சத்யாவின் சபதம் – Crime Novel

பத்ரியும் வகுளாவும் முகநூல் நண்பர்கள். இரண்டு வருடங்களாக முகநூலில் மட்டுமே பேசி வந்த பத்ரி திடீர் சர்ப்ரைஸாக வகுளாவை சந்திக்க நேரில் வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத வகுளா அதிர்ச்சி அடைந்து பின் சந்தோஷமடைகிறாள். பத்ரி வீட்டிற்கு வந்த நேரம் சாயங்கால வேளை, அதுமட்டுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்த போது அவள் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தாள்.

மேலும் வகுளாவின் அண்ணா நவீன் இரவு 8 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். பேசிக்கொண்டே இருந்த பத்ரி அவளை விரும்புவதாகக் கூற, கோபமடைந்த வகுளா அவனை வீட்டை விட்டு கிளம்பச் சொல்கிறாள். தனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருப்பதை பத்ரியிடம் கூறிய வகுளா, திருமணத்திற்கு நாள் குறிப்பதற்காக தன்னுடைய பெற்றோர்கள் சென்றிருப்பதை கூறுகிறாள்.

நல்ல நண்பனாக மட்டுமே அவனைப் பார்த்ததாக சொல்லிய அவள், தன்னுடைய முகநூல் பக்கத்தையே அழிக்கச் செல்கிறாள். வகுளாவைத் தடுக்க அவளுடைய கையைப் பிடிக்கிறான் பத்ரி. உச்சபட்ச கோபம் தலைக்கேற அங்கிருந்த டிக்ஷனரியை எடுத்து பத்ரியின் முகத்தில் அடிக்க, நிலை தடுமாறி கீழே விழுந்த அவன் ஸ்பாட்டிலேயே உயிரிழக்கிறான்.

திகைத்த வகுளா என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறாள். வீட்டிற்கு வந்த அவளுடைய அண்ணனிடம் உண்மையைக் கூற இருவரும் சேர்ந்து பாடியை அப்புறப்படுத்த திட்டம் போடுகின்றனர். நண்பனின் காரில் பத்ரியின் உயிரற்ற உடலை போட்டுக்கொண்டு ஆள் நடமாட்டமற்ற சாலையில் வேகமாகச் செல்கிறான்.

வழியில் போலீஸ் சோதனை நடந்துகொண்டிருக்க பாதி வழியிலேயே பாடியை போட்டு விட்டு வந்துவிடுகிறான். அடுத்த நாள் பஸ் ஸ்டாப் அருகில் கிடைத்த அடையாளம் தெரியாத நபரின்  உடலில் உயிர் இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அந்த நபரைக் காப்பாற்றியதாகவும் வந்த செய்தியைப் பார்த்த வகுளாவும் நவீனும் அதிர்ந்தனர்.

ஆனால் அதற்கடுத்த நாளே பத்ரி ஹாஸ்பிடலில் உயிரிழக்க அவனுடைய கையில் சத்யாவின் சபதம் என யாரோ எழுதியிருந்தனர். பத்ரியின் மரணத்திற்கு யார் காரணம்..? யார் அந்த சத்யா..? வகுளாவும் நவீனும் போலீசிடம் இருந்து தப்பினரா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sathyavin_sabatham

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=1348

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d