Come Back..

வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும். புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய முயற்சிகளும் செய்ய உள்ளோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். #oneminueonebook #tamil #book #review #novels #bookreading... Continue Reading →

கோஸ்ட்

“பள்ளிக் குழந்தைகள் இருவரின் சம்பாஷணை.. டேய் எங்கம்மா சொன்னங்க டா..ராத்திரி நேரத்துல எங்கயும் தனியா வெளிய போகக்கூடாதாம்..பேய் பிடிச்சிகுமாம் டா.. அதற்கு இன்னொரு குழந்தை கேட்கிறது.. ‘பேய்’னா என்ன டா..? வெள்ளை சீலை கட்டிட்டு, கருகருன்னு கோரமான முகத்தை வெச்சிக்கிட்டு, வாயில ரத்தக்கறையோட, கால் தரையிலேயே படாம நம்மள வந்து தூக்கிட்டு போய் சாப்பிட்டிரும் டா.. இந்த விசயத்தைக் கேட்ட அந்த இன்னொரு குழந்தை அடுத்தநாள் அநேகமாக காய்ச்சலில் விழுந்திருக்கும்.” சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேச... Continue Reading →

முகில் மைக்கல் மர்மம்..?!

ராயரின் பேரைச் சொன்னால்  அந்த குப்பமே நடுங்கும். அந்த அளவிற்கு ராயரிடம் மரியாதை இருந்தது. புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரைத் தவிர. ராயரை அவமானப்படுத்த நினைத்த இன்ஸ்பெக்டருக்கு ராயர் மகனின் போதைப் பொருள் விவகாரம் போதுமானதாக இருந்தது. போலீஸ், கோர்ட்டு என்று மாறி மாறி அலைந்து மைக்கலை ஒருவழியாக வெளியே கொண்டுவந்துவிட்டார் ராயர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் வைத்தே மைக்கலை கொல்ல ஆட்களை அனுப்ப, ராயர் குறுக்கே வந்து விழுந்து மைக்கலை காப்பாற்றுகிறார். சாகும் தருவாயில்... Continue Reading →

பொன்னி

இதுதான் ஷான் அவர்களின் புனைவு தொடங்கும் இடம். ஆயிரமாயிரம் வருடங்களாக தனது ரகசியத்தையும் தன் மன்னருக்குத் தந்த சத்தியத்தையும் காப்பாற்றும் இரணிய சேனை மற்றும் தேரை இன மக்கள். நியூயார்க் பெடரல் வங்கியில் திருடப்பட்ட ஆறாயிரம் டன் தங்கத்தை மீட்க இந்தியா வரும் அமெரிக்க உளவுத்துறை. இந்திய நிலங்களில் தங்கத்தைத் தேடி லண்டனில் இருந்து வரும் ஆதி மைன்ஸ் தலைவரான பொன்னி. இவர்களை வைத்து நடக்கவிருக்கும் வெட்டாட்டமே “பொன்னி - இரணிய சேனை” சமீபத்தில் KGF பட... Continue Reading →

423.?!

அந்த பின்னிரவு நேரத்தில் காலிங்பெல் சத்தம் கேட்டவுடன் சற்று திடுக்கிட்டாள் டிஜிட்டல் மீடியாவில் வேலை பாக்கும் பிரியா. சற்று நிதானித்த அவள்  பின் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அடுத்த நாள் காலையில் இறந்து கிடந்தாள் அவள். கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்த போலீஸ் அதிகாரி கார்த்திகா அதிர்ந்தாள். கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் நெற்றியில் 423 என்ற எண்ணால் சூடு வைக்கப்பட்டிருந்தது. கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்த அந்தப்  பெண்ணின் இரண்டு பெருவிரல்களும் வெட்டப்பட்டு இருந்தது.... Continue Reading →

கேம் சேஞ்சர்ஸ்

சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90's kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும். எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊 வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும். நமக்கு கஷ்டங்கள் வரும்போது... Continue Reading →

அந்தப்புரம்?!

ச்சீ.. ச்சீ.. இதைப் பத்தியெல்லாம் வெளிய பேசக் கூடாது..தப்பு என்பது போன்ற வசனங்களை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். நிறைய பேருக்கு தங்களது உடலில் நிகழும் மாற்றங்களை மற்றவர்களிடம் கேட்கத் தோன்றினாலும், பயத்தின் காரணமாக கேட்காமலேயே விட்டுவிடுவார்கள். நம்முடைய தாய்-தந்தை இல்லை எனில் இன்று நாம் என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது செக்ஸ் என்ற வார்த்தையையே தவறாகப் பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் நமக்கு இந்தப் புத்தகம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடப்... Continue Reading →

National Digital Library of India – தேசிய டிஜிட்டல் நூலகம்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 கோடி 60 லட்சம் நூல்கள், வீடியோ பாடங்கள், ஆவணங்கள் என மாபெரும் நூலகமாக தேசிய டிஜிட்டல் நூலகம் உள்ளது. Indian Institute of Technology, Kharagpur வடிவமைத்து Ministry of Education வழங்கும் National Digital Library of India-வைப் படித்து அனைவரும் பயன்பெறுங்கள். பிரம்மாண்டமான இந்நூலகத்தில் ஆரம்பப் பள்ளி  முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரையில் உள்ள அனைத்து துறை நூல்களும் இலவசமாகப் படிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் கீழே... Continue Reading →

IAS தேர்வும் அணுகுமுறையும்..?!

IAS எக்ஸாம் பத்தி உங்கள்ள நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கலாம். பத்து லட்சம் பேர் அப்ளை பண்ணி அதுல 3000+ முதல் நிலைத் தேர்வுல(Prelims) பாஸ் பண்ணி, அதுல 1௦௦0+ முதன்மைத் தேர்வுல பாஸ் பண்ணி இன்டர்வியூக்கு போனா, அதுல இருந்து தேவைப்படற 700+ ஆபீசர்ஸ UPSC செலக்ட் பண்ணுவாங்க. இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..அதையும் தாண்டி இந்த புத்தகத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. IAS ஆக என்னென்ன தகுதி வேணும்..? IAS-க்கு எப்படி... Continue Reading →

நாயகி

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த சுலோச்சனா முதல் முறையாக தன்னுடைய கிராமத்தில் இருந்து நகரத்தில் தங்கி படிக்க வருகிறாள். சுலோச்சனாவின் ஒரே நோக்கம்..நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே. ஊர் விட்டு ஊர் வந்த சுலோச்சனாவிற்கு நகரத்தில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது. மேலும் அதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையாக பிரசன்னா வருகிறான். அழகான & பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரசன்னாவைச் சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பிரசன்னாவே விழுந்தது சுலோச்சனாவைப்... Continue Reading →

தாலிபன் : ஓர் அறிமுகம்

#paragavan #taliban_oor_arimugam அந்த நடுநிசி நேரத்தில்.. தெருவில் இரண்டு பெண்களை பெயர் தெரியாத ஏதோ ஒரு போராட்டக் குழு வன்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இது நடந்தது ஆப்கானிஸ்தானில். தன் கண் முன்னே விரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து, அந்த நிமிடம் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது அந்த இளைஞன் ஓமரால். தன்னுடைய நாட்டின் மோசமான நிலையை எண்ணி கலங்கிய ஓமர் அடுத்த நிமிடம் குதிரையில் அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தார். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முடிந்தவரை ஆப்கானிஸ்தானை வைத்துப் பந்தாடிச் சென்ற... Continue Reading →

கேம் சேஞ்சர்ஸ்

சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90's kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும். எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊 வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும். நமக்கு கஷ்டங்கள் வரும்போது... Continue Reading →

ப்ராஜக்ட் ஃ

சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின் குறிப்பை விட்டுச்சென்ற தாத்தா, அந்தப் புதையலால் வரும் ஆபத்தையும்... Continue Reading →

சிவப்பு விளக்கு எரிகிறது..!!

