The Secret of dark psychology book in Tamil. Kukufm audiobook explains in a minute.support oneminuteonebook
Come Back..
வெகு நாட்களுக்குப் பிறகு தலை காட்டியுள்ளோம். நேரமின்மையாலும், பல திட்டங்கள் சொதப்பியதாலும் தொடர்ந்து எழுத முடியவில்லை. வாசகர்கள் மன்னிக்கவும். புத்தகங்கள் பல வடிவில் பரிணமித்திருந்தாலும், இந்த 2023-ல் Podcast மற்றும் Audio புத்தகங்கள் மக்களிடையே அதிகமாக promote செய்யப்படுகிறது. எனவே வரும் காலங்களில் அவற்றில் சிலவற்றைப் பற்றியும் நாம் பார்க்கப் போகிறோம். One Minute One Book-ல் பல புதிய முயற்சிகளும் செய்ய உள்ளோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். #oneminueonebook #tamil #book #review #novels #bookreading... Continue Reading →
கோஸ்ட்
“பள்ளிக் குழந்தைகள் இருவரின் சம்பாஷணை.. டேய் எங்கம்மா சொன்னங்க டா..ராத்திரி நேரத்துல எங்கயும் தனியா வெளிய போகக்கூடாதாம்..பேய் பிடிச்சிகுமாம் டா.. அதற்கு இன்னொரு குழந்தை கேட்கிறது.. ‘பேய்’னா என்ன டா..? வெள்ளை சீலை கட்டிட்டு, கருகருன்னு கோரமான முகத்தை வெச்சிக்கிட்டு, வாயில ரத்தக்கறையோட, கால் தரையிலேயே படாம நம்மள வந்து தூக்கிட்டு போய் சாப்பிட்டிரும் டா.. இந்த விசயத்தைக் கேட்ட அந்த இன்னொரு குழந்தை அடுத்தநாள் அநேகமாக காய்ச்சலில் விழுந்திருக்கும்.” சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேச... Continue Reading →
வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் – Crime Novel
தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து கேட்டு வந்திருந்தான் சிவா. பெஸ்ட் தம்பதிகள் என்று... Continue Reading →
ஊதா நிற தேவதை – Crime Novel
சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான். தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத் தேடித் தருமாறு கமிஷனரிடம் உதவி கேட்கிறார் பெருமாள் நம்பி.... Continue Reading →
ஆகஸ்ட் அதிர்ச்சி – Crime Novel
மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ். தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம் பிடிபடுகின்றனர். எப்படியோ இன்ஸ்பெக்டரிடம் பேரம் பேசி பிணத்தை இருவருமாக சேர்ந்து மில்லில் உள்ள... Continue Reading →
விலையாக ஒரு கொலை – Crime Novel
தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டவன். சான்ஸுக்காக நிறைய டைரக்டர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தான் முரளி. அனுவின் அப்பா இரவு அவசர வேலையாக கம்பனிக்கு சென்றிருந்ததால், அவளுடைய... Continue Reading →
நான் ஏன் இறந்தேன் – Crime Novel
பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி. பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம் நடந்ததாக சரித்திரம் இல்லை என்று கோபத்தில் அவளைக் கறுவிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து... Continue Reading →
ஒரு லட்சம் வினாடிகள் – Crime Novel
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார். இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால் இனி பூமொழி நமக்கு கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறார் அம்பாள் அடிமை. பூமொழியின் இரண்டு அண்ணன்களும் அவளை ஊர்... Continue Reading →
ஒரு பௌர்ணமி மரணம் – Crime Novel
