வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் – Crime Novel

தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது.

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து கேட்டு வந்திருந்தான் சிவா.

பெஸ்ட் தம்பதிகள் என்று பெயர் எடுத்திருந்த சிவா-புனிதாவை எண்ணி வருந்திய கிருஷ்ணகுமார் தான் புனிதாவிடம் பேசுவதாகக் கூறி பெங்களூர் செல்கிறான். பெங்களூர் சென்றதில் இருந்து கிருஷ்ணகுமாருக்கு வேண்டிய உதவிகளை செய்கிறான் டாக்ஸி டிரைவரான கோபால்.

சிவாவின் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணகுமாருக்கு புனிதாவின் மேல் எந்தத் தப்பும் தெரியவில்லை. மேற்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பினான் அவன். ஆனால், எதிர்பாராத விதமாக கிருஷ்ணகுமாரின் குணம் தெரியாமல் பெண்களின் ஆல்பத்துடன் வருகிறான் ஹோட்டல் ஆள்.

அவனை அடித்து விரட்டிய கிருஷ்ணகுமார் போட்டோக்களை பிடுங்கி எரிய புனிதாவின் போட்டோ அவனுடைய கண்ணில் படுகிறது. ஒருவழியாக ஹோட்டல் ஆளிடம் சமாளித்த கிருஷ்ணகுமார் போட்டோவில் இருந்த புனிதாவை கேட்கிறான். அதேபோல் புனிதா இருந்த அறைக்குள் சென்ற கிருஷ்ணகுமார் அவளை நாக்கை பிடுங்குகிற மாதிரி கேள்வி கேட்டுவிட்டு வெளியே வருகிறான்.

இதற்கிடையே ஹோட்டல் ஆள் கிருஷ்ணகுமாரிடம் தகராறு செய்கிறான். கத்தியை எடுத்துக்கொண்ட அந்த ஆள் கிருஷ்ணகுமாரை நோக்கி வர இடையே புகுந்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறான் டாக்ஸி டிரைவரான கோபால். ஹாஸ்பிடலில் கடைசி நிமிடத்தில் இருந்த கோபால் தாயை இழந்த தன்னுடைய குழந்தை கல்யாணியை கடைசியாகப் பார்க்க விரும்பினான்.

கோபாலின் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணகுமார் மாலை போடப்பட்ட நிலையில் இருந்த லதிகாவின் போட்டோவைப் பார்த்து திகைத்தான். மேற்கொண்டு கோபாலிடம் விசாரிப்பதற்குள் அவன் இறந்துவிட, மனதில் ஏகப்பட்ட குழப்பத்துடன் கல்யாணியை உடன் அழைத்துக்கொண்டு ஊருக்குச் செல்கிறான் கிருஷ்ணகுமார்.

சாயம் வெளுத்துப்போன புனிதாவின் நிலை என்ன..? போட்டோவில் இருந்த பெண் லதிகாவா..? குழந்தை கல்யாணியின் உண்மையான தாய் யார்..? லதிகாவின் இருண்ட பக்கங்கள் என்ன..? கேள்விகளுடன் இருந்த கிருஷ்ணகுமாருடன் நாமும் சேர்ந்து பயணிப்போம்.

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #vellai_niratthil_oru_vaanavil

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=613

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d