அருகில் ஒரு நரகம் – Crime Novel

தன்னுடைய தம்பி சத்தியமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான அகிலாவையும் அவளுடைய கணவன் யோகேஸ்வரனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான் பரமேஷ். கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலா-யோகேஸ்வரன் வரவிருக்கும் வழியில் சாலையில் காத்திருக்கின்றனர் பரமேஷும் அவனுடைய நண்பர்களும்.

சத்தியமூர்த்தியைக் காதலித்துக்கொண்டிருந்த அகிலா, பணக்காரனான யோகேஸ்வரன் கிடைக்கவும் அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அகிலா கிடைக்காத காரணத்தால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான் சத்தியமூர்த்தி.

மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் கிரைம் பிரான்ச் ஆபீஸரான அசோக் நிறைமாத கர்ப்பிணியான தன்னுடைய மனைவி முக்தாவுடன் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

அசோக்-முக்தாவின் கார் பரமேஷையும் அவனுடைய நண்பர்களையும் கடந்து சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அகிலாவின் கார் வருகிறது. காரில் இருந்து இறங்கிய அவர்களை கத்தியைக் காட்டி மிரட்ட இருவரும் உயிருக்கு பயந்து தலைதெறிக்க ஓடுகின்றனர்.

சாயந்திர நேர இருட்டில் மழை கொட்டிக்கொண்டிருக்க, முதலில் அகிலாவைக் கொலை செய்த அவர்கள் தப்பித்து ஓடிய யோகேஸ்வரனையும் குத்திக் கொலை செய்கின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த முக்தாவின் அம்மா சாரதாமணி ஜன்னல் வழியாக மின்னல் வெளிச்சத்தில் கொலையைப் பார்த்துவிடுகிறாள்.

கொலைகாரர்கள் நால்வரும் அந்த வீட்டிற்கு வர, தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சாராதமணி டீச்சர் அங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான் பரமேஷ். நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியே மூச்சுக் காட்டக் கூடாது என்று மிரட்டி, மீறி வெளியே சொன்னால் மகளையும் மருமகனையும் கொன்று விடுவதாகவும் எச்சரித்துச் செல்கிறான்.

அன்று வீடு திரும்பிய அசோக்-முக்தா இருவரும் சாரதாமணி எதையோ மறைப்பதை உணர்கின்றனர். உண்மையை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு நாடகத்திற்கு திட்டம் போட, கொலைகாரர்கள் பிடிபட்டனரா..? சாரதாமணியிடம் இருந்து உண்மையை அறிய முடிந்ததா..? பரமேஷின் நிலை என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #arugil_oru_naragam

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=372

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d