புத்தகத்தோட தலைப்பைப் படிச்ச உடனே இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று வாசகர்களில் நிறைய பேர் இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்..இந்தப் புத்தகம் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் பெண்களைப் பற்றியது தான். அதுவும் வேறு வழியின்றி இந்த இழிதொழிலுக்குத் தள்ளப்பட்ட அபலைப் பெண்களைப் பற்றியது தான். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் காதல் வலையில் விழுந்த பெண்கள், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதை விடுதிகளில் இருக்கும் பெண்கள்,... Continue Reading →

Bynge App

தொடர்கதைகளுக்கென உருவாக்கப்பட்ட ஒரு செயலியாக Bynge இருப்பது, தமிழ் இலக்கிய எழுத்துலக வரலாற்றில் புதுமையான மற்றும் வரவேற்கத்தக்க முயற்சியாகும். தமிழ் இலக்கிய வாசகர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், முன்னணி எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், அராத்து, இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத் போன்றவர்களின் நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்து செயலியை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது எழுத்தாளர்கள் எழுதிவரும் Bynge செயலியில் தற்போது வலம் வருபவை பற்றிய சிறு குறிப்பு.. எழுத்தாளர்களும் - அவர்களின் எழுத்துக்களும்.. ராஜேஷ்குமார் – நள்ளிரவுச் செய்திகள்... Continue Reading →

Buy Your Favorite Books @ Minimal Price

To create your own library, this is the right place to buy books. Variety of books available in this site for Kids, Crime thriller, Literature, Non-Fiction, Romantic, Adult, Fantasy, Marketing, Mystery, Self Help, Spirituality and Science Fiction. You can find different language books like English, Tamil, Kannada and Hindi. eBooks also available here in discount... Continue Reading →

சர்வைவா

கற்பனைகள்… பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும் மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான். who knows…?! நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில்... Continue Reading →

33 புதிய சிந்தனை வெற்றிக் கதைகள்.!

ஃலைப்-ல ஜெயிக்கறதுக்கு இங்க நிறைய பேருக்கு மோட்டிவேசன்னு ஒண்ணு கண்டிப்பா தேவைப்படுது. அது ஃசெல்ப் மோட்டிவேசனா இருந்தாலும் சரி, இல்ல ஒருத்தர்கிட்ட இருந்து கிடைக்கற மோட்டிவேசனா இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொருத்தருக்குமே அவங்க ஃலைப்-ல ஏதாவது ஒரு சில எடத்துல கண்டிப்பா மோட்டிவேசன் தேவைப்பட்டிருக்கும். ஜெயிக்கற எல்லாருமே அவங்க எதைப் பாத்து, இல்ல யாரைப் பாத்து மோட்டிவேட் ஆனாங்கன்னு ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி சொல்லிருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு மோட்டிவேசன் புக் தான் இந்த சிந்தனை வெற்றிக் கதைகள்.... Continue Reading →

ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்

ஒவ்வொரு நாவல்களும் (அ) கதைகளும் வாசிப்பவர்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும். அவற்றில் சில எதார்த்தமாகவும், சில அசாத்தியமாகவும், சில சிந்திக்கவும் வைக்கும். இதன் வரிசையில் வெகுசில கதைகளே நம்மை திகிலூட்டும். அதுபோன்ற ஒரு கதைத் தொகுப்பே “ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்”. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். மொத்தம் 11 கதைகள். எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு சாமானிய விஷயமே உங்களை அச்சுறுத்தும், புதிர் போடும், திகிலாக்கும். உதாரணத்திற்கு ஒரு துண்டு பேப்பர், இரண்டு கதவுகள், சிறு... Continue Reading →

ஆண்ட்ராய்டின் கதை

“Game Changer” நியூட்டனின் முதல்விதியின் அடிப்படையில், டெக்னாலஜியின் இயக்க நடைமுறையை மாற்றியதில் முக்கியமானது Steve Jobs-ம் அவரது ஐபோனும். ஆண்ட்ராய்டோட கதையில ஐபோனா..? அப்படீன்னு உங்க மனசு ஒரு கேள்வி கேக்கும்...அதுக்கான பதிலை நான் கடைசியில சொல்றேன். இந்த புத்தகம் ஒரு மினி சைஸ் History Book. ஆனா போர் அடிக்காம..நிறைய ஆச்சர்யங்களைத் தரும். அதேசமயம் கதையில அங்கங்க மலரும் நினைவுகளும் வந்துபோகும். அப்புறம் மானே..தேனே..பொன்மானே.. மாதிரி அங்கங்க Fun Facts-ம் வரும். உற்சாகமேற்படுத்தும் நடை உங்களை... Continue Reading →

நந்திபுரத்து நாயகி

Spoiler Alert..! பொன்னியின் செல்வனுக்கு பிறகே இந்தப் புத்தகத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சூழ்நிலை காரணமாக உடனே எழுத வேண்டியதாகிவிட்டது. இதுவரை பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்காத வாசகர்கள், அதை முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அருண்மொழிவர்மன் தன்னுடைய சித்தப்பாவிற்கு முடிசூட்டியவுடன் அவரை, கடல் கடந்த நாட்டிற்கு சிலகாலம் அனுப்பி வைக்கிறாள் குந்தவை. அந்த நேரத்தை உபயோகப்படுத்தி நடக்கும் சில சம்பவங்களும் அருண்மொழி நந்திபுரம் வந்தபிறகு நிகழும் சில சம்பவங்களுமே இந்தக் கதை.... Continue Reading →

ஊருக்கு நல்லது சொல்வேன்..!

தாய்மைக்கு உதாரணமாக காந்தாரியும்.. துறவுக்கு உதாரணமாக விவேகானந்தரும்.. குடும்பத்துக்கு உதாரணமாக டால்ஸ்டாயும்.. புலனடக்கத்துக்கு உதாரணமாக புகழ்பெற்ற தத்துவஞானி டயோஜனிஸும்.. அன்பு தான் மதம் என்று மதத்திற்கு உதாரணமாக காந்தியும்.. மனிதத்துக்கு உதாரணமாக ஏசுவும்.. நட்புக்கு உதாரணமாக மார்க்ஸும்.. நன்றிக்கு உதாரணமாக சிசரோவும்.. முயற்சிக்கு உதாரணமாக ஐன்ஸ்டீனும்.. வாழ்க்கைக்கு உதாரணமாக புத்தரும்.. தானத்துக்கு உதாரணமாக குருநானக்கும்.. ஆசைக்கு உதாரணமாக நெப்போலியனும்.. நேர்மைக்கு உதாரணமாக லால்பகதூர் சாஸ்திரியும்.. மன்னிப்புக்கு உதாரணமாக நபிகளும்.. அடிக்கற்களுக்கு உதாரணமாக பகத்சிங்கும்.. ஊக்கத்திற்கு உதாரணமாக மைக்கேல்... Continue Reading →

ஆம்னி புக்ஸ் நூலகம்

சுமார் 2 லட்சம் புத்தகங்களுடன், 6 ஆயிரம் சதுர அடியில் ஏசி மற்றும் லிப்ட் வசதிகளுடன் “ஆம்னி புக்ஸ் நூலகம்” கோவை பீளமேடு ஃபன்மால் சாலையில் கோவிந்தராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தொடங்கியுள்ளனர். அனைத்துத் துறை நூல்களும் இங்கு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வயதுவாரியாக நூல்கள் இங்கு தரம்பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அரசியல், அறிவியல், கிரியேட்டிவ், கலை, விவசாயம், பொருளாதாரம், கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆராய்ச்சி மற்றும்... Continue Reading →

அறிவியல் எது? ஏன்? எப்படி?

