சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →
அப்பா வேலை..!
இதுவரை எத்தனை சீரியல்களில் அவர் கேரக்டர் கொல்லப்பட்டது என்பது கோவிந்தராஜிற்கே தெரியாது. குறைந்தது 15 சீரியல்களிலாவது அவர் இறந்திருப்பார். இந்த சீரியலிலும் கோவிந்தராஜ் சாவதற்கு தேதி குறித்து விட்டார்கள். ஆம்...இளவயதில் கிடைத்த டாக்டர், வக்கீல், போலீஸ் என்று நடித்துக்கொண்டிருந்த வேஷங்கள் எல்லாம் இப்போது அவரை விட்டு தூர சென்று விட்டிருந்தன. இப்போதெல்லாம் அவருக்கு அப்பா வேடங்கள் மட்டுமே வருகின்றன. காலத்திற்கேற்ப கோவிந்தராஜின் சீரியல் வேடங்களும் வேகமாக மாறிவந்தன. இதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், “மரணம்..” அனைவருக்கும் சகிக்க... Continue Reading →
சாமி & கோ
20 ஆம் நூற்றாண்டின் கடைசி சில ஆண்டுகள் தொழில்முறையிலும் தொழில்நுட்பத்திலும் அதிசயிக்கும்படி பல மாற்றங்களை அடைந்து வரும் ஆண்டு. இப்பேர்ப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அந்தச் சிறுவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. “அடேய் சம்முகா! மெய்யாலுந்தாண்டா, நாம இப்ப சாப்பிட்டுட்டு இருக்குற இந்த முட்டாயோட சவ்வு காகிதத்துல இருக்காரு பாரு இவரு...” என்றபடியே தன் கையிலுள்ள காகிதத்தை சண்முகம் முகத்தருகில் கொண்டு சென்றான் அஜ்மல். அதில் முகேஷ் கண்ணா ‘சக்திமானாக’ நெடிதுயர்ந்து நின்றிருந்தார். “இவரு தான்டா சக்திமான், இவர் தான்... Continue Reading →
யானை டாக்டர்
ஜன சந்தடி - இரைச்சல் - புகை - கண்கூசும் கண்ணாடி கட்டிடங்கள். உங்கள் பரபரப்பான நேரங்களின் போது தேநீர் இடைவெளியில் வாசிக்கும் நாளிதழில் ஏதோ ஒரு மூலையில் யானைகளைப் பற்றிய செய்திகளைப் படித்ததுண்டா..? கோவில் யானைகளைப் பற்றியோ, கும்கி யானைகளைப் பற்றியோ அல்ல. தென்னிந்திய அடர்வனங்களில் வாழும் காட்டு யானைகளைப் பற்றி என்றாவது படித்தது உண்டா..? சில நிமிடங்கள் தனிமையை உணர முயற்சியுங்கள்...அடுத்து வாசிக்கும் முன்... இயற்கைக்கே உரித்தான வாசனையும்..அழகிய சலனங்களால் ஆன நிசப்தமும்..சூரியனில் மிளிரும்... Continue Reading →
பெண்ணொன்று கண்டேன்..?!
மனிதன் இரசிக்கவே இரவுகள் பிறந்ததோ? அடடே..! எத்தனை அமைதி! இவ்வுலகிலும், என்னுள்ளத்திலும்! காரணம் அவள்தான். தொட்டிலில் படுத்துறங்கும் அளவிற்கு வயதில்லை. இருந்தும் தூக்கம் இல்லாமல் தடுமாறும் போதெல்லாம் தாலாட்டு பாடி கண்ணுறங்க செய்திருக்கிறாள். காலையில் தோன்றும் சூரியனை நான் கண்டதில்லை. காரணம், என்னை அவள் மடியில் இருந்து பிரிக்க அந்த சூரியனுக்கும் விருப்பமில்லை. முதலில் கண்ட முகமும் அவள்தான்; முதலில் நான் காணும் முகமும் அவள்தான். காணும் இடமெல்லாம் அவள் மட்டுமே தெரிந்தாள். நான் யாரென்று அவளிடம்... Continue Reading →
பட்டாம்பூச்சியின் தூது
அன்புள்ள வாசகர்களுக்கு, நீங்கள் நலமாக உள்ளீர்களா? நானும் நலம் தான். ‘நான் நலம்’ என்றாலே பலருக்கும் மனதில் இவன் நன்றாக இருக்கிறான் போல..?!! என்ற சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. நலம் என்பது மனதில் கிடைக்கின்ற நிரந்தரமற்ற திருப்திதானே தவிர அது ஒரு நபரின் வாழ்க்கையை குறிக்காது. இன்றைக்கு பல இளைஞர்கள், “நான் நலமாக உள்ளேன்” என்று சொல்லவே தயங்குகின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன - பலர் படிக்கின்ற காலத்தில் கவனம் சிதறி வாழ்க்கையை இழக்கின்றனர், பலர் என்ன... Continue Reading →
துளிர்
“இது எதிர்காலத்தின் கதை” “என்ன ஒரே நிசப்தமா இருக்குது?” என்று கூறிக்கொண்டே கண்களைத் திறந்தான். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே பழுப்பு நிறம் கொண்ட மேகங்களும் இருந்தது. அதைப் பார்த்த அவன், “ஓகோ மழை பெய்ய போகுதா, பெய்யட்டும் பெய்யட்டும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்தா சரி!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்த கையை அங்கும் இங்கும் துலாவினான். ஆனால், அவன் கையில் சிக்கியது வெறும் மண்ணே!! அதிர்ச்சியில் எழுந்து சுற்றிமுற்றி பார்த்த அவனுக்கு... Continue Reading →
ஆதலினால் கொலை செய்தேன்..!
