The Secrets of Dark Psychology

The Secret of dark psychology book in Tamil. Kukufm audiobook explains in a minute.support oneminuteonebook

Come Back..

வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும். புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய முயற்சிகளும் செய்ய உள்ளோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். #oneminueonebook #tamil #book #review #novels #bookreading... Continue Reading →

தாலிபன் : ஓர் அறிமுகம்

#paragavan #taliban_oor_arimugam அந்த நடுநிசி நேரத்தில்.. தெருவில் இரண்டு பெண்களை பெயர் தெரியாத ஏதோ ஒரு போராட்டக் குழு வன்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இது நடந்தது ஆப்கானிஸ்தானில். தன் கண் முன்னே விரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து, அந்த நிமிடம் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது அந்த இளைஞன் ஓமரால். தன்னுடைய நாட்டின் மோசமான நிலையை எண்ணி கலங்கிய ஓமர் அடுத்த நிமிடம் குதிரையில் அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தார். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முடிந்தவரை ஆப்கானிஸ்தானை வைத்துப் பந்தாடிச் சென்ற... Continue Reading →

விதைகள் எங்கே போகின்றன..?

மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?"நெகிழி"வேறு பதில்.."இரப்பர்"வேறு............ என்னைக் கேட்டால் என் பதில்.."விதை".மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த "விதைகள் எங்கே போகின்றன?"குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.... Continue Reading →

சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்

கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும். This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician - Srinivasa Ramanujan.What is so great... Continue Reading →

நினைவாற்றல் பெருக மனப் பயிற்சிகள்

மனிதன் தனக்காக சேர்த்து வைப்பது ஒன்றுதான் நினைவுகள்(memories)... நினைவாற்றல் மிக்கவர்கள் அதிகமான துறைகளில் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நினைவாற்றல் சற்றே குறைவான சிலர் தாழ்வு மனப்பான்மையில் மேலும் மறதிக்கு தீனி போடுகிறார்கள். ஆனால் மறதி ஒரு கவனக்குறைவே ஒழியகுறைபாடில்லை என பி.எஸ்.ஆச்சாரியா இந்த புத்தகத்தில் நினைவாற்றல் பற்றிய விளக்கங்களையும் அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் எழுதியுள்ளார். #one minute one book #tamil #book #review #p.s.aachariya #ninaivaatral peruga mana payirchigal #memory power increasing practices... Continue Reading →

வாவ் 2000

“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான்! வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி! இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர்! தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன்! அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன்! பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்! மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்!” இன்னும்... இன்னும்...... Continue Reading →

திருப்பாவை

வைணவர்கள் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவர் பாடிய திருப்பாவை, 30 பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கி, 30 நாட்கள் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருந்து, மாதவனை வேண்டிப் பாடுவதே திருப்பாவை. பாவை நோன்புக்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் எல்லாப் பெண்களும் கடைபிடிக்கக் கூடியவை. கன்னிப் பெண்கள் பொழுது விடியுமுன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி மாதவனைத் துதித்து வழிபடுவர். நோன்புக் காலத்தில் பெண்கள்... Continue Reading →

கிமு.கிபி.

ஒரு ஊர்ல “குரங்குல இருந்து மனுஷன் வந்தான்”னு ஒரு கூட்டமும், “ஆதாம் ஏவாளுக்கு பொறந்தவங்க தான் மனுசங்க”ன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு சண்டை போட, பஞ்சாயத்து முத்தி போக ரெண்டு டீமும் நாட்டாமை கிட்ட போனா............அந்தாளு “ஆதாரம் இருக்கா”ன்னு கேட்க, எலுமிச்சம்பழத்தை நசுக்கி பயணத்தை ஆரம்பிக்குது கிமு. கிபி. பயணத்திட்டம்.. சாயங்காலம் லூசி கூட கடல் காத்து வாங்கிட்டு, நைல் நதி ஓரமா டென்ட் போட்டு தங்கிட்டு, காலைல எகிப்து போயி மம்மி கூட செல்பி எடுத்திட்டு,... Continue Reading →

100/100 அறிவியல் : மரபியல்

ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க..? ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →

ஊச்சு..

பயம் மனித உணர்வுகளில் ஒன்று. அட்ரீனலினும், என்டோகிரைனும் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயம் பரவும். இருந்தாலும் திகிலடைவதும், பயமுறுவதும் ரசிக்கத்தக்கதாக மாறிவருகிறது. இரவு 8:30. மேல்பாறை வனப்பகுதியில் நடக்கும் திருவிழாவினை ஆவணப்படம் எடுக்கச் செல்கின்ற நால்வர், தங்கள் திட்டத்திலேயே இல்லாத சில சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அமாவாசை இருளில் தொலைந்து போகின்றனர். அர்ஜூன்-காவல்துறை அதிகாரி. தனது விசாரணையை மேல்பாறை மக்களிடம் இருந்து தொடங்கினான். "முனி அடித்திருக்கும்" "ஓநாய் கொன்றிருக்கும்" என பல கதைகள் அவனின் தைரியத்தை உலுக்கிப்... Continue Reading →

