சாரதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய மருதநாயகம் இரவு பத்தரை மணிக்கு வீட்டை அடைந்தார். வாசலிலேயே அவருடைய மனைவி ஜானகி கோபத்தில் காத்திருந்தாள்.
சாரதாவின் மேல் உள்ள ஆசையால் அவளுக்கு பங்களா வாங்கிக் கொடுத்து தனியாக வைத்திருந்தார் மருதநாயகம். அன்றைக்கு சாயந்திரம் ஜானகியின் உத்தரவின் பேரில் இருவரும் படத்திற்குச் செல்ல இருந்தனர். அதனால் அன்று சாரதாவை சந்திக்க வர முடியாததை முன்னமே அவளிடம் சொல்லிவிட்டார்.
திடீரென எதிர்வீட்டுப் பெண் ஜானகியை மாங்கல்ய பூஜைக்கு அழைத்துவிட்டுச் செல்ல அங்கு செல்ல முடிவெடுக்கிறாள். தனக்கு கிடைத்த நேரத்தை வீணாக்க விரும்பாத மருதநாயகம் சாரதாவை சந்திக்கச் செல்கிறார்.
அங்கே வீட்டிற்குள் நுழையுமுன் ஒரு ஆணின் குரல் கேட்க, அப்படியே வெளியே நின்றுவிடுகிறார் மருதநாயகம். இந்நிலையில் மருதநாயகம் வந்திருப்பதை அறிந்த அவன் பின்வாசல் வழியாகத் தப்பிச் செல்கிறான்.
தப்பி ஓடியவனைப் பற்றி சாரதாவிடம் விசாரிக்கிறார் மருதநாயகம். தன்னுடைய கேள்விகளுக்கு ஏறுமாறாக பதில் சொல்லிய சாரதாவைப் பிடித்துத் தள்ளிவிடுகிறார் மருதநாயகம். சுவரில் சாரதாவின் தலை மோதிய உடனே தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிய இறக்கிறாள் சாரதா.
பதறிய மருதநாயகம் சாரதா வீட்டில் தன்னுடைய தடயத்தை ஒவ்வொன்றாக அழித்துவிட்டு போலீசிடம் இருந்து தப்பிக்க நினைக்கிறார். ஆனால் அடுத்த நாளே மர்ம நபர் ஒருவன் போன் செய்து மருதநாயகத்தை மிரட்டுகிறான். சாரதாவுக்கு வேண்டியவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நேரில் சந்திக்க அழைக்கிறான்.
மருதநாயகத்தை சந்திக்க வரும் மர்ம நபர் யார்..? குற்றம் செய்த மருதநாயகம் போலீசில் சிக்கினாரா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #june_july_aaa
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=367
Leave a Reply