அன்றைய தினம் திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தனர் ஜெயந்த்-சுப்ரியா தம்பதியினர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஜெயந்தின் நண்பன் மனோஜ் தேனிலவிற்காக புதுமணத் தம்பதியரை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைக்கிறான். ஜெயந்தும் சுப்ரியாவும் ஊட்டியில் உள்ள மனோஜின் ஜண்டேவாலா எஸ்டேட்டிற்குச் சென்றபோது மனோஜ் வேலை விஷயமாக வெளியூர் கிளம்பிக்கொண்டிருந்தான். எஸ்டேட் மேனேஜர் விஜய்யிடம் ஜெயந்த்-சுப்ரியாவிற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு கூறிவிட்டு கிளம்பிவிடுகிறான் மனோஜ். அங்கு வந்த விஜயைப் பார்த்த சுப்ரியா திடுக்கிட்டாள். காலேஜில் தன்னைக் காதலிப்பதாகக் கூறி தன்... Continue Reading →
போகப் போகத் தெரியும் – Crime Novel
சொந்த கிராமமான தாழையூருக்கு நண்பன் ரவிச்சந்திரனையும் விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறான் விநோத். தாழையூரில் உள்ள விநோத்தின் மாமா சோமநாத குருக்கள் வீட்டிற்கு இருவரும் செல்கின்றனர். கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட இருவரும் டாக்ஸியில் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர். அப்போது அதே டாக்ஸியில் உடன் வந்த பெரியவர் தாழையூரைப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறுகிறார். இரவு நேரங்களில் வழியில் உள்ள ஆற்றங்கரை கோவில் அருகில் காத்து கறுப்பு நடமாட்டம் இருப்பதை பெரியவரின் மூலம் அறிகின்றனர். நிறைவேறாத... Continue Reading →
சத்யாவின் சபதம் – Crime Novel
பத்ரியும் வகுளாவும் முகநூல் நண்பர்கள். இரண்டு வருடங்களாக முகநூலில் மட்டுமே பேசி வந்த பத்ரி திடீர் சர்ப்ரைஸாக வகுளாவை சந்திக்க நேரில் வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத வகுளா அதிர்ச்சி அடைந்து பின் சந்தோஷமடைகிறாள். பத்ரி வீட்டிற்கு வந்த நேரம் சாயங்கால வேளை, அதுமட்டுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்த போது அவள் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தாள். மேலும் வகுளாவின் அண்ணா நவீன் இரவு 8 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். பேசிக்கொண்டே இருந்த பத்ரி அவளை... Continue Reading →
கறுப்பு வானவில் – Crime Novel
தந்தையை இழந்த அரவிந்துக்கு கல்யாண வயதில் ஒரு அக்காவும், இரண்டு தங்கைகளும் இருக்க, குடும்பத்தில் வருமானம் இல்லாததால் அக்கா ரேணுகாவின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களாக வேலை தேடி சலித்துப் போன அரவிந்த் அன்றைய தினம் இன்டர்வியூவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். பிரபலமான கங்கா கௌரி கம்பெனியில் இன்டர்வியூ. அவநம்பிக்கையுடன் இன்டர்வியூ கிளம்பிய அவனுக்கு எதிர்பாராத விதமாக அந்தக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கூடவே விபரீதமான ஒரு கோரிக்கையுடன். தன்னுடைய மகள் தேன்மொழியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த... Continue Reading →
அருகில் ஒரு நரகம் – Crime Novel
தன்னுடைய தம்பி சத்தியமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான அகிலாவையும் அவளுடைய கணவன் யோகேஸ்வரனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான் பரமேஷ். கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலா-யோகேஸ்வரன் வரவிருக்கும் வழியில் சாலையில் காத்திருக்கின்றனர் பரமேஷும் அவனுடைய நண்பர்களும். சத்தியமூர்த்தியைக் காதலித்துக்கொண்டிருந்த அகிலா, பணக்காரனான யோகேஸ்வரன் கிடைக்கவும் அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அகிலா கிடைக்காத காரணத்தால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான் சத்தியமூர்த்தி. மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் கிரைம் பிரான்ச் ஆபீஸரான அசோக் நிறைமாத... Continue Reading →