“தகவல்! தகவல்! தகவல்! எனக்கு நிறைய தகவல் தேவை...” தகவல்களையும், அறிவியல் விநோதங்களையும் தேடிப் படிக்கிற மனோபாவம் பொதுவா சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு அருமையான புதையல்னே சொல்லலாம் என்.ராமதுரை எழுதுன “அறிவியல் எது? ஏன்? எப்படி?”-ங்கற புத்தகம். இதுல அப்படி என்ன சிறப்பா இருக்கப் போகுதுன்னு நிறைய அறிவியல் கட்டுரைகளைப் படிச்சவங்களுக்குத் தோணலாம். தலைப்பு: ஒரு தகவலை மனசுல பதிய வெக்கணும்னா நமக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவசியமான விசயம். இதுல... Continue Reading →

சங்க நூல்களில் மரங்கள்

“அத்தி, அரையம், ஆசினி, ஆத்தி, ஆலம், இத்தி, இரத்தி, இலஞ்சி, இலுப்பை, இல்லம், உழிஞ்சில், உன்னம், ஒடு, ஓமை, கடு, கண்டல், காஞ்சி, குழில், குருந்து, சந்தனம், செயலை, ஞாழல், ஞெமை, தில்லை, தேக்கு, நாகம், நொச்சி, பயின், புன்கு, பெரு, மயிலை, மருதம், முருங்கை, மூங்கில், யா, வஞ்சி, வழை, வாகை, விடத்தேர், வேங்கை, வேம்பு.” படிக்கும்போதே தெரிஞ்சிருக்கும் புரிஞ்சும், புரியாத இந்த வார்த்தைகள் எல்லாமே மரங்களின் பெயர்கள்தான். ஆனால், சங்க காலத்துல பயன்படுத்தப்பட்ட மரங்களின்... Continue Reading →

சென்னை நிரந்தரப் புத்தகக் கண்காட்சி

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தரப் புத்தகக் கண்காட்சி’ அரங்கம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 30,௦௦௦ தலைப்புகளுடன், ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். ஆண்டு முழுவதும் புத்தகங்களுக்கான விலையில் 10% தள்ளுபடியும் உண்டு. ஏராளமான தலைப்புகளுடன் உலகில் இங்கு மட்டுமே இத்தனை தமிழ் நூல்களைக் காணலாம். #one_minute_one_book #tamil #book #review #permanent_chennai_book_fair

மஞ்சள் மாநகரம்

ஈரோடு (Erode).. இதுக்கு ரெண்டு பேரு இருக்குங்க. ஒண்ணு பெரியார் மாவட்டம், இன்னொன்னு மஞ்சள் மாநகரம். தொன்றுதொட்டுன்னு ஆரம்பிச்சா, பேச நிறைய இருக்குங்க. காளிங்கராயன் வாய்க்கால்ல இருந்து பவானி ஜமக்காளம் வரைக்கும், மணிக்கூண்டு பன்னீர் செல்வம் பார்க்குல இருந்து மேட்டூர் டேம் வரைக்கும் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. அத எல்லாம் போகப்போக பார்க்கலாம். பெரும்பள்ளம், காளிங்கராயன் வாய்க்கால் பாயற இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு ஈரோடைன்னு பேருங்க. அது மருவி ஈரோடுன்னு மாறிடுச்சு. 1979 - வரைக்கும்... Continue Reading →

மனிதன் மாறிவிட்டான்

நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் தனக்குத்தானே மேம்பட்டவனாகப் பார்க்கப் பழகிவிட்டான். ஆனால், இயற்கை எல்லோரையும் சமமாகத் தான் வைத்திருக்கிறது. ஆயிரம் தான் பூசி மொழுகினாலும் பிறவிகுணம் கண்டிப்பா போகாது. அந்த மாதிரி கற்கால மனிதனிலிருந்து இக்கால மனிதனை எல்லா வகையிலும் செய்யும் ஒப்பீடே வெ.இறையன்பு எழுதிய “மனிதன் மாறிவிட்டான்”. இது ஒரு சிறப்பான முயற்சி. நம் உடல்மொழி, உறுப்புகள், நம் இயல்பான... Continue Reading →

விதைகள் எங்கே போகின்றன..?

மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?"நெகிழி"வேறு பதில்.."இரப்பர்"வேறு............ என்னைக் கேட்டால் என் பதில்.."விதை".மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த "விதைகள் எங்கே போகின்றன?"குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.... Continue Reading →

மூன்றாம் பரிமாண சிந்தனை..?!

“WRITER’S BLOCK” இந்த வார்த்தை உங்களுக்கு புதுசா இருக்கலாம். இது ஒருவகை மனோநிலை, இது பொதுவா எழுத்தாளர்களுக்கு ஏற்படும். இந்த நிலையில சிக்கினா எழுத்தாளர் கதி அதோகதிதான். எவ்வளவு தெளிவா ஒரு விசயத்த புரிஞ்சு வெச்சிருந்தாலும் அத படைப்பாற்றலோட வெளிப்படுத்த முடியாம திணற ஆரம்பிச்சிருவாங்க. இந்த WRITER’S BLOCK-ல சிக்குனவங்க சின்ன சின்ன எழுத்தாளர்கள் மட்டும் இல்லைங்க, என்ன மாதிரி (நகைச்சுவை J) பெரிய எழுத்தாளர்களும்தான். “WRITER’S BLOCK” பற்றி இங்க பேசவேண்டிய அவசியம் இருக்கு. காரணம்... Continue Reading →

சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்

கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும். This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician - Srinivasa Ramanujan.What is so great... Continue Reading →

நினைவாற்றல் பெருக மனப் பயிற்சிகள்

மனிதன் தனக்காக சேர்த்து வைப்பது ஒன்றுதான் நினைவுகள்(memories)... நினைவாற்றல் மிக்கவர்கள் அதிகமான துறைகளில் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நினைவாற்றல் சற்றே குறைவான சிலர் தாழ்வு மனப்பான்மையில் மேலும் மறதிக்கு தீனி போடுகிறார்கள். ஆனால் மறதி ஒரு கவனக்குறைவே ஒழியகுறைபாடில்லை என பி.எஸ்.ஆச்சாரியா இந்த புத்தகத்தில் நினைவாற்றல் பற்றிய விளக்கங்களையும் அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் எழுதியுள்ளார். #one minute one book #tamil #book #review #p.s.aachariya #ninaivaatral peruga mana payirchigal #memory power increasing practices... Continue Reading →

வாவ் 2000

“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான்! வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி! இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர்! தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன்! அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன்! பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்! மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்!” இன்னும்... இன்னும்...... Continue Reading →

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் பெருகிவரும் இந்த சூழலில் வளரும் சில சிறார்களும் அதையே பின்பற்றி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு (IPC) 392-ன் படி திருட்டில் ஈடுபடும் நபருக்கு பத்தாண்டுகள் முதல் பதினான்கு ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனையும், குற்றத்திற்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இதே குற்றத்தை 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறார்கள் செய்தால்...? நம் நாட்டில் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக... Continue Reading →

திருப்பாவை

வைணவர்கள் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவர் பாடிய திருப்பாவை, 30 பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கி, 30 நாட்கள் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருந்து, மாதவனை வேண்டிப் பாடுவதே திருப்பாவை. பாவை நோன்புக்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் எல்லாப் பெண்களும் கடைபிடிக்கக் கூடியவை. கன்னிப் பெண்கள் பொழுது விடியுமுன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி மாதவனைத் துதித்து வழிபடுவர். நோன்புக் காலத்தில் பெண்கள்... Continue Reading →

கிமு.கிபி.

