போகப் போகத் தெரியும் – Crime Novel

சொந்த கிராமமான தாழையூருக்கு நண்பன் ரவிச்சந்திரனையும் விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறான் விநோத். தாழையூரில் உள்ள விநோத்தின் மாமா சோமநாத குருக்கள் வீட்டிற்கு இருவரும் செல்கின்றனர். கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட இருவரும் டாக்ஸியில் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர்.

அப்போது அதே டாக்ஸியில் உடன் வந்த பெரியவர் தாழையூரைப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறுகிறார். இரவு நேரங்களில் வழியில் உள்ள ஆற்றங்கரை கோவில் அருகில் காத்து கறுப்பு நடமாட்டம் இருப்பதை பெரியவரின் மூலம் அறிகின்றனர்.

நிறைவேறாத ஆசைகளால் துர் மரணம் அடைந்தவர்களின் ஆவி இரவு நேரங்களில் ஆற்றங்கரையோரம் உலவி வருவதாகவும் அந்த வழியில் வருபவர்களை ஆவி அடித்துவிடுவதையும் அறிந்த இருவரும் திகிலுடன் கிராமத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

ஒருவழியாக ஆற்றங்கரையை அடைந்த விநோத்தும் ரவிச்சந்திரனும் கோவிலுக்கு அருகில் இருந்து ஒரு வெள்ளை வெளிச்சம் மெதுமெதுவாக தங்களை நோக்கி வருவதைக் கலக்கத்துடன் பார்க்கின்றனர். அரிக்கன் விளக்குடன் வந்த அந்த உருவம் தங்களுடன் வண்டியில் பயணித்த அதே பெரியவர் என்பதை அறிந்த இருவரும் வீட்டை நோக்கி ஓட்டம் எடுக்கின்றனர்.

விடிந்ததும் தாங்கள் கண்டது நிஜமா..? இல்லை பயத்தில் தங்களுக்கு அந்தப் பெரியவர் உருவம் தெரிந்ததா..? என இருவரும் விவாதம் செய்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பார்த்த அந்த வயதான உருவத்தைப் பற்றியும் அவரின் வரலாறு பற்றியும் சோமநாத குருக்களிடம் இருவரும் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர்.

அந்தக் காலத்தில் வாழ்ந்த சோழராஜனும், அவனுடைய அமைச்சரான பிரம்மேந்திரனும் விறுவிறுப்பான நிமிடங்களுக்கு நம்மைக் கடத்திச் செல்கின்றனர். மேலும் அப்போது ஆற்றங்கரை கோவிலில் புதையுண்ட புதையலை அந்த இரண்டு ஆவிகளும் பாதுகாக்க..?! போகப் போகத் தெரியும் இந்த ஆவிகளின் நோக்கம்..!

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #poga_poga_theriyum

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=365

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d