விவேக் ஸ்தலத்திற்குச் சென்ற போது கரிக்கட்டையாய் மாறி புகைந்து கொண்டிருந்தான் கல்லூரி மாணவன் எழில் செல்வன். போதையின் உச்சத்தில் இருந்த எழில் செல்வன் போதை தலைக்கேறி ட்ரான்ஸ்பார்மரில் ஏறியதில் ஷாக் அடித்து மரணம்.
சிட்டியில் கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தால் இப்படிப்பட்ட அசாதாரண மரணங்கள் அதிகரிப்பது வழக்கமாகி இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விசாரித்ததில் போதை மருந்து விற்பனையில் முக்கிய மந்திரி சம்பந்தப்பட்டிருப்பதை விவேக் அறிகிறான்.
விவேக் விசாரித்துக்கொண்டிருந்த நேரத்தில், மந்திரி அடைக்கலராஜ் தன்னுடைய டாக்டர் மகன் ஜோயலிடம் அன்றைய தினம் வரவிருந்த போதை மருந்து லிஸ்டைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேனில் பேஷண்டாக அவர்களுடைய ஆள் நடிக்க, கூடவே ஒரு நர்ஸுடன் அந்த வேன் ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களுக்கு போதை மருந்து சப்ளை செய்வது தான் இவர்களது வழக்கம்.
இந்தக் கடத்தல் விவகாரத்தில் ஆம்புலன்ஸில் ரெகுலராகச் சென்று வரும் நர்ஸ் அருணா தனக்கு திருமணம் நடக்கவிருப்பதால் வேலையை விட்டு நிற்கப் போவதாக ஜோயலிடம் சொல்கிறாள். வெளியே சென்றால் அருணா மூலமாக இவர்களது நிழலான காரியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிந்து விடக்கூடும் என்ற காரணத்தால் இந்தப் பயணத்தின் முடிவில் அவளைத் தீர்த்துக்கட்ட அடைக்கலராஜ் முடிவு செய்கிறார்.
இந்தத் தகவலறிந்த வேன் டிரைவர் வேலப்பன் மந்திரியின் சுயரூபத்தை அருணாவிற்குத் தெரிவிக்கிறார். மேலும் இவர்களது போதை மருந்து கடத்தலைப் பற்றி விவேக்கிற்குத் துப்புக் கொடுக்கிறார். அன்றைய இரவில் போலீஸ் தானாகவே வேனை மடக்குவது போல் வேலப்பனுக்குத் திட்டம் போட்டு கொடுத்தான் விவேக்.
வழியில் ஆம்புலன்ஸ் வேனுக்காக விவேக்கும் கோகுல்நாத்தும் காத்திருக்க, நேரம் கரைந்து கொண்டே இருந்ததே தவிர வேனைக் காணவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வேன் வராததன் காரணம் என்ன..? வேலப்பன் அப்ரூவராக மாறிய விஷயத்தை மந்திரி கண்டுபிடித்துவிட்டாரா..? மந்திரியால் வேலப்பனுக்கும் அருணாவிற்கும் ஆபத்து ஏற்பட்டதா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #abayam_abaayam_aruna
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=330
Leave a Reply