ஒன்றில் இருந்து பத்துக்குள் ஒரு எண்ணை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவை முடிக்கும் வரையில் அந்த எண்ணை மறக்காமலும் மாற்றாமலும் வைத்திருங்கள். பலன் பதிவின் இறுதியில்... வாசகர்களே..! நீண்ட நாட்களுக்குப் பிறகு பெலுடா கதை வரிசையில் ஒரு தாறுமாறான விறுவிறுப்பான நாவல். உங்களுக்காக! காணாமல் போனதாக சொல்லப்படும் அந்த பொருள் இரண்டே அங்குலம் உயரம் உள்ள பிள்ளையார் சிலை. ஆனால், அது ஒரு அசாதாரண கலைப்பொருள். அதன் நடுவில் இருக்கும் பச்சை நிற வனஸ்பதி... Continue Reading →
மரண வீடு
புராதன ஓலைச்சுவடிகள் நாட்டுடைமையாக மாற்றப்படாமல் போனதால் சிலருக்கு சொத்துக்களாகவும், சிலருக்கு சந்தைப் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது. இம்முறை ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் பாபு மூவரும் தங்கள் விடுமுறை தினங்களைப் பூரியில் களிக்க கடற்கரை விடுதியில் தங்கினர். அதிகாலை கடற்கரை நடையில் பயணம் ஒரு பிணத்திற்கு அருகே சென்று நின்றது. போலீசிற்கு தகவல் சென்றது. மர்மங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓய்வினைத் தொடர்ந்தார் ஃபெலுடா. தபேஷ் சுற்றுப்புற விசித்திரங்களைத் தலையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். புராதன ஓலைச்சுவடிகள் வைத்திருந்த சென். நெற்றியில் கைவைத்து எதிர்காலம்... Continue Reading →
தேவியின் சாபம்
ஓய்வைக் கழிப்பதற்காகத் தன் நண்பரின் அழைப்பை ஏற்று ஹஸாரி பாகில் தங்குவதற்கு முடிவு செய்கிறார் ஃபெலுடா. ஹஸாரி பாக் பயணத்தின்போது அறிமுகமான சௌதுரி தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு ஃபெலுடாவிற்கு அழைப்பு விடுத்தார். ஹஸாரி பாகிற்கு வந்து சேர்ந்ததும் தொப்ஷேவிற்கும் கங்குலிக்கும் எதிராக புலி ஒன்று தோன்றி மறைந்தது. அப்பொழுதுதான் தி கிரேட் மெஜஸ்டிக் சர்க்கஸிலிருந்து புலி தப்பித்த செய்தி கிடைத்தது. அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்ட ஃபெலுடா, சௌதுரி வீட்டு விழாவிற்கு செல்கிறார். அங்கே தான்.. ஓய்வுப் பயணம்... Continue Reading →
கைலாஷில் ஒரு கொலையாளி
இந்தியாவின் புராதன சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்கு விற்கும் ஒரு கும்பலைத் தேடிப் புறப்படுகிறார் ஃபெலுடா. குற்றவாளியிடம் இருக்கும் தலையில்லாத யக்ஷி சிலையைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு விமான விபத்து ஏற்படுகிறது. இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான மல்லிக் அவுரங்காபாத் புறப்பட்டுச் செல்ல அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலுடாவிற்கு மல்லிக்கின் நோக்கம் தெரியவருகிறது. அதே நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக அங்கே வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வருகிறார் ஃபெலு. இவை அனைத்தையும்... Continue Reading →
காத்மாண்டு கொள்ளையர்கள்
