விலையாக ஒரு கொலை – Crime Novel

தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள்.

அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த  தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டவன். சான்ஸுக்காக நிறைய டைரக்டர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தான் முரளி.

அனுவின் அப்பா இரவு அவசர வேலையாக கம்பனிக்கு சென்றிருந்ததால், அவளுடைய சித்தி சரளா மட்டும் அவளுடைய அறையில் இருந்தாள். இந்நிலையில் ஒருநாள் இரவு தூக்கம் வராததால் படுக்கையில் புரண்டுகொண்டிருந்த அனு, ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதற்காக எழுந்தாள். அங்கே முரளி தன்னுடைய வீட்டைப் பூட்டிக்கொண்டு இவர்களுடைய வீட்டுக்குள் குதிப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள்.

மேற்கொண்டு அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்துகொள்ள, ஹாலில் வந்து காத்திருக்கிறாள் அனு. வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்த முரளி நேராக சித்தியின் அறைக்குள் செல்கிறான். உள்ளே இருவரும் கொஞ்சிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட அனு உறைந்து போகிறாள்.

அடுத்து வந்த நாட்களில் தன்னுடைய சித்தி சரளாவிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்ட அனு, சரளா இல்லாத நேரம் பார்த்து சித்தியை விட்டு விலகி இருக்குமாறு முரளியை கண்டிக்கிறாள். பேச்சு முற்றி அனுவை அறைந்து விடுகிறான் முரளி. இதையறிந்த மோகன் கொதித்தெழுகிறான்.

மேலும் பார்க்கில் இருந்த அனுவையும் மோகனையும் ஒன்றாகப் பார்த்த முரளி அவர்களிடம் வம்பிழுக்கிறான். சண்டையில் மோகனை மோசமாகத் தாக்குகிறான் முரளி. ஒருவார ஓய்விற்குப் பிறகு வேலை விஷயமாக மோகன் ஹைதராபாத் சென்றுவிடுகிறான்.

இந்நிலையில் திடீரென ஒருநாள் அனுவின் வீட்டிற்கு வருகிறது போலீஸ். எதிர்வீட்டில் குடியிருந்த முரளியை யாரோ சுட்டுக் கொலைசெய்து தோப்பில் முரளியின் பிணம் கிடைத்திருப்பதாகத் திடுக்கிடும் தகவல் வருகிறது. கேசின் ஒவ்வொரு நூலாகப் பிடித்து கடைசியில் அனுவின் வீட்டிற்கு வந்து நிற்கிறார்கள் விவேக்கும் கோகுல்நாத்தும். குற்றவாளி யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vilaiyaaga_oru_kolai

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=590

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d