வளைவுகள் அபாயம் – Crime Novel

தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாகச் சொல்லி சத்யேஷிடம் உதவி கேட்டு வருகிறாள் சுகிர்தா. சத்யேஷ் தற்காப்புக் கலை நிபுணன். மேலும் சிறுவர்களுக்கான தற்காப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருபவன். சூரத் சத்யேஷின் உதவியாளன்.

தன்னுடைய பயிற்சி மையத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உதவ மறுத்துவிடுகிறான் சத்யேஷ். ஆனால் சுகிர்தா அவனை சந்தித்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே சத்யேஷிற்கு ஒரு மிரட்டல் பேர்வழி போன் செய்கிறான்.

சுகிர்தா விஷயத்தில் ஒதுங்கி இருக்குமாறு சத்யேஷை மிரட்டுகிறான் அவன். அதன்பிறகு யோசித்த சத்யேஷ் சுகிர்தாவை தன்னுடைய பயிற்சியில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்கிறான். இதனிடையே தன்னுடைய மகளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையைப் பற்றி தகவல் சேகரித்துத் தருமாறு பகுதி நேர டிடெக்ட்டிவான சத்யேஷிடம் உதவி கோரி வருகிறார் மங்களம்.

மங்களத்தின் மாப்பிள்ளையான நந்தகுமாரைப் பற்றி விசாரிப்பதற்காக அவனுடைய ஹோட்டலுக்குச் செல்கின்றனர் சத்யேஷும் சூரத்தும். ஆனால் அங்கே திடுக்கிடும் திருப்பமாக நந்தகுமார் கொலை செய்யப்பட்டிருக்க அவனுடைய அறையில் சுகிர்தாவின் மோதிரம் கிடைக்கிறது.

சுகிர்தாவிடம் இதைப் பற்றி சத்யேஷும் சூரத்தும் விசாரிக்க இருந்த நிலையில் இருவரையும் போலீஸ் கைது செய்கிறது. காரணம் நந்தகுமாரைக் கொலை செய்யப் பயன்படுத்திய ரத்தம் தோய்ந்த சுத்தியல் சத்யேஷின் பயிற்சிப் பள்ளியில் போலீசிற்கு கிடைக்கிறது.

நந்தகுமாரைக் கொலை செய்தது யார்..? சுகிர்தா தற்காப்பு கலை கற்றுக்கொள்ள வந்ததன் காரணம் என்ன..? நந்தகுமார் கொலை செய்யப்பட்ட இடத்தில் சுகிர்தா என்ன செய்துகொண்டிருந்தாள்..? கொலை ஆயுதத்தை சத்யேஷின் இடத்தில் வைத்தது சுகிர்தாவா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #valaivugal_abaayam

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=330

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d