இந்தியன் என்பது என் பேரு – Crime Novel

ஹாங்காங்கில் வேலை செய்யும் அண்ணன் தருணை சந்திக்க ஏர்போர்ட் வந்திறங்குகிறாள் அட்சதா. வருடத்திற்கு ஒருமுறை வந்து இரண்டு வாரம் தங்கிவிட்டு செல்வது அவளது வழக்கம்.

இந்த முறை அவள் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் மெலன் லீ என்ற சீனப் பெண் அவளாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டு காஃபி ஷாப்பிற்கு அட்சதாவை அழைக்கிறாள். அட்சதா மிகவும் அழகாக இருப்பதாகவும் இந்தியர்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறுகிறாள்.

மெலன் லீயை நம்பி காஃபி ஷாப் செல்கிறாள் அட்சதா. அங்கு மெலன் விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கைத் தன்னுடைய நினைவாக அட்சதாவிற்குத் தருகிறாள். பிறகு அங்கிருந்து இருவரும் பிரிந்து அவரவர்கள் பாதையில் செல்கின்றனர்.

டாக்ஸிக்காக காத்திருந்த அட்சதாவை நெருங்கிய போலீஸ் அதிகாரி அவளை விசாரணைக்கு அழைக்கிறார். முதலில் யோசித்த அவள் பயமின்றி அவருடன் சென்று அவரது கேள்விகளுக்கு பதில் அளிக்கிறாள். திடீரென வைரத்தைப் பற்றி விசாரிக்கிறார் போலீஸ்.

திகைத்த அட்சதாவிடமிருந்த லிப்ஸ்டிக்கை வாங்கி அதைத் திறக்க முயற்சிக்கிறார் போலீஸ் அதிகாரி. ஆனால் திறக்க முடியாமல் போகவே அதைத் திறக்க ஒரு நெம்பு நெம்புகிறார். உடனே தொம் என்ற சத்தத்துடன் அங்கிருந்த பொருள்களுடன் சேர்ந்து போலீசும் அட்சதாவும் பீஸ் பீஸாக சிதறினர்.

இந்நிலையில் லிப்ஸ்டிக்கைப் பரிசாகக் கொடுத்த மெலன் லீ தன்னை க்ளாரா என்று போலீசாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அட்சதாவைப் பற்றி சில உண்மைகள் சொல்கிறாள். போலீசாரிடம் வெடிகுண்டு இருக்க வாய்ப்பு இல்லாத நிலையில் உயர் அதிகாரிகள் அட்சதாவை மனித வெடிகுண்டாக முடிவு செய்கின்றனர்.

மேலும் அவளுடைய அண்ணன் தருணையும் சந்தேகித்த போலீசார் அவனையும் அடித்து உண்மையை வாங்க முயற்சிக்கின்றனர். போலீசாரின் மூர்க்கமான அடியின் விளைவாக உயிரிழக்கிறான் தருண். இதையெல்லாம் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார் ஹாங்காங்கின் புகழ்பெற்ற மரபியல் விஞ்ஞானியான சுமோ-லாய்.

அட்சதாவிடம் லிப்ஸ்டிக்கைக் கொடுத்து அவள் சாவிற்கு காரணமாக இருந்த க்ளாரா யார்..? மரபியல் விஞ்ஞானியான சுமோ-லாய்க்கும் அட்சதாவிற்கும் இடையே என்ன பகை..? உண்மையான குற்றவாளியைப் போலீஸ் நெருங்கியதா..? குற்றவாளிகளின் நோக்கம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #indian_enbathu_en_peru

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=177

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d