ஒரு ஊர்ல “குரங்குல இருந்து மனுஷன் வந்தான்”னு ஒரு கூட்டமும், “ஆதாம் ஏவாளுக்கு பொறந்தவங்க தான் மனுசங்க”ன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு சண்டை போட, பஞ்சாயத்து முத்தி போக ரெண்டு டீமும் நாட்டாமை கிட்ட போனா............அந்தாளு “ஆதாரம் இருக்கா”ன்னு கேட்க, எலுமிச்சம்பழத்தை நசுக்கி பயணத்தை ஆரம்பிக்குது கிமு. கிபி. பயணத்திட்டம்.. சாயங்காலம் லூசி கூட கடல் காத்து வாங்கிட்டு, நைல் நதி ஓரமா டென்ட் போட்டு தங்கிட்டு, காலைல எகிப்து போயி மம்மி கூட செல்பி எடுத்திட்டு,... Continue Reading →

100/100 அறிவியல் : மரபியல்

ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க..? ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →

யாருக்கும் வெட்கமில்லை

‘சோ’ இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. இவர் பேனா புரட்சியையோ, பகுத்தறிவையோ, நம்பிக்கையையோ சார்ந்து எழுதவில்லை. இவர் எடுத்திருப்பது உண்மைகளையே. அதோட பிம்பங்கள்ள ஒண்ணுதான் “யாருக்கும் வெட்கமில்லை”. இதப் பாத்ததும் பலருக்கு பலவித எண்ணங்கள் அல்லது ஒரு நிமிஷம் உங்கள நிறுத்தி கூட இருக்கலாம். அதுதான் உண்மையோட மேஜிக். “உண்மை பேசும் தைரியம் இந்த சோ ராமசாமிக்கு அதிகம்” என அவருடைய முன்னுரை எழுத்துக்களை வெச்சே நிரூபிச்சிருப்பார். இக்கதை எளிமையான குடும்ப சூழலில் தொடங்கி பெண்ணியத்தையும், சமூகப்... Continue Reading →

வெக்கை

"The novel questions the ethics of the politics of revenge." “கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு” இந்த கருத்து ஒரு பக்கம் இருக்க நகரவாசிகளாக நாம் கிராம மக்களை காட்டுமிராண்டிகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் பார்க்கவும், சித்தரிக்கவும் பழகிவிட்டோம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழத்தெரிந்த அவர்களே தமிழினத்தின் தொன்மை, மரபு, விவசாயம், பழக்கம், மனிதம், சாமர்த்தியம், கட்டுப்பாடு, வெறித்தனம் மற்றும் வீரம் சுமப்பவர்கள். சிதம்பரம் என்கிற 16 வயது சிறுவனையும் அவன் சுற்றங்களையும் மையமாக வைத்து 1980-களில்... Continue Reading →

எளியோருக்கான சட்டங்கள்..!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி? வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? இரயில் விபத்து... Continue Reading →

ருத்ரவீணை

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” அன்று! 300 வருடங்களுக்கு முன்பு..கண்களில் தேஜஸ், தளர்ந்த நடை, தோளில் சுமை, அதில் பெருமை வாய்ந்த வீணையுடன் தஞ்சாவூர் வீதிகளில் தோடிபுரத்திற்கு வழிதேடி அந்த இஸ்லாமியர் அலைந்து கொண்டிருந்தார். நாத அதிபதி தோடீஸ்வரன் குடிகொண்டிருக்கும் வறண்ட பூமியாக இருந்த தோடிபுரத்தை வந்தடைந்த அந்த மாயாஜால மனிதரை அனைவரும் பாபா என்றழைத்தனர். அவர் சுமந்துவந்த வீணை சாதாரண வீணை அல்ல, அந்தப் பரமனே தனது இணையான உமையை வைத்து உருவாக்கிய... Continue Reading →

சித்திரப்பாவை

அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக்... Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு.."வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});... Continue Reading →

கோச்சடையான்

கோச்சடையான் | நரசிம்மவர்மன் | பதுமகோமளை | பரமேஸ்வர பல்லவர் இந்த நாலு பேரையும் இணைக்கிறது சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் பல்லவ சாம்ராஜ்யத்தில் பெரும்படையோடு ஊடுருவி சின்னாபின்னமாக்கினான் புலிகேசி புதல்வன். பல்லவ கட்டுப்பாட்டில் இருந்த உறையூர் அரண்மனை சாளுக்கிய சேனையின் உறைவிடமானது. பல்லவ அரச வாரிசுகளும், விசுவாசிகளும் தலைமறைவானார்கள். பெரும்படையை கையில் கொண்டு உறையூரைச் சுற்றி இருந்த குறுநில மன்னர்களை மிரட்டி வாழ்வாதாரத்தைச் சூறையாடினான் புலிகேசி புதல்வன். தமிழ் மண்ணில் அந்நியன் ஒருவன் ஆளுவதா?... Continue Reading →

கொலையுதிர் காலம்

கணேஷிற்கும் வசந்திற்கும்  குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள்,  கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள். கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது. “இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்? 4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா? அல்லது வியாசர்களால் கொல்லப்பட்ட  புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?” “விஞ்ஞானமா? பைசாசமா?” சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்...காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்? குமாரவியாசன்,... Continue Reading →

புத்தம் சரணம் கச்சாமி!

திபெத்தை தன் வசப்படுத்த சீனர்கள் கௌதம புத்தரின் மறுபிறப்பான மைத்ரேயரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம் தீட்டினர். சீனாவின் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த திபெத்தியர்கள், தங்களுடைய கடவுளாக கருதும் மைத்ரேய புத்தருக்கு சீன உளவுத்துறை மூலமாக ஆபத்து வரவிருப்பதை உணர்ந்தார்கள். பத்து வயதே ஆன இளம் மைத்ரேயரைக் காப்பாற்ற பிரதமரிடம் ஆலோசித்து அமானுஷ்யனிடம் உதவி கோருகிறார், தலாய்லாமா. தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக  மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த அமானுஷ்யன், அந்த அழைப்புக் கடிதம் வந்தபோது தான் திபெத்தில் ஆரம்ப காலத்தில்... Continue Reading →

மலையருவி

தலைப்பைப் பார்த்தவுடனே கவிதைத் தொகுப்புன்னு நினைச்சிராதிங்க, மலையருவி - தமிழ் நாடோடிப் பாடல்களின் தொகுப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன் பாடும் தாலாட்டில் ஆரம்பித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் சூழ்நிலைகளைக் கூறும் ஆண்-பெண் தர்க்கம், தெய்வம், கும்மி, கள்ளன் பாட்டு, தொழிலாளர் பாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி எனும் பாடல்களின் தொகுப்பாக அமைந்திருக்கும். வேலைக்கு இடையே சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடப்பட்டவையே இந்த நாடோடிப் பாடல்கள். ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும். அதாவது... Continue Reading →

சுஜாதா சிறுகதைகள்

இந்த வலைப்பூவில் வரிசையாக புத்தகங்கள், தகவல்கள், தர்க்க ரீதியான கேள்விகளைத் தொடர்ந்து இனி சிறுகதைகள் பற்றிய பதிவுகளும் வரவுள்ளது. சிறுகதைகளில் நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். அதில் எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பகுதி சிறப்பானது. சிறுகதைகள் என்றால் என்ன..? புத்தகங்கள், நாவல்கள் போன்ற மணிநேர வாசிப்பு அல்லாமல், நிமிடங்களில் முடிந்து ஆழமான சிந்தனையில் நம்மை நிலைக்க வைக்கும். கதாப்பாத்திரங்களின் அறிமுகம் சன்னமானதாகவும், நிகழ்வுகள் லேசானதாகவும், வார்த்தைகள் ஜாலங்களாகவும் மாறி நம்முள் தோற்றப் பிழைகளை ஏற்படுத்தி கடைசியில் ஒரு... Continue Reading →

அறிவியல் 1000

“ரோட்டுல தூரத்துல இருந்து பாக்கறப்போ தெரியற தண்ணி பக்கத்துல போகப்போக மறைஞ்சு போகுதே ஏன்..? வானம் ஏன் நீல கலர்ல தெரியுது..? இடி இடிக்கும்போது ஏன் மரத்துக்கு கீழ நிக்கக் கூடாது..? மரக்கட்டை ஏன் தண்ணில மிதக்குது..? தண்ணியில எண்ணெய் ஏன் கரைய மாட்டிக்குது..? ஓடற பஸ்ல இருந்து இறங்கக்கூடாது ஏன்..?” இதுமாதிரியான நிறைய கேள்விகள் உங்களுக்குள்ளயும் கண்டிப்பா இருந்திருக்கும். இந்த எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில் சயின்ஸ், அதாவது அறிவியல். எப்பவும் நாம மனப்பாடம் பண்ற... Continue Reading →

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

NO MONEY ! NO HONEY !! பணம்  சின்ன வயசுல நாம அப்பாகிட்ட ஏதாவது வாங்கித்தர சொன்னா…. அம்மாகிட்ட இருந்து ஒரு பதில் வரும் “பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” நம்ம MIND VOICE : “நிஜமாவே பணம் மரத்துல வளந்தா எவ்ளோ நல்லாருக்கும்” ஆனால், ஒரு 10 வயசு பையன் அவங்க அப்பாகிட்ட “எனக்கு பணம் காய்க்கிற மரம் வேணும்” அப்படினு கேட்க  அவங்க அப்பா அந்த பையன்கிட்ட “பணம் காய்க்காது, ஆனா குட்டி... Continue Reading →

World Wide Book Finding #1

Some Years Before The Partiality had spread world wide by the colour, language, work. They are called poor by rich. Their only option to follow the rules, work to rich people. The riches are rule poor as a boss. But Now a days those things are changed. I Believe Those Change had happened by "Books".... Continue Reading →

சித்திரப்பாவை

அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக்... Continue Reading →

Thankful Moment..

