நந்திபுரத்து நாயகி

Spoiler Alert..! பொன்னியின் செல்வனுக்கு பிறகே இந்தப் புத்தகத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சூழ்நிலை காரணமாக உடனே எழுத வேண்டியதாகிவிட்டது. இதுவரை பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்காத வாசகர்கள், அதை முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அருண்மொழிவர்மன் தன்னுடைய சித்தப்பாவிற்கு முடிசூட்டியவுடன் அவரை, கடல் கடந்த நாட்டிற்கு சிலகாலம் அனுப்பி வைக்கிறாள் குந்தவை. அந்த நேரத்தை உபயோகப்படுத்தி நடக்கும் சில சம்பவங்களும் அருண்மொழி நந்திபுரம் வந்தபிறகு நிகழும் சில சம்பவங்களுமே இந்தக் கதை.... Continue Reading →

கோச்சடையான்

கோச்சடையான் | நரசிம்மவர்மன் | பதுமகோமளை | பரமேஸ்வர பல்லவர் இந்த நாலு பேரையும் இணைக்கிறது சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் பல்லவ சாம்ராஜ்யத்தில் பெரும்படையோடு ஊடுருவி சின்னாபின்னமாக்கினான் புலிகேசி புதல்வன். பல்லவ கட்டுப்பாட்டில் இருந்த உறையூர் அரண்மனை சாளுக்கிய சேனையின் உறைவிடமானது. பல்லவ அரச வாரிசுகளும், விசுவாசிகளும் தலைமறைவானார்கள். பெரும்படையை கையில் கொண்டு உறையூரைச் சுற்றி இருந்த குறுநில மன்னர்களை மிரட்டி வாழ்வாதாரத்தைச் சூறையாடினான் புலிகேசி புதல்வன். தமிழ் மண்ணில் அந்நியன் ஒருவன் ஆளுவதா?... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