காத்மாண்டுவில் தான் வேலை செய்வதாகவும், தன்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இன்னொரு நபர் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன்மேல் பழிவரச் செய்ய எண்ணுவதாகவும் ஃபெலுடாவிடம் கூறிய பத்ரா தனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறார். அன்று இரவே அணிகேந்திர சோம் என்பவர் ஃபெலுடாவிற்கு போன் செய்து அவரை சந்தித்து ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதையும் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளே அணிகேந்திர சோம் கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்க ஃபெலுடா, தொப்ஷே... Continue Reading →
பம்பாய் கொள்ளையர்கள்
ஜடாயு எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தை இந்தியில் படமாக்கவிருப்பதால் லால்மோகன் கங்குலியின் அழைப்பை ஏற்று அவருடன் பம்பாய்க்கு விரைகின்றனர் ஃபெலுடா மற்றும் தபேஷ். கூடவே ஒரு பார்சலை கொடுத்து பம்பாயில் இருக்கும் ஒருவரிடம் சேர்ப்பிக்குமாறு கங்குலியிடம் உதவி கோருகிறார் சன்யால். அங்கு காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் உற்சாகத்துடன் இருந்த கங்குலியிடமிருந்து பார்சலை வாங்கி சென்றவன் திடீரென கொலை செய்யப்படுகிறான். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்தது கங்குலியின் அடையாளக் குறிப்புகள் அடங்கிய ஒரு பேப்பர் கிடைக்க, இங்கிருந்து... Continue Reading →
கேங்டாக்கில் வந்த கஷ்டம்
யமன்தக் – 9 தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய கடவுள். ஃபெலுடாவும், தொப்ஷேவும் மியூசியத்தில் யமன்தக் சிலையைப் பார்த்தபோது அதன் தோற்றம் இருவருக்கும் சற்று கலக்கமாகத்தானிருந்தது. யமன்தக் - திபெத்திய கடவுள்(Yamantaka) இந்த முறை இருவருக்கும் விடுமுறை சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் தொடங்கியது. யமன்தக் சிலையை வைத்திருந்த ஷெல்வான்கரைச் சுற்றி பல மர்ம பின்னல்கள் இருந்தது. விபத்துக்குள்ளாகி ஷெல்வான்கர் இறந்த பிறகு அவரிடம் இருந்த அந்த திபெத்திய கடவுள் சிலை மாயமாக மறைந்து போனது. விபத்து... Continue Reading →
மகாராஜாவின் மோதிரம்
பயணம் செய்வது பலருக்குப் பிடித்த ஒரு செயல். அப்படியான லக்னோவை நோக்கிய பயணத்தின் போது, தான் எதிர் கொண்ட நிகழ்வை சொல்ல ஆரம்பிக்கிறான் தபேஸ். லக்னோவிற்கு கிளம்பும் அன்றைய பொழுது, ஃபெலுவிற்கும் ஒருவித ஆர்வம் தொற்றிக்கொண்டிருந்தது. அழகான நகரம் அவர்களுக்கு மறக்க முடியாத சம்பவங்களை அள்ளி தர இருக்கின்றது என யாரும் அறிந்திருக்கவில்லை. தொடக்கப்புள்ளி, ஔரங்கசீப்பின் விலைமதிப்பற்ற மோதிரம். பல மனிதர்கள் கதையில் தலையிட, அதில் ஒரு மருத்துவருக்குப் பழமையான பொருட்களை சேகரிக்கும் ஒரு மனிதரால் வெகுமதியாக... Continue Reading →
அனுபிஸ் மர்மம்
வரலாற்றின் பழமையான பொருள்கள் மீது ஆர்வம் கொண்ட நீலமணி சன்யாலுக்கு வந்தது ஓவிய வடிவ எழுத்துக்களாலான ஒரு கடிதம். அதில் உள்ள குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியாததால் ஃபெலுடாவின் உதவி நாடுகிறார், சன்யால். அவருடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்ற ஃபெலு பாபு அது எகிப்து முறைப்படி எழுதப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் என்பதைக் கண்டுபிடிக்கிறார். மேலும் நீலமணி பாபு ஏலத்தில் புதிதாக வாங்கிய எகிப்து கடவுளான அனுபிஸ் என்ற சிலையை ஃபெலுடாவிடம் காட்ட, சிலைக்காக ஒருவேளை மிரட்டல்... Continue Reading →