This is unforgettable moment in my life. Thank you my dear followers, visitors and friends who following and commenting one minute one book regularly and encouraging me to write more and more. Without you I cannot be here. I need your support for everyday to engrave myself. Once again thank you all..

சில்லுக் கருப்பட்டி

புத்தகங்கள் பற்றிய எனது வலைப்பூவில் முதன் முதலில் ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதுகிறேன். இது நான் சுவைத்த "சில்லுக் கருப்பட்டி". இது ஒரு Anthology திரைப்படம். நான்கு வித்தியாசமான கதை. 1. Pink Bag | 2.காக்காக் கடி | 3.Turtle | 4.Hey Ammu. இது Movie Review இல்லை. இது எனக்குள் தோன்றிய சிந்தனைகள். (குறிப்பு : ரசனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.) குப்பைமேட்டில் கதை பிறக்கிறது. ஒரு குழந்தைப் பருவக் காதல். நேர்முகம்... Continue Reading →

Pandemic around the world

This 2020 is pandemic(Corona Virus) period. People faced different pandemic/epidemic at different periods in this world. Often many people are not aware of pandemic. Many authors write about pandemic happened in particular time period. These book gives us a clear and wide knowledge about pandemic. Come on friends..let us see authors opinions and facts about... Continue Reading →

Free Tamil e-Book Websites

இந்த டிஜிட்டல் உலகத்துல மட்டுமில்ல எப்பவுமே தகவல்களுக்கு ஒரு தனி மவுசு தான். தகவல்,  அப்படின்னு ஒன்னு இல்லைன்னா பேப்பருக்கு அவசியமே  இல்லாம போயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொன்னான  தகவல்கள்தான் இந்த பதிவு  “இலவச வாசிப்பு”. வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த  பல குழுக்கள் பல காலகட்டங்களில் பல முயற்சிகளை  செஞ்சிருக்காங்க. இன்றளவும் செஞ்சிட்டு தான் இருக்காங்க. அதுல, சில முயற்சிகள் ரொம்ப அழகாகவும் வெற்றிகரமாகவும் இருந்திருக்கு. “இலவச வாசிப்பு” எப்போதும் பல பேருடைய பெருமுயற்சிகளுக்குப் பிறகு தான்... Continue Reading →

Dear CORONA..

இந்தப் பதிவு எழுதப்படுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸினால் என்னுடைய மனநிலை குறித்து எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம். அது உங்களது மனதையும் பிரதிபலிக்கலாம். எண்ணங்கள் செயல்படும் வேளை இது. முதலாவதாக சுய ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கும் நன்றி. ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறெல்லாம் நிகழும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களிடம் கேலிச் சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்திருப்பேன். இன்று 25... Continue Reading →

அம்மா..

பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தன்னுடைய திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு சக மனுஷி. சமைக்க, வீட்டுவேலை செய்ய, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய என  அவளை வெறும் ஒரு இயந்திரமாக மட்டுமே உபயோகிக்கும் ஆண். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழ்நிலையில், மற்ற உறவினர்களின் கேலிப்பேச்சுக்கும் ஆளாக நேர்கிறது. இதற்கிடையே இரண்டு குழந்தைகள். சிறுவயது முதலே அன்பும் கனிவும் மரியாதையும் சொல்லிக் கொடுத்து அக்குழந்தைகளை வளர்க்கிறாள் அந்த அன்னை. வீட்டில் கணவனுக்கு கீழேயும் அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கீழேயும் இருக்க... Continue Reading →

தண்ணீர் தேசம்

இதை கதை என்பதா..? கவிதை என்பதா..? கவிதை சொல்லும் கதை இதுதான் சரியா இருக்கும். இது ஒரு ‘love story’ இல்லை. இதை ஒரு ‘survival story’ அப்படின்னும் சொல்லலாம். அனுபவமா..? அறிவியலா..? மனித அனுபவ அறிவியல் என்றும் சொல்லலாம். ஆனால், வைரமுத்துவைப் படிக்கும்போது நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும், சிந்தனையும் வாழ்வின் மீதான வித்தியாசமான கண்ணோட்டமும் உருவாகும் நிச்சயமாக. அந்த வரிசையில் தண்ணீர் தேசம் ஒரு பொக்கிஷம்தான். கவிதைக்கதை கடற்கரையில் தொடங்கி கடல் அலையில் முடிகின்றது.... Continue Reading →

நினைவாற்றல் பெருக மனப் பயிற்சிகள்

மனிதன் தனக்காக சேர்த்து வைப்பது ஒன்றுதான் நினைவுகள்(memories)... நினைவாற்றல் மிக்கவர்கள் அதிகமான துறைகளில் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நினைவாற்றல் சற்றே குறைவான சிலர் தாழ்வு மனப்பான்மையில் மேலும் மறதிக்கு தீனி போடுகிறார்கள். ஆனால் மறதி ஒரு கவனக்குறைவே ஒழியகுறைபாடில்லை என பி.எஸ்.ஆச்சாரியா இந்த புத்தகத்தில் நினைவாற்றல் பற்றிய விளக்கங்களையும் அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் எழுதியுள்ளார். #one minute one book #tamil #book #review #p.s.aachariya #ninaivaatral peruga mana payirchigal #memory power increasing practices... Continue Reading →

சாபம்

“பெண்ணியம்” பெண்களைப்பற்றி பேசுவதும், எழுதுவதும், திரைப்படம் எடுப்பதும் அவசியமானதாக அல்லாமல் அட்ராக்ஸனுக்கும் அப்ளாஸுக்குமாக மாறிக்கொண்டிருக்கிறது. கே.எல்.மோகனவர்மாவின் இந்த மலையாள நாவலின் தமிழ் பெயர்ப்புக்கு காரணம் எழுத்தாளர் “சுரா”. “அவள் ஏன் இப்படி?” என்பதற்கு பதில் “இவர்கள் ஏன் இப்படி?” என சிந்திக்க வைக்கும் நாவல்தான் சாபம். “பெண்ணியத்தை இப்படியும் கூறலாம் போல..” இதில் “நளினி” கதாப்பாத்திரத்தைச் சுற்றி அமைந்த வட்டார வர்ணனைகளும், “ஜெயனின் எண்ண அலைகளும் கதை நம்மை எடுத்துச்செல்ல வேண்டிய புள்ளிக்கு அழகாய் நகர்த்தும். #one... Continue Reading →

சுஜாதா #2

சுஜாதா !!!"எழுத்துலகின் அனைத்து எல்லைகளையும் தொட்டு பார்த்தவர் " எனும் பெருமைக்குரியவர் சுஜாதா.நம்மில் பலருக்கு சுஜாதா ஒரு புத்தக எழுத்தாளராகத்தான் பரிட்சயம். ஆனால் இவரது வசனங்களும்...திரைக்கதையும்...எப்போதும் திரைப்படத்தில் தனி ஆளுமையும்...வசீகரத்தையும் கொண்டிருக்கும். மணிரத்னம், சங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல மாயப் பிணைப்பை நமக்கும்திரைப்படத்திற்கும் இடையே தோற்றுவித்திருக்கிறார். சுஜாதா ஒரு 'மாயா'விதான்.அவற்றில் சில உங்களுக்காக... இதன் வாசிப்பு தன்னிலை அறியா ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். "தான் செய்யறது தப்புன்னே உறைக்காத அளவுக்குஉங்களுக்கு தப்பு பழகி... Continue Reading →

நோபலுக்கான ஆய்வுகள் இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஏன் நடப்பதில்லை?

