சொர்க்கத்தின் சாவி – Crime Novel

பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கவிருந்த கல்ச்சுரல் ப்ரோக்ராம்மில் பங்கேற்க ஒரு மாதம் இருந்த நிலையில் தயாராகிக்கொண்டிருந்தாள் பிரபல டான்சரான சமுத்திரா. அவளை சந்திக்க ஒரு கடிதத்துடன் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷனர் வகுளாம்பரன்.

அந்தக் கடிதத்தில் சமுத்திரா கல்ச்சுரல் ப்ரோகிராம்மை புறக்கணிக்க வேண்டுமெனவும்,  மீறி கராச்சி சென்றால் இரண்டு கால்களையும் இழக்க நேரிடும் என லிட்டில் டெவில்ஸ் என்ற தீவிரவாத அமைப்பு அவளை எச்சரித்திருந்தது.

மிரட்டல் கடிதத்தைப் பொருட்படுத்தாமல்  ப்ரோக்ராம்மில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தாள் சமுத்திரா. தக்க ஏற்பாடுகளுடன் பாதுகாப்பாக சென்று வருவதற்கான திட்டத்தை முன்கூட்டியே கமிஷனரிடம் தெரிவிக்கிறாள்.

இந்நிலையில் இந்திய உளவுத்துறையில் இருந்து பாகிஸ்தானைப் பற்றிய ஒரு செய்தி ரகசியமாக வந்து சேர்கிறது. அதில் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுப்பதற்காக பேரடைஸ் கீ எனப்படும் ஒருவகையான லைட்டனிங் பாமை உபயோகிக்கப்போவதாகத் தகவல்.

பாகிஸ்தானின் திட்டத்தை முறியடிக்க தாய்நாட்டை வெறித்தனமாக நேசிக்கும் 6 விமானப்படை வீரர்களை மனித வெடிகுண்டாக மாற்றி அந்தத் திட்டத்தைத் தகர்க்க முடிவாகிறது. இந்தத் திட்டத்தை மைக்ரோ ரிசீவரில் ஒட்டுக்கேட்டு அறிந்துகொண்ட லிட்டில் டெவில்ஸ் தீவிரவாத அமைப்பு மனித வெடிகுண்டாக மாற இருக்கும் வீரர்களை கொலை செய்கிறது.

நிலைமை இவ்வாறிருக்க எச்சரிக்கையை மீறிய சமுத்திராவால் பாதுகாப்பாக கராச்சி செல்ல முடிந்ததா..? லிட்டில் டெவில்ஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் உதவுவது யார்..? பேரடைஸ் கீ பாமை இந்தியாவால் அழிக்க முடிந்ததா..? இந்திய அரசாங்கத்துடன் நேரிடையாக மோதும் ஒரு தீவிரவாத அமைப்பு சமுத்திராவை டார்கெட் செய்வது ஏன்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sorkkatthin_saavi

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=171

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d