உறவு என சொல்லிக்கொள்ள இந்த உலகில் யாருமில்லாத அவனிடம் ஒரு தேவதையாய் வந்து சேர்கிறாள், அதிஷா. துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் அவளைப் பலர் கற்பழித்துக் கொலை செய்ய, கொன்றவர்கள் பணம் கொடுத்து போலீசை சரிகட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த அவன் தன்னுடைய காதலியின் மரணத்திற்குப் பழிவாங்குதல் என்ற கோணத்தில் அமைந்த சிறுகதையே “ஆதலினால் கொலை செய்தேன்”. #one minute one book #tamil #book #review #short story #keeladi pathippagam #aadhalinal kolai seithen want to read... Continue Reading →
பெண்ணே உன் இந்நிலைக்கு, பெண்ணே நீயே காரணி
“களைகள் இல்லாமல் மூலிகை கூட கிடைக்காது..” என்ற இந்த வரிகளின் மூலமாக ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்ணியம் பேசியிருக்கிறார், எழுத்தாளர் வள்ளி மகன் மணிகண்டன். ஒரு பெண்ணை இன்னொரு பெண் பழிதீர்ப்பது நடப்பதும் இங்கேதான், அதேசமயம் ஒரு பெண்ணை பலவீனமாக்குவதும் இதே சமூகம்தான். ஒரு ஆணை நீ ஆம்பள சிங்கம் டா என்று சொல்லி வளர்க்கும் பெண்தான், பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அடுப்பங்கரையிலேயே தள்ளிவிடுகிறது. பெண் என்பவள் வலிமையானவள், அவளை மென்மையானவளாக மாற்றாமல் வரதட்சணைக் கொடுமை மற்றும்... Continue Reading →
கவனம்
விஐபி(வேலையில்லாப் பட்டதாரி)யாக இருந்த ஹரிக்கு தன்னுடைய ஜூனியர் அரவிந்தன் மூலமாக ஒரு வேலைக்கான இன்டர்வியூ வருகிறது. எப்போதுமே மொபைலிலேயே மூழ்கியிருக்கும் ஹரி இன்டர்வியூவில் ஏதோ பதிலளித்துவிட்டு ரெபெரன்ஸ்க்கு ஜூனியர் அரவிந்தன் பெயரை சொல்லிவிட்டு அவநம்பிக்கையோடு வெளியே வருகிறான். அரவிந்தன் அவனை சமாதானப்படுத்திவிட்டு காத்திருக்கச் சொல்லிவிட்டு சென்று வேலை உறுதியோடு வந்து மேலும் சிறிதுநேரம் காத்திருக்கச் சொல்கிறான். நீண்ட நேரமாக ஏசி குளிரிலேயே இருப்பதால் ரெஸ்ட்ரூம் செல்ல நினைத்து மொபைலைப் பார்த்துக் கொண்டே செல்ல..இங்கேதான் சனி வேலை செய்கிறது.... Continue Reading →
கையெழுத்து
அனைத்து இடங்களிலிருந்தும் குப்பையை அள்ளிச்செல்லும் குப்பை வண்டிக்காரர்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதே இக்கதை. வழக்கம்போல குப்பைவண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த சமயனை சண்டைக்கு இழுத்து அவன்மேல் புகார் கொடுத்து வேலையிலிருந்து அவனை நீக்குகிறார் பணபலம் படைத்த ஒருவர். சக மனிதனை மனிதனாகப் பார்க்காததன் விளைவே சமயனை இப்படியொரு சூழ்நிலைக்குத் தள்ளுகிறது. அதிகார வர்க்கத்தினரின் ஒரு கையெழுத்தினால் சாமானியன் ஒருவனுடைய தலையெழுத்தே மாறுவது தான் ஜெகன் அவர்களின் “கையெழுத்து”. #one minute one book #tamil #book #review... Continue Reading →
அப்பா
சின்ன வயசுல எல்லாப் பசங்களும் அப்பாவைத் தான் தங்களோட ஹீரோவா நினைப்பாங்க. வளர வளர அந்த எண்ணம் மாறியிருக்கலாம். ஆனா இந்தக் கதையில வர்ற பையனோட அப்பா பரீட்சையில ஃபெயில் ஆனதுக்காகத் தன்னோட மகன்னு கூடப் பாக்காம சாகச் சொல்லிருவாரு. சரி நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் சொல்லுவாங்கன்னு நம்பி அவங்களத் தேடிப் போனா ஃபெயிலான அவனை யாருமே மதிக்கல. இந்தச் சூழ்நிலையில தற்கொலை பண்ணிக்கப் போற அந்தப் பையனோட வாழ்க்கையில வர்ற திருப்பம் அவனோட வாழ்க்கையையே மாத்துது.... Continue Reading →
இலை
சிறுகதையாக இருந்தாலும் வாசிப்பவர்களுக்கு அது உற்சாகத்தைத் தருவதாக இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டே எழுத்தாளர் ஆர்.டி.கணேஷ் அவர்கள் வாயில்லா ஜீவன்களின் மீது அன்பு காட்டுவதற்குக் கல்வி அவசியமில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக வள்ளி கதாப்பாத்திரத்தை அழகாக வடித்துள்ளார். எடுத்துக்கொண்ட தலைப்பை ஒரு உயிருடன் ஒப்பிட்டு அவர் எழுதியிருப்பது இலையைப் படிப்பவர்களை மேலும் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது. கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து இலவசமாக இந்நூலை நீங்கள் வாசிக்கலாம். தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute... Continue Reading →