2019-ஆம் ஆண்டு வரை இந்தியா மொத்தம் ஒன்பது நோபல் பரிசுகளை வென்றிருக்கிறது. இதில் சர் சி.வி.ராமன் அவர்கள் பெற்ற நோபல் பரிசு நீங்கலாக பெறப்பட்ட எட்டு நோபல் பரிசுகளும் இந்தியர்களால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு பெறப்பட்டவை. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களை அளவிட மொத்தம் ஐந்து அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனனம் செய்தே பழக்கப்படுத்தப்பட்ட நம்முடைய கல்வி நிறுவங்களை மறு ஆய்வு செய்து, மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் தொடர்ந்து கற்கும் திறனை வளர்ப்பதின் மூலம் கல்வி... Continue Reading →

சுஜாதா #1

மல்ட்டி-மீடியா எழுத்தாளர்… படித்தவுடனோ அல்லது கேட்டவுடனோ சிறியதாய் ஒரு புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றலாம். பல புதுமைகளை கொண்ட ஒரு பன்முக சிந்தனையாளரே இந்த பெயருக்குச் சொந்தகாரர். சுஜாதா-எழுத்தாளர்.. சுருக்கமான வரையறைகள்…வேகமான எழுத்துநடை…எதார்த்த கருத்துக்கள் என தனக்கான ஒரு பெயரையும், தனக்கான ஒரு பாணியையும் எழுத்துலகில் அமைத்துக்கொண்ட ஒரு பொறியாளர். 1965 முதல் S.R .ராஜன் என்ற பெயரிலும், சுஜாதா என்ற பெயரிலும் குறுங்கட்டுரைகளை எழுதி வந்தார். இவரின் அறிவியல் புனைகதைகளுக்கு மக்களிடம் அதீத வரவேற்பு. அறிவியல் இவரது... Continue Reading →

என்ன பொண்ணுன்னு நினைச்சியா..?நான் பேய்டா..!

கார்த்திக்கும் அவன் பள்ளித் தோழி மீராவும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர். ஆபிசில் மூன்றுநாள் விடுமுறை கிடைக்க தன்னுடைய ஊருக்குப் புறப்பட்ட மீரா, அன்றைய தினமே ஒரு ஆக்சிடென்ட்டில் இறக்க நேரிடுகிறது. அதையறியாத கார்த்திக் வேலை முடிந்து செல்லும் வழியில் கீர்த்து என்றொரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். கீர்த்துவிடம் மனதைப் பறிகொடுத்த கார்த்திக், மீராவிற்கு கால் செய்து தான் கீர்த்துவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். இதனிடையே அந்த ஹாஸ்டலில் கீர்த்து என்று யாரும் தங்கியிருக்கவில்லை என்ற உண்மை... Continue Reading →

எட்டும் தூரத்தில் IAS

IAS தேர்வுக்கு எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? தேர்வுக்குத் தயாராகும்போது குறிப்பெடுப்பது எப்படி? பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணலை அணுகுவது எப்படி? சிறந்த பொழுதுபோக்கை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிட்டு கவனத்துடன் படிப்பது எப்படி? கட் ஆஃப்-ன் முக்கியத்துவம், விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? மற்றும் IAS தேர்வுக்கான பாடத்திட்டத்துடன் தன்னுடைய சொந்த அனுபவங்களையும் சேர்த்து ஒரு IAS அதிகாரியாக இல்லாமல் சக நண்பனாக இருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார், டாக்டர்... Continue Reading →

நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →

விதைகள் எங்கே போகின்றன..?

மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?"நெகிழி"வேறு பதில்.."இரப்பர்"வேறு............ என்னைக் கேட்டால் என் பதில்.."விதை".மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த "விதைகள் எங்கே போகின்றன?"குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.... Continue Reading →

ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தர் அநுபூதி

காப்பு நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். நூல் (1) ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. (2) உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே.... Continue Reading →

பட்டம்

நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் ஏதோ ஒரு தருணத்தில் தினசரி நாளிதழ்களில் நம்மை நாமே மூழ்கடித்திருப்போம். தொடர்கதைகள், தகவல் துணுக்குகள், அறிவியல் கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடி, மேலும் பல.. சிறுவர்களுக்கான வார இதழ் வரிசையில் ‘பட்டம்’ தனக்கான தனிப்பாதையில். இதில் நாளும் செய்தியும், வெங்கியைக் கேளுங்கள், கணித கற்கண்டு, நீங்களும்-நாங்களும், படக்கதை-பயன்கதை, வெற்றிப்பாதை,இன்தமிழ்-என்தமிழ், கதிர்கனவுகள், இயற்கை நம் நண்பன் என ஒவ்வொரு தொகுப்பிலும் தகவலையும், மலைப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு தினமலர் வெளியீடு.... Continue Reading →

ஊச்சு..

பயம் மனித உணர்வுகளில் ஒன்று. அட்ரீனலினும், என்டோகிரைனும் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயம் பரவும். இருந்தாலும் திகிலடைவதும், பயமுறுவதும் ரசிக்கத்தக்கதாக மாறிவருகிறது. இரவு 8:30. மேல்பாறை வனப்பகுதியில் நடக்கும் திருவிழாவினை ஆவணப்படம் எடுக்கச் செல்கின்ற நால்வர், தங்கள் திட்டத்திலேயே இல்லாத சில சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அமாவாசை இருளில் தொலைந்து போகின்றனர். அர்ஜூன்-காவல்துறை அதிகாரி. தனது விசாரணையை மேல்பாறை மக்களிடம் இருந்து தொடங்கினான். "முனி அடித்திருக்கும்" "ஓநாய் கொன்றிருக்கும்" என பல கதைகள் அவனின் தைரியத்தை உலுக்கிப்... Continue Reading →

எளியோருக்கான சட்டங்கள்..!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி? வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? இரயில் விபத்து... Continue Reading →

கணித மேதைகளின் பேஸ்புக்

கிமு 624-இல் ஆரம்பித்து 20-ஆம் நூற்றாண்டு வரை கால வரிசைப்படி உலகின் சிறந்த 100 கணித மேதைகள் பிறந்த நாடு, அவர்களின் பிறப்பு-இறப்பு மற்றும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் கணிதத்தில் அம்மேதைகளின் முக்கியக் கண்டுபிடிப்புகளையும் ரத்தினச்சுருக்கமாக விவரிப்பதே ஆயிஷா இரா.நடராசன் தொடங்கிய “கணித மேதைகளின் பேஸ்புக்”. இந்தப் புத்தகத்தில் கணித மேதைகளின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் கணிதத்திற்கு அவர்கள் ஆற்றிய மாபெரும் பங்களிப்பையும் தனித்து விளக்குவது இப்புத்தகத்தின் சிறப்பு. *தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book... Continue Reading →

கீழடி – ஆராய்ச்சி முடிவுகள்

சமீபகாலமாக மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் சற்றே சலன அலைகளை பரப்பிய ஒரு வார்த்தையாகத் தான் இதைப் பார்க்கிறேன். கீழடி.. மத்திய அரசால் முடக்கப்பட்ட அகழ்வாய்வுப் பகுதியை தமிழ்நாடு அகழ்வாராய்ச்சிக் குழுத் துப்புரவாக ஆராய்ந்து, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக உலகை உலுக்கும் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. இந்த உண்மைகள் உலக அளவில் தமிழின் பெருமையை சற்றே உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக மக்களிடையே ஏனோ இது பெரிதாக பார்க்கப்படவில்லை. ஏன் அதைவிட... Continue Reading →

One Minute One Book – Book Tag

பொதுவாக book tag என்பது வாசிப்பின்போது பக்கங்களுக்கிடையில் குறித்துக் கொள்வதற்காக வைப்பது. இந்த book tag எல்லாம் ஒரு புத்தகத்தைப் பற்றிய சிறு குறிப்புகள் ஆகும். இவை அனைத்தும் one minute one book-ன் எழுத்தாளர்களால் தொகுக்கப்பட்டது. இது உங்களிடம் புத்தகத்தைப் பற்றிய தகவல் விரைவாக சேர எங்களால் ஆன ஒரு முயற்சி. இது எளிதில் வாசிக்கக்கூடியதாகவும் விரைவில் பகிரக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டது. மேலும் பல book tag-களை எங்களது pinterest பக்கத்தில் நீங்கள் காணலாம்..பகிரலாம்..! தேடல் தொடரட்டும்... Continue Reading →

தமிழ் மொழியின் சிறப்புகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்) நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள் என்று பெயரிடப்பட்டது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்... Continue Reading →

துப்பறியலாம் வாங்க!!!

