நயாகரா புயல் – Crime Novel

நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக விவேக்-ரூபலா இருவரும் கனடாவில் உள்ள விண்ட்ஸர் சிட்டி ஏர்போர்ட்டிற்கு வருகின்றனர். அவர்களை ரிஸீவ் பண்ணுவதற்காக விவேக்கின் நண்பன் தமிழ்மணி ஏர்போர்ட்டில் காத்திருக்கிறான்.

விவேக் ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவனுக்காக ஒரு கேஸ் கனடாவில் காத்துக்கொண்டிருந்தது. மூவரும் காரில் பயணித்துக்கொண்டிருக்க வழியில் ஒரு ஃபாதர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

அவரைக் காப்பாற்றி ஹாஸ்பிடலைஸ் பண்ணுவதற்குள் அவர் உயிரிழக்கிறார். போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஃபாதர் இல்லை என்பதும், அவன் தேடப்பட்டு வரும் தூக்குத்தண்டனைக் கைதி மிராண்டோ என்ற விஷயமும் விவேக்கிற்குத் தெரியவருகிறது.

பிறகு ஒருவாறாக விவேக்-ரூபலா-தமிழ்மணி மூவரும் ஹோட்டல் ரூமை வந்தடைகின்றனர். தமிழ்மணி இருந்த அறைக்குள் நுழைந்த ஒருவன் மிராண்டோ இவர்களிடம் என்ன கூறினான்..? என்று கேட்டு மிரட்டுகிறான்.

ஹாஸ்பிடலைஸ் பண்ணுவதற்குள் மிராண்டோ உயிரிழந்ததை வந்தவன் நம்பவில்லை. அவன் தமிழ்மணியைக் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு ரூமை விட்டு வெளியேறுகிறான். அதே வேளையில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் மிரட்டியவனைக் கொலை செய்கிறான்.

இந்நிலையில் விவேக் கடத்தப்படுகிறான். எதிரிகள் மிகப்பெரிய சதி வேளையில் ஈடுபடப் போவதை அறிந்த விவேக் அதை எவ்வாறு தடுத்து நிறுத்தினான் என்பதை விறுவிறுப்புடனும் அடுத்தடுத்த திருப்பங்களுடனும் நம்மை நகர்த்திச் செல்லும்  நயாகரா புயல்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajehskumar #nayakara_puyal

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=1434

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d