நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →

மெலூஹாவின் அமரர்கள்

மெலூஹா! உன்னத வாழ்வை உணர்ந்த தேசம்.. மெலூஹாவில் வாழும் மக்கள் சூர்யவம்சிகள். சூரியனின் வழிவந்த அரசர்களின் மக்கள். நேர்மையானவர்கள். அரசின் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் மதித்து வாழ்பவர்கள். தீமையின் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற முக்கியமான ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெலூஹர்களிடம் வந்து சேர்கிறார், சிவன். சோமரஸத்தின் உதவியால் நீலமாக மாறிய சிவனின் கழுத்து. நீலகண்டர்.. தீமையை அழித்துத் தங்களை உய்விக்க வந்த கடவுளாகவே சிவனைக் கருதும் சூர்யவம்சிகள் சிவனிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர். கடவுளாகவே இருந்தாலும் காதல் வயப்படுவது இயல்பே.... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