யாருக்கும் வெட்கமில்லை

‘சோ’ இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. இவர் பேனா புரட்சியையோ, பகுத்தறிவையோ, நம்பிக்கையையோ சார்ந்து எழுதவில்லை. இவர் எடுத்திருப்பது உண்மைகளையே. அதோட பிம்பங்கள்ள ஒண்ணுதான் “யாருக்கும் வெட்கமில்லை”. இதப் பாத்ததும் பலருக்கு பலவித எண்ணங்கள் அல்லது ஒரு நிமிஷம் உங்கள நிறுத்தி கூட இருக்கலாம். அதுதான் உண்மையோட மேஜிக். “உண்மை பேசும் தைரியம் இந்த சோ ராமசாமிக்கு அதிகம்” என அவருடைய முன்னுரை எழுத்துக்களை வெச்சே நிரூபிச்சிருப்பார். இக்கதை எளிமையான குடும்ப சூழலில் தொடங்கி பெண்ணியத்தையும், சமூகப்... Continue Reading →

வெக்கை

"The novel questions the ethics of the politics of revenge." “கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு” இந்த கருத்து ஒரு பக்கம் இருக்க நகரவாசிகளாக நாம் கிராம மக்களை காட்டுமிராண்டிகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் பார்க்கவும், சித்தரிக்கவும் பழகிவிட்டோம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழத்தெரிந்த அவர்களே தமிழினத்தின் தொன்மை, மரபு, விவசாயம், பழக்கம், மனிதம், சாமர்த்தியம், கட்டுப்பாடு, வெறித்தனம் மற்றும் வீரம் சுமப்பவர்கள். சிதம்பரம் என்கிற 16 வயது சிறுவனையும் அவன் சுற்றங்களையும் மையமாக வைத்து 1980-களில்... Continue Reading →

எளியோருக்கான சட்டங்கள்..!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி? வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? இரயில் விபத்து... Continue Reading →

ருத்ரவீணை

“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” அன்று! 300 வருடங்களுக்கு முன்பு..கண்களில் தேஜஸ், தளர்ந்த நடை, தோளில் சுமை, அதில் பெருமை வாய்ந்த வீணையுடன் தஞ்சாவூர் வீதிகளில் தோடிபுரத்திற்கு வழிதேடி அந்த இஸ்லாமியர் அலைந்து கொண்டிருந்தார். நாத அதிபதி தோடீஸ்வரன் குடிகொண்டிருக்கும் வறண்ட பூமியாக இருந்த தோடிபுரத்தை வந்தடைந்த அந்த மாயாஜால மனிதரை அனைவரும் பாபா என்றழைத்தனர். அவர் சுமந்துவந்த வீணை சாதாரண வீணை அல்ல, அந்தப் பரமனே தனது இணையான உமையை வைத்து உருவாக்கிய... Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு.."வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});... Continue Reading →

கொலையுதிர் காலம்

கணேஷிற்கும் வசந்திற்கும்  குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள்,  கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள். கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது. “இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்? 4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா? அல்லது வியாசர்களால் கொல்லப்பட்ட  புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?” “விஞ்ஞானமா? பைசாசமா?” சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்...காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்? குமாரவியாசன்,... Continue Reading →

புத்தம் சரணம் கச்சாமி!

திபெத்தை தன் வசப்படுத்த சீனர்கள் கௌதம புத்தரின் மறுபிறப்பான மைத்ரேயரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம் தீட்டினர். சீனாவின் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த திபெத்தியர்கள், தங்களுடைய கடவுளாக கருதும் மைத்ரேய புத்தருக்கு சீன உளவுத்துறை மூலமாக ஆபத்து வரவிருப்பதை உணர்ந்தார்கள். பத்து வயதே ஆன இளம் மைத்ரேயரைக் காப்பாற்ற பிரதமரிடம் ஆலோசித்து அமானுஷ்யனிடம் உதவி கோருகிறார், தலாய்லாமா. தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக  மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த அமானுஷ்யன், அந்த அழைப்புக் கடிதம் வந்தபோது தான் திபெத்தில் ஆரம்ப காலத்தில்... Continue Reading →

என்ன பொண்ணுன்னு நினைச்சியா..?நான் பேய்டா..!