நயாகரா புயல் – Crime Novel
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக விவேக்-ரூபலா இருவரும் கனடாவில் உள்ள விண்ட்ஸர் சிட்டி ஏர்போர்ட்டிற்கு வருகின்றனர். அவர்களை ரிஸீவ் பண்ணுவதற்காக விவேக்கின் நண்பன் தமிழ்மணி ஏர்போர்ட்டில் காத்திருக்கிறான். விவேக் ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவனுக்காக ஒரு கேஸ் கனடாவில் காத்துக்கொண்டிருந்தது. மூவரும் காரில் பயணித்துக்கொண்டிருக்க வழியில் ஒரு ஃபாதர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றி ஹாஸ்பிடலைஸ் பண்ணுவதற்குள் அவர் உயிரிழக்கிறார். போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஃபாதர் இல்லை என்பதும், அவன் தேடப்பட்டு வரும் தூக்குத்தண்டனைக்... Continue Reading →
வளைவுகள் அபாயம் – Crime Novel
தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாகச் சொல்லி சத்யேஷிடம் உதவி கேட்டு வருகிறாள் சுகிர்தா. சத்யேஷ் தற்காப்புக் கலை நிபுணன். மேலும் சிறுவர்களுக்கான தற்காப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருபவன். சூரத் சத்யேஷின் உதவியாளன். தன்னுடைய பயிற்சி மையத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உதவ மறுத்துவிடுகிறான் சத்யேஷ். ஆனால் சுகிர்தா அவனை சந்தித்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே சத்யேஷிற்கு ஒரு மிரட்டல் பேர்வழி போன் செய்கிறான். சுகிர்தா விஷயத்தில் ஒதுங்கி இருக்குமாறு சத்யேஷை மிரட்டுகிறான்... Continue Reading →
ஜூன், ஜூலை, ஆ… – Crime Novel
சாரதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய மருதநாயகம் இரவு பத்தரை மணிக்கு வீட்டை அடைந்தார். வாசலிலேயே அவருடைய மனைவி ஜானகி கோபத்தில் காத்திருந்தாள். சாரதாவின் மேல் உள்ள ஆசையால் அவளுக்கு பங்களா வாங்கிக் கொடுத்து தனியாக வைத்திருந்தார் மருதநாயகம். அன்றைக்கு சாயந்திரம் ஜானகியின் உத்தரவின் பேரில் இருவரும் படத்திற்குச் செல்ல இருந்தனர். அதனால் அன்று சாரதாவை சந்திக்க வர முடியாததை முன்னமே அவளிடம் சொல்லிவிட்டார். திடீரென எதிர்வீட்டுப் பெண் ஜானகியை மாங்கல்ய பூஜைக்கு அழைத்துவிட்டுச் செல்ல அங்கு செல்ல... Continue Reading →
இது தப்பிக்கும் வேளை – Crime Novel
பிரபல சினிமா நடிகையான கார்த்திஜாவைப் பெண் கேட்டு வருகிறான் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவனான மதன். ஆரம்பத்தில் திருமணத்திற்கு யோசித்த அவள் பிறகு மதனுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறாள். திருமணத்திற்குப் பிறகு கார்த்திஜாவின் சொத்துக்களை மதன் எதிர்பார்க்கக் கூடாது என்பதே அந்த கண்டிஷன். கார்த்திஜாவின் கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறான் மதன். இந்நிலையில் மதனைப் பற்றிய மோசமான விஷயங்களுடன் ஒரு கடிதம் கார்த்திஜாவின் வீட்டிற்கு வருகிறது. மதன் ஊரில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்பவன் என்பதைப் படித்த அவள் அதிர்ந்தாள். மேற்கொண்டு... Continue Reading →
சொர்க்கத்தின் சாவி – Crime Novel
பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கவிருந்த கல்ச்சுரல் ப்ரோக்ராம்மில் பங்கேற்க ஒரு மாதம் இருந்த நிலையில் தயாராகிக்கொண்டிருந்தாள் பிரபல டான்சரான சமுத்திரா. அவளை சந்திக்க ஒரு கடிதத்துடன் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷனர் வகுளாம்பரன். அந்தக் கடிதத்தில் சமுத்திரா கல்ச்சுரல் ப்ரோகிராம்மை புறக்கணிக்க வேண்டுமெனவும், மீறி கராச்சி சென்றால் இரண்டு கால்களையும் இழக்க நேரிடும் என லிட்டில் டெவில்ஸ் என்ற தீவிரவாத அமைப்பு அவளை எச்சரித்திருந்தது. மிரட்டல் கடிதத்தைப் பொருட்படுத்தாமல் ப்ரோக்ராம்மில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தாள் சமுத்திரா. தக்க ஏற்பாடுகளுடன் பாதுகாப்பாக... Continue Reading →
உயிரின் ஒலி – Crime Novel
பரமானந்த ரிஷியின் தீவிர பக்தனான தமிழ்ச்செல்வன் தனது மனைவி வைஷ்ணவியுடன் ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் சென்றுகொண்டிருந்தான். ஆசிரமத்திற்குள் நுழையும் முன் இயற்கை உபாதை அதிகரிக்க ஒரு பெரிய பாறையின் மறைவில் ஒதுங்கினான் தமிழ்ச்செல்வன். பாறைக்குப் பின்னால் இருந்து இருவர் கிசுகிசுப்பாக பரமானந்த ரிஷிகளைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தது இவனுடைய காதில் விழுந்தது. உச்சகட்ட கோபமடைந்த தமிழ்ச்செல்வன் அவர்களை உலுக்கி எடுக்க, பேசிக்கொண்டிருந்த இருவரும் பரமானந்த ரிஷிகளின் சீடர்கள் என்பது தாமதமாக தமிழ்ச்செல்வனுக்குப் புரிகிறது. இரண்டு சீடர்களிடம் இருந்து பரமானந்த... Continue Reading →
காற்று அடைத்த பையடா
சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →
முகில் மைக்கல் மர்மம்..?!
ராயரின் பேரைச் சொன்னால் அந்த குப்பமே நடுங்கும். அந்த அளவிற்கு ராயரிடம் மரியாதை இருந்தது. புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரைத் தவிர. ராயரை அவமானப்படுத்த நினைத்த இன்ஸ்பெக்டருக்கு ராயர் மகனின் போதைப் பொருள் விவகாரம் போதுமானதாக இருந்தது. போலீஸ், கோர்ட்டு என்று மாறி மாறி அலைந்து மைக்கலை ஒருவழியாக வெளியே கொண்டுவந்துவிட்டார் ராயர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் வைத்தே மைக்கலை கொல்ல ஆட்களை அனுப்ப, ராயர் குறுக்கே வந்து விழுந்து மைக்கலை காப்பாற்றுகிறார். சாகும் தருவாயில்... Continue Reading →
பொன்னி
இதுதான் ஷான் அவர்களின் புனைவு தொடங்கும் இடம். ஆயிரமாயிரம் வருடங்களாக தனது ரகசியத்தையும் தன் மன்னருக்குத் தந்த சத்தியத்தையும் காப்பாற்றும் இரணிய சேனை மற்றும் தேரை இன மக்கள். நியூயார்க் பெடரல் வங்கியில் திருடப்பட்ட ஆறாயிரம் டன் தங்கத்தை மீட்க இந்தியா வரும் அமெரிக்க உளவுத்துறை. இந்திய நிலங்களில் தங்கத்தைத் தேடி லண்டனில் இருந்து வரும் ஆதி மைன்ஸ் தலைவரான பொன்னி. இவர்களை வைத்து நடக்கவிருக்கும் வெட்டாட்டமே “பொன்னி - இரணிய சேனை” சமீபத்தில் KGF பட... Continue Reading →
423.?!
அந்த பின்னிரவு நேரத்தில் காலிங்பெல் சத்தம் கேட்டவுடன் சற்று திடுக்கிட்டாள் டிஜிட்டல் மீடியாவில் வேலை பாக்கும் பிரியா. சற்று நிதானித்த அவள் பின் கதவைத் திறந்தாள். அவன் உள்ளே வந்தான். அடுத்த நாள் காலையில் இறந்து கிடந்தாள் அவள். கேஸ் ஹிஸ்டரியைப் பார்த்த போலீஸ் அதிகாரி கார்த்திகா அதிர்ந்தாள். கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண்ணின் நெற்றியில் 423 என்ற எண்ணால் சூடு வைக்கப்பட்டிருந்தது. கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் இரண்டு பெருவிரல்களும் வெட்டப்பட்டு இருந்தது.... Continue Reading →
கேம் சேஞ்சர்ஸ்
சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90's kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும். எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊 வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும். நமக்கு கஷ்டங்கள் வரும்போது... Continue Reading →
IAS தேர்வும் அணுகுமுறையும்..?!
