கோவிந்தராஜ உடையாரிடம் ஒண்டிப்பிழைக்க வந்தவள் சிந்தாமணி. உடையாரின் மனைவி திரௌபதியையும் புத்தி சுவாதீனமில்லாத மகன் வேலப்பனையும் விரட்டிவிட்டாள். உடையார் இறப்பதற்கு முன் அவருடைய மொத்த சொத்துக்களையும் தன்பேரில் எழுதி வாங்கிக்கொண்டாள் சிந்தாமணி. பரம்பரை சொத்தான பொட்டல் காட்டை மட்டும் திரௌபதியின் பேரில் எழுதிவிட்டாள் சிந்தாமணி. நடப்பது எதையும் கண்டும் காணாமல் இருந்த ஊர்மக்களால், திரௌபதியையும் வேலப்பனையும் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. கருநாகங்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பொட்டல்வெளியில் இருந்தது ஒரு சிவன் கோவில். இடிந்த சிவன்... Continue Reading →
மரகத லிங்கம்
மரகத லிங்கம் ஒரு காலத்தில் சிவன்குடியின் செழிப்பிற்கும் வனப்பிற்கும் காரணமாக இருந்தது. உச்சிப் பொழுதில் மரகத லிங்கத்தைப் பார்க்கும் போது மனித மனதின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது அந்த ஊரின் ஐதீகமாக இருந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த லிங்கம் ஒருநாள் திடீரென களவு போனது. அந்நாளில் இருந்து சிவன்குடி பொலிவிழந்து களையிழந்து தன் மக்களையும் இழந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இன்று அந்தப் பழம்பெருமை வாய்ந்த பாழடைந்த சிவன்குடி சிவன் கோவிலை சீர்செய்ய ஒருவன் வருகிறான்.... Continue Reading →
விட்டுவிடு கருப்பா
சாதாரணமாக அடிக்க முடியாத கருப்பு கோயில் மணி அந்த நடுராத்திரியில் அடிக்க ஊரே திரண்டு சென்று பார்த்தால், அங்கே தலை வேறு முண்டம் வேறாக வெட்டுப்பட்டு கிடக்கிறான் ஊர்க்காவலன் வீரபாகுவின் மகன் நாச்சிமுத்து. அதேவேளையில் ஊரே கொள்ளை போகிறது. முக்கியமாக ஊரில் மதிப்புமிக்க தேவரின் வீட்டிலும் கொள்ளைக்காரர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்ட, முதல் முறையாக அந்த கிராமத்திற்கு போலீஸ் வருகிறது. இந்நிலையில் அரவிந்த் உடனான தன் காதலுக்கு கருப்பு சாமியிடம் சம்மதம் வாங்க தோட்டக்கார மங்கலத்திற்கு வருகிறாள்... Continue Reading →
ருத்ரவீணை
“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” அன்று! 300 வருடங்களுக்கு முன்பு..கண்களில் தேஜஸ், தளர்ந்த நடை, தோளில் சுமை, அதில் பெருமை வாய்ந்த வீணையுடன் தஞ்சாவூர் வீதிகளில் தோடிபுரத்திற்கு வழிதேடி அந்த இஸ்லாமியர் அலைந்து கொண்டிருந்தார். நாத அதிபதி தோடீஸ்வரன் குடிகொண்டிருக்கும் வறண்ட பூமியாக இருந்த தோடிபுரத்தை வந்தடைந்த அந்த மாயாஜால மனிதரை அனைவரும் பாபா என்றழைத்தனர். அவர் சுமந்துவந்த வீணை சாதாரண வீணை அல்ல, அந்தப் பரமனே தனது இணையான உமையை வைத்து உருவாக்கிய... Continue Reading →