ஊதா நிற தேவதை – Crime Novel

சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான்.

தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத் தேடித் தருமாறு கமிஷனரிடம் உதவி கேட்கிறார் பெருமாள் நம்பி.

முதலில் ஹரிணியைப் பற்றித் தெரிந்துகொள்வோம்..ஒரு பிரபல ஹோட்டலில் ரிசெப்ஷனிஸ்ட்டாக வேலை செய்துவரும் ஹரிணிக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை..தனியாக ஒரு வீட்டில் தன்னுடைய நாய் சாம் உடன் வசித்து வருகிறாள் அவள்.

பவித்ரா காணாமல் போன அன்று அவள் ஹரிணியுடன் பேசிக்கொண்டிருந்ததை விசாரணையில் போலீஸ் ஆபீஸரான அபிலாஷ் கண்டுபிடிக்கிறான். அடுத்ததாக ஹரிணி வேலை செய்து கொண்டிருந்த ஹோட்டலில் தங்குவதற்கு வருகிறான் பிலிப்ஸ். அவசரமாக ரூம் கேட்ட அவன் ஹரிணியிடம் தவறாக பேசி அவளிடம் தகராறு செய்கிறான்.

ஒருவழியாக அவன் ரூமிற்குச் சென்று விடுகிறான். அன்றைய நாள் இரவு ஹரிணியின் வீட்டுக் கதவை யாரோ தட்ட கதவைத் திறந்த ஹரிணி சற்று திகைத்துப் பின் நிதானிக்கிறாள். வெளியே பிலிப்ஸ் நின்றிருக்க அவனுக்கு உள்ளே வழிவிடுகிறாள்.

அவளிடம் பேசிய பிலிப்ஸ் அன்றிரவு அவளுடன் தங்குவதற்கு விலை பேசுகிறான். ஹரிணியும் ஒத்துக்கொண்டு தயாராகிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அறைக்குள்ளே செல்கிறாள். அதற்குள் அங்கிருந்த பிரிட்ஜைத் திறந்து பார்த்த பிலிப்ஸ் திடுக்கிட்டான். பிரிட்ஜ்ஜில் பாதி வெட்டப்பட்ட நிலையில் மனிதக் கைகால்கள் இருக்க, அப்படியே பின்வாங்குகிறான் அவன்.

அதற்குள் அங்கு ஹரிணி வந்துவிட..பிலிப்ஸ் உயிருடன் தப்பித்தானா..? பிரிட்ஜ்ஜில் இருந்த கைகால்கள் யாருடையது..? யார் இந்த ஹரிணி..? பவித்ராவும் காந்தனும் எங்கே..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #oodha_nira_devathai

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=365

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d