விபத்து அல்லது கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரையும் போலீஸார் முதலில் தேடுவது தடயங்களை தான். நடந்த சம்பவம் இயற்கையானதா? இல்லை யாரவது இதில் சம்பந்தப்பட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் தான் அவர்களது தேடல் இருக்கும். தற்கொலையாக இருக்கும் பட்சத்தில் ஃபைல் க்ளோஸ். அதுவே கொலையாக இருந்தால், சம்பந்தப்பட்ட சம் எக்ஸ்-ஐத் தேடி கேஸ் நகரும். நிறைய டிடெக்டிவ் கதைகளை படிக்கும்போது நாமளே கூட கதையில கொலையாளியைக் கண்டுபிடிக்கும்போது சின்னதா ஒரு சந்தோஷம் வரும். உண்மைய சொல்லணும்னா துப்பறியறதுங்கறது... Continue Reading →

வெக்கை

"The novel questions the ethics of the politics of revenge." “கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு” இந்த கருத்து ஒரு பக்கம் இருக்க நகரவாசிகளாக நாம் கிராம மக்களை காட்டுமிராண்டிகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் பார்க்கவும், சித்தரிக்கவும் பழகிவிட்டோம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழத்தெரிந்த அவர்களே தமிழினத்தின் தொன்மை, மரபு, விவசாயம், பழக்கம், மனிதம், சாமர்த்தியம், கட்டுப்பாடு, வெறித்தனம் மற்றும் வீரம் சுமப்பவர்கள். சிதம்பரம் என்கிற 16 வயது சிறுவனையும் அவன் சுற்றங்களையும் மையமாக வைத்து 1980-களில்... Continue Reading →

கிறுக்கு ராஜாக்களின் கதை

சின்னதா இல்ல பெருசாவே கற்பனை பண்ணிக்கோங்க. உங்கள ஒரு நாட்டுக்கு ராஜாவா உக்கார வச்சு என்னவேணாலும் உத்தரவு போடுங்க மகாராஜானு கைகட்டி தலைகுனிஞ்சு உங்க முன்னாடி ஆயிரக்கணக்கான மக்கள் நின்னாங்கன்னா..(?) உங்க மனசுல என்னலாம் ஓடும்??? முறையான அரசாங்கம், அடிப்படை உரிமைகள் இருந்துமே நம்மள்ள பலபேர் நாட்டை கண்டபடி பேசறோம். ஆனா இப்ப இருக்கற அரசாங்கம் தலைவன், ராஜா, மகாராஜா, குடியரசுத்தலைவர்னு பரிணாம வளர்ச்சி அடைஞ்சதுதான். நாம கடந்து வந்த வரலாறு பல அப்பாவி மக்களோட இரத்தத்துமேல... Continue Reading →

ஓரெழுத்து சொற்கள்

தெரியுமா உங்களுக்கு..? தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம். அ -----> எட்டுஆ -----> பசுஈ -------> கொடு, பறக்கும் பூச்சிஉ ------> சிவன்ஊ -----> தசை, இறைச்சிஏ -------> அம்புஐ -------> ஐந்து, அழகு, தலைவன், வியப்புஓ ------> வினா, மதகு - நீர் தாங்கும் பலகைகா -----> சோலை,... Continue Reading →

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்

உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட சில முக்கிய தினங்கள் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு பொதுவாக சிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் நிகழும் சாதி, மதம், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதே இந்த தினங்களின் முக்கிய நோக்கமாகும். தினங்களை மட்டும் தனியாகக் குறிப்பிடாமல் அந்தத் தினங்களுக்குரிய காரணங்களும் சிறு குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தின்... Continue Reading →

கீழடி பதிப்பகம்

புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவரும் நம் காலத்தில் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனுடனே செலவு செய்கிறோம். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நம்மைச் சுற்றி பல முயற்சிகள் பலர் எடுத்தாலும் நம் பார்வை தொடுதிரையை விட்டு விலகுவதாக இல்லை. அடுத்த பெரும் முயற்சியாக மீண்டும் வாசிப்பை மேம்படுத்த காகிதப் புத்தகங்கள் பெரும்பாலனவை மின் புத்தகங்களாக மாற்றம் செய்யப்பட்டும், இணையத்தில் வெளியிடப்பட்டும் வாசிப்பின் மீதான கவர்ச்சியை ஈர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தும் மீம்ஸ், வதந்தி போன்ற கேலிக்கூத்துகளுக்கு... Continue Reading →

காற்று அடைத்த பையடா

சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →

சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்

கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும். This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician - Srinivasa Ramanujan.What is so great... Continue Reading →

இந்தியாவின் முக்கிய தினங்கள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சர்வதேச மற்றும் பன்னாட்டு தினங்கள் கொண்டாடப்படுவது போலவே, ஒவ்வொரு நாட்டிலும் சில சிறப்பான மற்றும் முக்கியமான தினங்கள் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளைப் போல நம் இந்தியாவிலும் தனித்துவமான மற்றும் முக்கியமான தேசிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. நாட்டிற்காகப் பாடுபட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பல தியாகிகளின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் ஆரம்பித்து நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று சம்பவங்கள் வரை நாட்கள் வாரியாகத் தொகுத்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். வெறும்... Continue Reading →

கண்ணன் பாட்டு

மகாகவி பாரதியின் முப்பெரும் பாடல்களில் ஒன்று, கண்ணன் பாட்டு. பண்டையக் காலத்தில் இறைவனைத் தலைவனாகவும், மற்ற பிற உயிர்களைத் தலைவியாகவும் பாவித்து இறைவன் ஒருவனே அவனை அடையும் மற்ற உயிர்களைப் பற்றி பாடல்களை எழுதி வந்தனர். புதுமை விரும்பியான மகாகவி பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தலைவியாகவும் பாவித்து பாடல்களைப் பாடியிருக்கிறார் மகாகவி. இவ்வாறு இறைவனாகிய கண்ணனைத் தன் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், சேவகனாகவும், சீடனாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், காதலனாகவும், காந்தனாகவும், ஆண்டானாகவும், கண்ணம்மாவைத் தன் குழந்தையாகவும்,... Continue Reading →

100/100 அறிவியல் : நேனோ தொழில்நுட்பம்

‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’                                          -டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம் 10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ்... Continue Reading →

மர்பி விதிகள் 1000

“புன்னகை புரியுங்கள். நாளை இதை விட மோசமாகத் தான் இருக்கும்.. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்.. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வயோதிகர்கள் தான் விரும்பிப் பார்ப்பார்கள்.. மாட்டிக் கொள்ளாத வரை எதுவுமே தவறில்லை..” லவ்வுல ஆரம்பிச்சு லைஃப் முடியற வரைக்கும் இடைப்பட்ட காலத்துல மனிதனோட அன்றாட வாழ்க்கையில அவனுக்கு தேவைப்படற(கொஞ்சம் நல்லா ஆக்ஸிஜனை இழுத்துட்டு வாசிக்க ஆரம்பிங்க) டெக்னாலஜி, கம்ப்யூட்டர், காமர்ஸ், ரியல்... Continue Reading →