மர்மமான ஒரு குடித்தனக்காரர்
ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த சுபிர் தத்தாவின் அண்ணன் நிஹார் தத்தா, அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற உயிர்ம வேதியல் விஞ்ஞானி. லேபில் வேலை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பார்வையை இழந்துவிட்டார். அப்படியே அவருடைய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியும் நின்று விட்டது. இதனிடையில் ஒரு மர்ம நபர் நிஹாரின் அறைக்குள் நுழைந்து எதையோ தேடிய விவரம் சுபிருக்குத் தெரியவர ஃபெலுடாவிடம் உதவி கேட்டு வருகிறார், சுபிர். அழைப்பை ஏற்று சுபிர் வீட்டிற்கு சென்ற ஃபெலுடாவிடம், தன்னுடைய வீட்டில்... Continue Reading →
வங்கப்புலி மர்மம்
கிழவனின் பொந்து தொடர வேண்டிய நடை மக்களின் மரம் பத்தில் பாதி அதிலும் பாதி நூறு உயரும் சூரியன் காரியம் முடிந்தால் தெரியவில்லையா உனக்கு? கைகளின் நடுவே அதற்கும் கீழே நிற்பது எதுவோ அது உனக்கேதான்! ------------------------------------------------------------ புகழ்பெற்ற வேட்டைக்காரரான ஜமீன் மஹிதோஷ் சின்ஹாராய் தன்னுடைய குடும்ப வரலாற்றைப் புத்தகமாக எழுதத் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தபோது அவருக்கு கிடைத்தது ஒரு புதிர்க் கடிதம். அந்தப் புதிரை அவிழ்க்க ஃபெலுடாவிடம் உதவி கோரினார், மஹிதோஷ் பாபு. அழைப்பை ஏற்று காடுகள்... Continue Reading →
தங்கக் கோட்டை
சுகிர்தாரின் மகன் முகுலிற்கு முன்ஜென்ம நினைவுகள் திரும்பிய அதிசயத் தகவல் செய்தித்தாளில் படுஜோராக கிளம்ப, ஒரே நாளில் பேமஸ் ஆனான் முகுல். அவனுடைய முன்ஜென்மத்தில் தங்கக் கோட்டைக்கு அருகிலிருந்த அவன் வீட்டிற்கு கீழே ஒரு புதையல் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தங்கக் கோட்டையைக் காண ஆவலுடன் இருந்த முகுலை ஒரு புகழ்பெற்ற ஆழ்மன உளவியலாளருடன் ஜோத்பூர் அனுப்பி வைக்கிறார் சுகிர். புதையலை எடுக்க முயலும் ஒரு கும்பல் அவன் சாயலில் இருந்த நீலுவைத் தவறுதலாகக்... Continue Reading →
கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்
கிருஸ்துமஸ் விடுமுறையை எதிர்நோக்கியிருந்த ஃபெலுடாவிற்கு அழைப்புக் கடிதம் வந்தது கைலாஷ் சௌதுரியிடமிருந்து. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த கைலாஷ் சௌதுரி ஒரு வக்கீல், வேட்டைக்காரரும் கூட. சில நாட்களாக இரவில் தூக்கமின்றி, கையில் துப்பாக்கியுடன், எப்போதும் ஒரு வித கவலையில் ஆழ்ந்திருந்தார். அவரது கவலைக்கு காரணம், அவரிடமிருந்த கண்களைக் கூசும் ஒளி வீசக்கூடிய நீலமேக வண்ண இரத்தினக்கல். அதை ஒப்படைக்குமாறு ஒரு மிரட்டல் கடிதமும், தொலைபேசி அழைப்பும் வர கைலாஷ் சௌதுரி கதிகலங்கிப் போகிறார். இந்நிலையில் ஃபெலுடாவிடம் உதவி... Continue Reading →
நெப்போலியன் கடிதம்
“என்னோட கிளியைத் திருடியவனை உங்களால கண்டுபிடித்து தர முடியுமா..?” சவால் விடும் ஆறு வயது சிறுவனுக்காக கேஸை அணுகும் ஃபெலுடாவிற்கு பழம்பெரும் பொக்கிஷங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. கிளியின் கூண்டில் இருந்த ரத்தம். போன இடத்தில் நடக்கும் கொலை!! கொலையானது சிறுவனின் தாத்தா. கொலையாளி யார்? கொலையாளியை பிடிக்க விரையும் ஃபெலுடா, கண் முன்னே மாயமான குற்றவாளி. சிக்கல்கள் அடுக்கி கொண்டே போக, காணாமல் போன வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷம். அந்த பொக்கிஷம் நெப்போலியனின் கடிதம்.... Continue Reading →