கார்த்திக்கும் அவன் பள்ளித் தோழி மீராவும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர். ஆபிசில் மூன்றுநாள் விடுமுறை கிடைக்க தன்னுடைய ஊருக்குப் புறப்பட்ட மீரா, அன்றைய தினமே ஒரு ஆக்சிடென்ட்டில் இறக்க நேரிடுகிறது. அதையறியாத கார்த்திக் வேலை முடிந்து செல்லும் வழியில் கீர்த்து என்றொரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். கீர்த்துவிடம் மனதைப் பறிகொடுத்த கார்த்திக், மீராவிற்கு கால் செய்து தான் கீர்த்துவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். இதனிடையே அந்த ஹாஸ்டலில் கீர்த்து என்று யாரும் தங்கியிருக்கவில்லை என்ற உண்மை... Continue Reading →

உலராத ரத்தம்

விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரி கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம். இவையனைத்தும் நம்பூதிரி சொல்படி இது ‘பச்சோரா’ வகை ஆவியின்... Continue Reading →

நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →

பட்டம்

நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் ஏதோ ஒரு தருணத்தில் தினசரி நாளிதழ்களில் நம்மை நாமே மூழ்கடித்திருப்போம். தொடர்கதைகள், தகவல் துணுக்குகள், அறிவியல் கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடி, மேலும் பல.. சிறுவர்களுக்கான வார இதழ் வரிசையில் ‘பட்டம்’ தனக்கான தனிப்பாதையில். இதில் நாளும் செய்தியும், வெங்கியைக் கேளுங்கள், கணித கற்கண்டு, நீங்களும்-நாங்களும், படக்கதை-பயன்கதை, வெற்றிப்பாதை,இன்தமிழ்-என்தமிழ், கதிர்கனவுகள், இயற்கை நம் நண்பன் என ஒவ்வொரு தொகுப்பிலும் தகவலையும், மலைப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு தினமலர் வெளியீடு.... Continue Reading →

ஊச்சு..

பயம் மனித உணர்வுகளில் ஒன்று. அட்ரீனலினும், என்டோகிரைனும் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயம் பரவும். இருந்தாலும் திகிலடைவதும், பயமுறுவதும் ரசிக்கத்தக்கதாக மாறிவருகிறது. இரவு 8:30. மேல்பாறை வனப்பகுதியில் நடக்கும் திருவிழாவினை ஆவணப்படம் எடுக்கச் செல்கின்ற நால்வர், தங்கள் திட்டத்திலேயே இல்லாத சில சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அமாவாசை இருளில் தொலைந்து போகின்றனர். அர்ஜூன்-காவல்துறை அதிகாரி. தனது விசாரணையை மேல்பாறை மக்களிடம் இருந்து தொடங்கினான். "முனி அடித்திருக்கும்" "ஓநாய் கொன்றிருக்கும்" என பல கதைகள் அவனின் தைரியத்தை உலுக்கிப்... Continue Reading →

One Minute One Book – Book Tag

பொதுவாக book tag என்பது வாசிப்பின்போது பக்கங்களுக்கிடையில் குறித்துக் கொள்வதற்காக வைப்பது. இந்த book tag எல்லாம் ஒரு புத்தகத்தைப் பற்றிய சிறு குறிப்புகள் ஆகும். இவை அனைத்தும் one minute one book-ன் எழுத்தாளர்களால் தொகுக்கப்பட்டது. இது உங்களிடம் புத்தகத்தைப் பற்றிய தகவல் விரைவாக சேர எங்களால் ஆன ஒரு முயற்சி. இது எளிதில் வாசிக்கக்கூடியதாகவும் விரைவில் பகிரக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டது. மேலும் பல book tag-களை எங்களது pinterest பக்கத்தில் நீங்கள் காணலாம்..பகிரலாம்..! தேடல் தொடரட்டும்... Continue Reading →

கீழடி பதிப்பகம்

புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவரும் நம் காலத்தில் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனுடனே செலவு செய்கிறோம். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நம்மைச் சுற்றி பல முயற்சிகள் பலர் எடுத்தாலும் நம் பார்வை தொடுதிரையை விட்டு விலகுவதாக இல்லை. அடுத்த பெரும் முயற்சியாக மீண்டும் வாசிப்பை மேம்படுத்த காகிதப் புத்தகங்கள் பெரும்பாலனவை மின் புத்தகங்களாக மாற்றம் செய்யப்பட்டும், இணையத்தில் வெளியிடப்பட்டும் வாசிப்பின் மீதான கவர்ச்சியை ஈர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தும் மீம்ஸ், வதந்தி போன்ற கேலிக்கூத்துகளுக்கு... Continue Reading →

காற்று அடைத்த பையடா

சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →

நில்..கவனி..தாக்கு!

ஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் சுவைத்தோம், லயித்தோம், பெற்றோம் அறிவை என இருப்பது பயன். சுஜாதாவின் எழுத்தில் உருவானவன் நான். நான் யார், யாராகவோ இருக்கலாம். அவற்றில் அவரின் கதாப்பாத்திரங்களில் கதாநாயகன் இக்கதையில்.. கதைத் தலையில் பிக்கப், ட்ராப் செய்யும் பணிக்கு வந்திருக்கும் சொல்லப்படாத மத்திய அரசுத் துறையின் அதிகார ஆசாமி. முதலிலேயே என்னைப் பார்த்து கண் போன்ற கடமையை நழுவவிட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து செல்ல சில அத்தியாயங்கள் சுவாரஸ்யமானதாக, மசாலா, ஹவாலா, சவாலா... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