அவர்களை மிரட்டுகின்றனர்.
மறுபக்கம் அந்த நான்கு பேரும் காரில் தடயத்தை விட்டுவிட்டு வந்ததைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தனர். அந்த நான்கு பேர் கூட்டத்திற்கு புதியதாக வந்த அவன், அவர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க உதவிக்கொண்டிருந்தான்.
ஜெகதீஸ்வரனின் கொலைக்கு காரணமான நபர்கள் யார்..? கொலைக்கான மோட்டிவ் என்ன..? கொலைகாரர்களுக்குத் திட்டம் போட்டுக் குடுக்க வந்த ஐந்தாவது ஆள் யார்..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkmar #oru_kaal_suvadu_thodargiradhu
want to buy :
Leave a Reply