பூட்டிய பணப்பெட்டி
‘ஒன்று இரண்டு.. ஷூவைப் போடு.. மூன்று நான்கு.. கதவை மூடு.. ஐந்து ஆறு.. குச்சியை எடு.. ஏழு எட்டு.. கதவைத் திற.. ஒன்பது பத்து.. ஒரு பெரிய தடித்த கோழி.. பதினொன்று, பன்னிரெண்டு.. தோண்டு, துளாவு..’ ------------------------------------------------------------------------------------ ஃபெலுடாவிற்கு முதியவர் ஒருவரிடமிருந்து வந்த கடித அழைப்பை ஏற்று கல்கத்தாவிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிளாசிப் போர் நடந்த கிராமத்திற்கு செல்கிறார். அழைப்பின் நோக்கம் புதிரின் முடிச்சை அவிழ்ப்பதற்கான சவால். விடைக்கு பரிசாக ஃபெலுடாவிற்கு கிடைக்க இருப்பதோ கிடைப்பதற்கரிய... Continue Reading →
சாவி
கருமியான(கஞ்சமான) ஒரு இசைக்கலைஞர் இறக்கும் தருவாயில் கூறிய புதிர் வார்த்தையின் பின்னணியில் இருந்தது ஒரு ரகசியம். ரகசியமறிய உதவி கேட்டவரின் ஆவல் ஃபெலுவிற்கும் வர ரகசியத்தின் பாதையில் கதை நகருகிறது. இசைக்கலைஞரின் வீடு அபூர்வ இசைக்கருவிகளால் நிரம்பியுள்ளது ஃபெலுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழப்பத்தில் சிக்கியிருந்த கதையின் நடுவில் அபூர்வ இசைக்கருவிகளை வாங்க வந்த புதிய நபரின் தகவல்கள் ஃபெலுடாவின் உள்ளுணர்வை எழுப்பியது. சிறுவனின் தகவல் ஃபெலுவை ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்க தூண்டுகோலாக அமைந்தது. கதையும் நகர புதிரும்... Continue Reading →
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்
புராதன பொருட்களின் மீது ஆர்வமுள்ள ராஜன் பாபுவிற்கு வந்து சேரும் ஒரு கடிதம் அவரை திகிலடையச் செய்கிறது. திகிலுக்கு காரணம் அதிலிருந்த வார்த்தைகள் மட்டுமில்லை. அந்தக் கடிதம் எழுதப்படாமல், செய்தித் தாள்கள் மற்றும் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து ஒட்டப்பட்டிருந்தது. இதன் மர்மம் புரியாமல் தன் நிம்மதியை இழந்து கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு உதவ ஃபெலுடா அவ்விடம் வந்தார். அவரது சந்தேகப் படலம் ராஜன் பாபுவிற்கு பரிச்சயமான மூன்று பேரின் மீது விரிகிறது, கூடவே அவரது முதல் துப்பறியும்... Continue Reading →
ஃபெலுடா
‘டிடெக்டிவ்’னு சொன்னதும் சிலருக்கு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் (Sherlock holmes), சினிமாப் பிரியர்களுக்கு கணியன் பூங்குன்றனும் புத்தில வந்து போவாங்க. ஃபெலுடா.. சிலருக்கு இந்தப் பெயர் அறிமுகம் இல்லாததாகவும், சிலருக்கு அபிமான கதாப்பாத்திரமாகவும் தோன்றலாம். வங்காள எழுத்தாளர் சத்யஜித் ரேவின் தொடர்களிலும், நாவல்களிலும் பயன்படுத்தப்பட்ட பிரபலமான கதாப்பாத்திரம் தான் ஃபெலுடா. சாதாரணமாக வங்கியில் வேலை செய்யும் இளைஞன், துப்பறியும் கதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவே தனது திறமைகளையும் சேர வளர்த்துக்கொள்கிறான். விடுமுறையில் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த நாட்களில் தற்செயலாக,... Continue Reading →