நிறைய பேருக்கு 10,+2 முடித்தவுடன் மேற்படிப்பில் தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமும் அச்சமும் ஏற்படும். காரணம் எந்தப் படிப்பு படித்தால் நமக்கு பிடித்த வேலைக்குச் செல்ல முடியும் என்பது மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் குழப்பலாம். இன்ஜினியரிங் எடுத்துப் படித்தால் வருங்காலம் சிறப்பாக இருக்கும், ஆர்ட்ஸ் எடுத்துப் படித்தால் குறைவான வருமானத்தில் தான் வேலை கிடைக்கும், டாக்டர் படிப்பிற்கு நல்ல மதிப்பெண்கள் தேவை என்பது போல் நிறைய மனிதர்களின் தலையீடு... Continue Reading →
நம்(ண்)பர்கள்
கணக்கு என்றவுடனே நிறைய பேருக்கு கசப்பாக இருக்கும். அதிலும் கணக்கின் வழியாக புதிர்கள் என்றால் எப்படி இருக்கும்..? ஒரு புதிர் வழியாக கணக்கை ஈஸியாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும். அதற்கு சான்று தான் என்.சொக்கன் அவர்கள் எழுதிய நம்(ண்)பர்கள் என்கிற கணிதப் புதிர் புத்தகம். கதைகளின் மூலம் கணிதத்தை எளிமையாக விளக்குவதே இப்புத்தகத்தின் சிறப்பு. விடைகள் விளக்கத்துடன் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்திருப்பதிருப்பது இப்புத்தகத்தை மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. #one minute one book #tamil... Continue Reading →
நெடுநல்வாடை
சங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டின் கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் “நெடு நல் வாடை”. வடக்கிலிருந்து வரும் காற்று ‘வாடை’ என்றழைக்கப்படும். ‘நெடு’ என்பது நீண்ட நாளையும், ‘நல்’ என்பது நல்லது என்பதையும் குறிக்கிறது. அளவுக்கு அதிகமான குளிர் அடிக்கிறது, அதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அரண்மனையில் தனியாக இருக்கும் தலைவி, போருக்கு சென்றிருக்கும் தலைவனை எண்ணி அவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கிறாள் என்பதையும் மிக அழகான வரிகளில் வார்த்தைகளைக் கோர்வையாக்கி வரிகளை... Continue Reading →
பிளஸ் 1
புத்தகத்தோட பேரைப் பாத்த உடனே எல்லாரும் விழுந்தடிச்சிட்டு ஓடாதிங்க.. இது கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரி ஸ்கூல் புத்தகம் இல்லீங்க.. உங்களோட ஆளுமைப்பண்பை வளத்துக்க உங்களுக்கு கிடைச்ச அரிய பொக்கிஷம். மொதல்ல ‘ஆளுமைப்பண்பு’ அப்படின்னா..? உங்களோட கேள்வி எனக்கு நல்லாவே புரியுது. தனிப்பட்ட ஒருவரின் சிறந்த நடத்தையும், செயல்பாடுமே ஆளுமைப்பண்பு. உதாரணத்துக்கு நீங்க இப்ப ஒரு சாதாரண வேலைல இருக்கீங்க, அந்த இடத்துலருந்து உயர்வான எடத்துக்கு நீங்க போகணும்னு ஆசைப்படறீங்க. ஆனா, அதுக்காக நீங்க எந்தளவுக்கு உழைக்க... Continue Reading →
கதை சொல்லும் பாடங்கள்
இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வழியாகவும், ஒரு பிரச்சினையை ஒவ்வொருவரும் அணுகும், வெவ்வேறு விதமான கோணங்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன். சிறு வயதில் அறியாமல் செய்த தவறினால் விளையும் துன்பங்களுக்கு எடுத்துக்காட்டாக அனுபமா கதாப்பாத்திரமும், மற்றவர்களைத் தன்னுடைய பேச்சுத் திறமையால் தோற்கடித்த மூதாட்டி கதாப்பாத்திரமும், தன்னுடைய கணவனின் மனைவிக்காக பரிதாபப்படும் சரளா கதாப்பாத்திரமும், சம்பாதித்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த ரஷீத் கதாப்பாத்திரமும், மற்றவர்கள் விசயத்தில் மூக்கை நுழைத்து குளறுபடி செய்யும் ராமதுரை கதாப்பாத்திரமும்,... Continue Reading →
புக் மார்க்ஸ்
‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது? அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள். பனையை குறிக்கும் தமிழ் சொல் ‘போந்து’ பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறி, ’பொத்து’ எனக் குறுகின. அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள். தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம். அதன்படி, ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது. ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான... Continue Reading →