IAS எக்ஸாம் பத்தி உங்கள்ள நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கலாம். பத்து லட்சம் பேர் அப்ளை பண்ணி அதுல 3000+ முதல் நிலைத் தேர்வுல(Prelims) பாஸ் பண்ணி, அதுல 1௦௦0+ முதன்மைத் தேர்வுல பாஸ் பண்ணி இன்டர்வியூக்கு போனா, அதுல இருந்து தேவைப்படற 700+ ஆபீசர்ஸ UPSC செலக்ட் பண்ணுவாங்க. இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..அதையும் தாண்டி இந்த புத்தகத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. IAS ஆக என்னென்ன தகுதி வேணும்..? IAS-க்கு எப்படி... Continue Reading →
அக்பர்
பத்தாம் நூற்றாண்டிலேயே முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்திருந்தாலும், பாபர் தான் முழுமையான முகலாய ஆட்சி இந்தியாவில் மலரக் காரணமாக இருந்தவர். அக்பரைப் பற்றி பார்ப்பதற்கு முன், அவருடைய வம்சாவளியைப் பார்ப்பது முக்கியமாகிறது. அப்போது தான் அக்பரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். முதன்முதலில் டெல்லியைக் கைப்பற்றிய பாபருக்கு இந்தியாவை நிரந்தரமாக ஆளும் எண்ணம் இல்லை. இங்கு இருந்த வளங்கள் மட்டுமே அவருடைய குறிக்கோளாக இருந்தது. ஆனால், காலம் அவரை இந்தியாவின் அரசராக மாற்றியது. பாபருக்குப் பின் வந்த... Continue Reading →
அந்தப்புரம்?!
ச்சீ.. ச்சீ.. இதைப் பத்தியெல்லாம் வெளிய பேசக் கூடாது..தப்பு என்பது போன்ற வசனங்களை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். நிறைய பேருக்கு தங்களது உடலில் நிகழும் மாற்றங்களை மற்றவர்களிடம் கேட்கத் தோன்றினாலும், பயத்தின் காரணமாக கேட்காமலேயே விட்டுவிடுவார்கள். நம்முடைய தாய்-தந்தை இல்லை எனில் இன்று நாம் என்பதே கிடையாது. அப்படி இருக்கும்போது செக்ஸ் என்ற வார்த்தையையே தவறாகப் பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் நமக்கு இந்தப் புத்தகம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடப்... Continue Reading →
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
பிரபலமான தமிழ் self-help புத்தகம். உணர்வுகளின் அறிவியலும், உளவியலும் சேர்ந்த படைப்பு. சோம. வள்ளியப்பன் அவர்களின் படைப்பு.
எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
“ஆனாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாது.. உன்னை நான் வெறுக்கிறேன்.. அவன் ரொம்ப பாவம்.. இருட்டுன்னா எனக்கு ரொம்ப பயம்.. அவங்களுக்கு ரொம்ப இளகின மனசு..உடனே அழுதிருவாங்க.. நான் உன்னை நேசிக்கிறேன்..” இந்த வார்த்தைகளை உங்க வாழ்க்கையில ஒருமுறையாவது எல்லாரும் கேட்டு இருப்பிங்க. இந்த வார்த்தைகள் உணர்வோட சம்பந்தப்பட்டது. உணர்ச்சி இது இல்லாம மனுசங்க யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி இருக்கும். ஒரு சிலர் அதிகமா கோவப்படுவாங்க..ஒரு சிலர் உடனே அழுவாங்க..ஒரு சிலர் மிதமிஞ்சிய... Continue Reading →
இல்லுமினாட்டி
இருவேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். அதீத போதையின் காரணமாக நரம்புகள் செயலிழந்து இறந்துகொண்டிருந்த ஒருவன் திடீரென மருத்துவர்களே எதிர்பாராத வகையில் உயிர் பிழைக்கிறான். அதே வேளையில்... Continue Reading →
உயிர்த் திருடர்கள்
தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ப்ளாக் ரோஸ்-க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி. அங்குதான் லதிகா தற்சயம் தங்கியிருந்தாள். லதிகா – மொத்த நாடும் பார்த்து மிரண்டு நிற்கும் துணிச்சலான ஒரு ஜர்னலிஸ்ட், பாரதியின் உயிர்த்தோழி. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மந்திரிகளின் வேலை போகக் காரணமாக இருந்தவள் லதிகா. அதனால் இயல்பாகவே அவளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். இந்த வேளையில் தான் பாரதி அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ஹோட்டலுக்குச் செல்கிறாள். எதிரிகள் பாரதி ஹோட்டலுக்குச்... Continue Reading →
அப்பா வேலை..!
