வணக்கம் நண்பர்களே..
நான் தான் உங்க “நண்பன்” பேசறேன்.
என்னடா இது? யாருனே தெரியாது நம்ம நண்பன்னு சொல்றாங்கனு பாக்கறிங்களா?
அட நான் தான்பா, “புத்தகம்” பேசறேன்.
அதெப்படி, புத்தகம் பேசும்னு நீங்க யோசிக்கறது எனக்கு புரியுது.
நம்ம அப்துல் கலாம் ஐயாவே சொல்லிருக்காரே,
“புத்தகங்களே சிறந்த நண்பர்கள்”னு..
அதனால தான் நானும், உங்க நண்பன்னு சொல்ல வந்தேன்.
இந்த வார்த்தைகளிலிருந்து உருவானது தான் இந்த வலைப்பூ.
சொல்லப் போனா வாசிப்புப் பழக்கமே நம்ம கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிட்டு வருது. நல்ல நூல்கள் ஒருவனை மனிதனாக மட்டுமல்ல, மகாத்மாவாகவே மாற்றிவிடக்கூடும்.
“புதிய புத்தகங்களின் வரவும், புத்தகத் திருவிழா பற்றிய தகவல்களும் உடனுக்குடன் இவ்வலைப்பூவில் வலம் வரவிருக்கின்றன”. உங்கள் மேலான ஆதரவை நாடும்..
-புத்தகம்.