இன்று இறப்பு விழா – Crime Novel

லண்டனில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பம்பாய் வந்தடைகின்றனர் ஒலிம்பிக் வீரர்கள். பம்பாயில் தங்கியிருந்து மீதிப் பயிற்சியையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து லண்டன் செல்வதாகத் திட்டம். ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பூபேஷ் அனைவரையும் ஹோட்டல் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார்.

இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பம்பாய் வந்த உடனேயே ஒரு சம்பவம். ஹாக்கி கேப்டனான உத்தமும் கோச் குருதேவ் சிங்கும் போய்க்கொண்டிருந்த காரில் திடீரென குண்டு வெடித்து பீஸ் பீஸாக சிதறினர். குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு துப்பு கிடைக்கிறது.

ஆனால் கிடைத்த வீடியோ ஆதாரத்தையும் எதிரிகள் திருடி விட்டு அவர்களைப் பற்றிய ஆடியோ காஸெட்டை விட்டுச் செல்கின்றனர். எதிரிகள் இந்தியக் கழுகுகள் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் போலீசிற்குக் கிடைக்கிறது.

பாராளுமன்றத்தை கலைத்து ஆளுங்கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கையை இந்தியக் கழுகுகள் அமைப்பு முன்வைக்கிறது. மீறினால் ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்படுவார்கள் என பகிரங்கமாக மிரட்டுகின்றனர்.

தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு உடன்படாத விளையாட்டுத் துறை அமைச்சர் காமோத் அவர்களின் எச்சரிக்கையைப் அலட்சியப்படுத்துகிறார். அதன் விளைவு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிகிலா கரண்ட்  ஷாக் கொடுத்து கொலை செய்யப்படுகிறாள்.

அடுத்த கொலை நடக்கும் முன் அதைத் தடுப்பதற்காக சென்னையில் இருந்து கிரைம் பிரான்ச் விவேக்கை பம்பாய் வரவழைக்கின்றனர். விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த அதே ஹோட்டலில் விவேக்கிற்கும் ரூம் போடப்படுகிறது.

அன்றிரவே ஹோட்டல் அறையை எதிர் பில்டிங்கில் இருந்து ஒருவன் டெலிகாமரா லென்ஸின் உதவியுடன் துப்பாக்கியில் குறிபார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த விவேக் பதுங்கிச் சென்று அவனைப் பிடிக்க முயற்சிக்கிறான். எதிர்பாராத விதமாக எதிரி தப்பித்துவிடுகிறான்.

நிலைமை இவ்வாறிருக்க பூபேஷ் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் பிணமாகக் கிடைக்கிறார். பிசிறடிக்காத ஒரு ரகசிய திட்டம் தீட்டிய விவேக், ஒலிம்பிக் வீரர்களை லண்டன் அனுப்ப ரகசியக் கூட்டம் போடுகிறான்.

தனித்தனி குழுவாகப் பிரித்து வீரர்களை லண்டன் அனுப்ப முயற்சித்த விவேக் அந்தத் திட்டத்தில் வெற்றி பெற்றானா..? ஆரம்பத்தில் இருந்தே எதிரிகள் வென்று வரக் காரணம் என்ன..? வீரர்கள் பத்திரமாக லண்டன் சென்றடைந்தனரா..? இந்தியக் கழுகுகள் அமைப்பின் தலைவர் யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #indru_irappu_vizha

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=574

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: