மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ்.
தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம் பிடிபடுகின்றனர். எப்படியோ இன்ஸ்பெக்டரிடம் பேரம் பேசி பிணத்தை இருவருமாக சேர்ந்து மில்லில் உள்ள பாய்லரில் போட்டு பஸ்பமாக்குகின்றனர்.
வீட்டிற்குத் திரும்பிய மோகன்ராஜிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மகள் சில்பா கர்ப்பமாக இருப்பதாக சொல்லிய குடும்ப டாக்டர் அவளை விசாரிக்கச் சொல்லிவிட்டு செல்கிறார். இடிந்து போன மோகன்ராஜிடம் தான் விக்னேஷை காதலிக்கும் விஷயத்தைச் சொல்கிறாள் சில்பா.
மகளின் காதலுக்கு ஒப்புக்கொண்டது போல் நடிக்கிறார் அவர். மேலும் விக்னேஷை அழைத்து வர சொல்கிறார். சந்தோசத்துடன் சில்பா வீட்டிலிருந்து கிளம்ப, அவளுடைய கர்ப்பத்தைக் கலைக்கத் திட்டம் போடுகிறார்.
இந்நிலையில் பேரம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்து அவரை கதி கலங்க வைக்கிறார். புதிதாக வந்த டிஎஸ்பி சத்தியநாதனுக்கு இவர்கள் காரில் பிணத்தை கொண்டு சென்றது தெரிந்துவிட்டதாகக் கூறிய அவர் மோகன்ராஜை எச்சரித்துச் சென்றார்.
ஒரு பக்கம் மகளின் கர்ப்பம் இன்னொரு பக்கம் நேர்மையான போலீஸ் அதிகாரி என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் மோகன்ராஜ். அவர் எதிர்பார்த்த படி டிஎஸ்பி பணத்துக்கு மசிந்தாரா..? விக்னேஷைத் தேடிச் சென்ற சில்பாவின் நிலை என்ன..? உண்மை வெளியே வந்ததா..?
#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #august_adhirchi
want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=620
Leave a Reply