ஒரு புத்தகத்தை ஏன் வாசிக்கணும்? புத்தகம் வாசிக்கறதுனால நமக்கு என்ன கிடைக்கும்? எந்த மாதிரி புத்தகங்களை வாசிக்கலாம்? ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்கணும்? ஏன் சில புத்தகங்கள் பல நூறு ஆண்டுகளைத் தாண்டியும் வரலாற்றில் பேசப்படுது? இந்த மாதிரி கேள்விகளை நீங்களும் நிறைய இடத்தில் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். ஏன் உங்களுக்குள்ளேயே கூட இந்தக் கேள்விகள் முளைத்திருக்கலாம். உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்றது தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'புத்தகம் படிப்பது எப்படி'ங்கற புத்தகம். வர்ஜினியா வுல்ப் என்ற... Continue Reading →
சிரிக்கும் வகுப்பறை
பள்ளிக்கூடமே ஒரு வணிக மையமாகவும், கல்வியே வியாபாரமாகவும் மாறிப்போன இந்த காலத்துப் பையன் திவாகருக்கு ஸ்கூல் அப்படிங்கற வார்த்தையே பிடிக்காது. மற்ற உயிர்களெல்லாம் சுதந்திரமா சுத்திட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு இருக்கும்போது, மனுசங்க மட்டும் ஏன் ஸ்கூலுக்கு போகணும்? எதுக்காக படிக்கணும்? படிக்கறதுனால என்ன கிடைக்கப் போகுது? இப்படி எல்லாருக்குமே வர்ற வழக்கமான கேள்விகள் தான் திவாகருக்கும் வரும். அதீத கற்பனையும் அற்புதமான அறிவுத்திறனும் உள்ள மாணவனான திவாகருக்கும் மனப்பாடம் பண்ணி படிக்கறதே புடிக்காது. அவன் வகுப்பில... Continue Reading →
எலியின் பாஸ்வேர்டு
டெக்னாலஜி நமக்கெல்லாம் ஒரு வரமா..? சாபமா..?னு மிக எளிமையா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லாத் தெரிஞ்ச பரம எதிரிகளான எலிக்கும், பாம்புக்கும் இடையே நடக்கற ஒரு தொழில்நுட்பப் போர் தான் இந்த எலியின் பாஸ்வேர்டு. டெக்னாலஜிய வெச்சு ஒண்ணை உருவாக்கவும் முடியும், இருக்கற ஒண்ணை அழிக்கவும் முடியும்னு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எலி, பாம்பு கதையை வெச்சு நகைச்சுவையுடன் கற்பனையும் கலந்து ஓட்டியிருக்கிறார். பாம்புகளால அழிஞ்சிட்டு வர தன்னோட இனத்தைக் காப்பாத்தறதுக்காக எலிங்க முயல் கிட்ட உதவி கேட்டு... Continue Reading →