இங்கு பஞ்சர் போடப்படும்

பைக்கு..பறபற..காரு..பறபற..லாரியே..பறன்னு எங்க பாத்தாலும் காரு, பைக்கு, லாரி, குட்டி யானைன்னு புகைய தள்ளிட்டு போயிட்டும் வந்துட்டும் இருக்கு. பரபரப்பான நம்ம வாழ்க்கையில இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த இரும்பு குதிரைகள் தவிர்க்கமுடியாததா இருப்பதாலேயே, கண்டிப்பா வாகனங்கள் சார்ந்த அனுபவங்கள் நிறைய  வந்து போயிருக்கும். இது எல்லாத்தையும் கலந்துகட்டி போட்ட கதைங்க தான் “இங்கு பஞ்சர் போடப்படும்”. மோட்டார் விகடனில் புதிய முயற்சியாக வெளிவந்த நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு இப்புத்தகம். அராத்து பற்றி சொல்லியே ஆகவேண்டும். இச்சம்பவங்களை நேரில் கண்ட... Continue Reading →

அதிசய வழக்கு விசாரணை

     முன்னொரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் பணக்காரன், மற்றொருவன் ஏழை.      ஒருநாள் ஏழைச் சகோதரனிடம் இருந்த விறகு எல்லாம் தீர்ந்துவிட்டது. கணப்பு அடுப்பில் எரிக்க அவனிடம் விறகு இல்லை.  குடிசையில் ஒரே குளிராகிவிட்டது.      அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டினான். ஆனால் விறகை வீட்டுக்கு எடுத்து வர அவனிடம் குதிரை இல்லை.      “சகோதரன் வீட்டுக்குச் சென்று இரவல் கேட்டு ஒரு குதிரை வாங்கி விறகை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று... Continue Reading →

திருப்பம்

சிறுகதைகள் சிறியவையாக இருந்தாலும் சிறிது சிந்திக்கத் தூண்டும். இந்தத் திருப்பமும் உங்கள் வாழ்வின் திருப்பங்களை நினைவு கூறச் செய்யும். நாம் எடுக்கும் முடிவுகளின் வேறொரு பரிணாமத்தை அலசும் இந்தக் கதை ஒரு வேலையில்லாப் பட்டதாரியை மையமாகக் கொண்டது. ஆசிரியர் கூற்று.. “சுட்டெரிக்கும் வெயில் போல், சுட்டெரிக்கும் உண்மைகளையும் உணர்வுகளையும் வெளி கொண்டு வர துடிக்கும் கலைஞன் நான்...”                                                                   -வெயில் தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன். #one minute one book... Continue Reading →

அடிப்படைக் கணக்குகள்

நம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு இன்றியமையாதது. வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து நாட்டிற்குத் தேவையான பட்ஜெட் போடறது வரைக்கும் கணக்கு நம்ம எல்லாருக்கும் தேவை. அதனால தான் பள்ளிப் பாடங்களையும் தாண்டி, போட்டித் தேர்வுகளில் கூட கணக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. எண்ணியலின் மூலமான அளவைகளில் ஆரம்பித்து, லாப-நட்டக் கணக்குகளைக் கடந்து, அளவியலில் சற்று அளவளாவி, இயற்கணிதத்தைக் கொஞ்சம் சுவைத்து, தர்க்க அறிவைப் பயன்படுத்தி சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது “அடிப்படைக் கணக்குகள்”. ஃபார்முலாக்களை எளிய... Continue Reading →

இந்த இரவு முடியாது

சிறுகதைகள் எப்போதும் நம்மை ஆழ்ந்து வாசிக்க செய்யும். காரணம் அது முடிக்க சிறு கால அவகாசம் போதுமானது. ஒரு தொடர் நாவலை விட மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் குறைவு. அதுவே பல உணர்ச்சிகளுக்கு நம்மை தள்ள போதுமானது. எழுத்தாளர் ஊதா மூங்கில் நம்முள் திகில் மற்றும்  கிலி போன்ற உணர்ச்சிகளை ஜெனி என்ற பெண்ணின் ஓர் நடு இரவு அனுபவத்தைக் காட்சிப்படுத்தியதின் வழியே மேலோங்கச் செய்கிறார். நிச்சயம் அமானுஷ்ய விஷயங்கள் பயன்படுத்தப்படவில்லை. என்னவென்று... Continue Reading →

புத்தகம் படிப்பது எப்படி?

ஒரு புத்தகத்தை ஏன் வாசிக்கணும்? புத்தகம் வாசிக்கறதுனால நமக்கு என்ன கிடைக்கும்? எந்த மாதிரி புத்தகங்களை வாசிக்கலாம்? ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்கணும்? ஏன் சில புத்தகங்கள் பல நூறு ஆண்டுகளைத் தாண்டியும் வரலாற்றில் பேசப்படுது? இந்த மாதிரி கேள்விகளை நீங்களும் நிறைய இடத்தில் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஏன் உங்களுக்குள்ளேயே கூட இந்தக் கேள்விகள் முளைத்திருக்கலாம். உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்றது தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'புத்தகம் படிப்பது எப்படி'ங்கற புத்தகம். வர்ஜினியா வுல்ப் என்ற... Continue Reading →

ஒரு பக்க கதை!!

குங்குமம் இதழில் கடைசிப் பக்கத்தைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது நிதர்ஸனா எழுதிய ஒரு பக்க கதைகள். நம்மிடையே பரவி இருக்கும் சில சூழ்நிலைகள், சம்பவங்கள், கேள்விப்பட்ட கதைகள் போன்றவைகளின் ஒரு பக்க தொகுப்பே இந்த கதைகள். அதிக நேரம் பிடிக்காமல் சுவை பட வாசிப்பவர்களை சிந்திக்க வைக்கும் ஒன் லைன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. இந்த தொகுப்பு எங்கிருந்து கிடைத்தது என தெரியவில்லை ஆனால் உங்களுக்கும் பகிர்கிறேன், லாப நோக்கம் இல்லை. கீழே உள்ள டிரைவ் லிங்க்கைத்... Continue Reading →

வாவ் 2000

“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான்! வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி! இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர்! தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன்! அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன்! பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்! மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்!” இன்னும்... இன்னும்...... Continue Reading →

செம்பு மரங்களின் மர்மம்

‘நினைவுகளின் சங்கிலி’ என்ற அசாதாரண கூற்றை மையமாக வைத்து கோனன் டாயல் உருவாக்கிய ஒரு துப்பறியும் கதாப்பாத்திரம் ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’. இவரது கதைகள் அவரது நண்பர் வாட்சன் பார்வையில் கதை நகரும் விதத்தில் அமைந்திருக்கும். புகழ்பெற்ற துப்பறியும் கதாப்பாத்திரத்தின் கதைகளில் தென்றல் சோமுவின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒன்று ‘செம்பு மரங்களின் மர்மம்’. வினோத நிபந்தனைகளுடன் தனக்கு வந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய இளம்பெண் தனது பாதுகாப்பு சார்ந்து உதவியைத் தேடி ஷெர்லாக்கை சந்திக்கிறார். தன் வசிப்பிடத்திலிருந்து... Continue Reading →

செயற்கைக்கோள்-எப்படி இயங்குகிறது?

இந்திய மண்ணில் ஏவிய சந்திரயான்-1, சந்திரயான் 2 மற்றும் மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் நம்மில் பிரபலமானவை. இவைகளை ராக்கெட்டில் ஏற்றி வழியனுப்பி வைப்பதை மட்டுமே பார்த்திருப்போம். இவைகளைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து வைத்துக் கொள்ள ஆர்வம் இருந்தாலும் நம்மில் பல பேருக்கு ‘கடினம்’ என்ற வார்த்தைக்கு ‘ராக்கெட் சயன்ஸ்’ என்பதை மாற்றாக வைத்துள்ளோம். கூகுள் செய்தாலும் புரிந்து கொள்ள எளிதாக இல்லை. என்னதான் செய்கிறார்கள்? என்னதான் செய்கிறது இந்த செயற்கைக்கோள்கள்? மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தத் துணைக்கோள்கள் ராக்கெட்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