இதுவரை எத்தனை சீரியல்களில் அவர் கேரக்டர் கொல்லப்பட்டது என்பது கோவிந்தராஜிற்கே தெரியாது. குறைந்தது 15 சீரியல்களிலாவது அவர் இறந்திருப்பார். இந்த சீரியலிலும் கோவிந்தராஜ் சாவதற்கு தேதி குறித்து விட்டார்கள். ஆம்...இளவயதில் கிடைத்த டாக்டர், வக்கீல், போலீஸ் என்று நடித்துக்கொண்டிருந்த வேஷங்கள் எல்லாம் இப்போது அவரை விட்டு தூர சென்று விட்டிருந்தன. இப்போதெல்லாம் அவருக்கு அப்பா வேடங்கள் மட்டுமே வருகின்றன. காலத்திற்கேற்ப கோவிந்தராஜின் சீரியல் வேடங்களும் வேகமாக மாறிவந்தன. இதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், “மரணம்..” அனைவருக்கும் சகிக்க... Continue Reading →
சாமி & கோ
20 ஆம் நூற்றாண்டின் கடைசி சில ஆண்டுகள் தொழில்முறையிலும் தொழில்நுட்பத்திலும் அதிசயிக்கும்படி பல மாற்றங்களை அடைந்து வரும் ஆண்டு. இப்பேர்ப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அந்தச் சிறுவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. “அடேய் சம்முகா! மெய்யாலுந்தாண்டா, நாம இப்ப சாப்பிட்டுட்டு இருக்குற இந்த முட்டாயோட சவ்வு காகிதத்துல இருக்காரு பாரு இவரு...” என்றபடியே தன் கையிலுள்ள காகிதத்தை சண்முகம் முகத்தருகில் கொண்டு சென்றான் அஜ்மல். அதில் முகேஷ் கண்ணா ‘சக்திமானாக’ நெடிதுயர்ந்து நின்றிருந்தார். “இவரு தான்டா சக்திமான், இவர் தான்... Continue Reading →
IAS தேர்வும் அணுகுமுறையும்..?!
IAS எக்ஸாம் பத்தி உங்கள்ள நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கலாம். பத்து லட்சம் பேர் அப்ளை பண்ணி அதுல 3000+ முதல் நிலைத் தேர்வுல(Prelims) பாஸ் பண்ணி, அதுல 1௦௦0+ முதன்மைத் தேர்வுல பாஸ் பண்ணி இன்டர்வியூக்கு போனா, அதுல இருந்து தேவைப்படற 700+ ஆபீசர்ஸ UPSC செலக்ட் பண்ணுவாங்க. இது எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..அதையும் தாண்டி இந்த புத்தகத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. IAS ஆக என்னென்ன தகுதி வேணும்..? IAS-க்கு எப்படி... Continue Reading →
நாயகி
மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த சுலோச்சனா முதல் முறையாக தன்னுடைய கிராமத்தில் இருந்து நகரத்தில் தங்கி படிக்க வருகிறாள். சுலோச்சனாவின் ஒரே நோக்கம்..நன்றாகப் படிக்க வேண்டும் என்பதே. ஊர் விட்டு ஊர் வந்த சுலோச்சனாவிற்கு நகரத்தில் எல்லாமே புதிதாகத் தெரிந்தது. மேலும் அதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவளுடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையாக பிரசன்னா வருகிறான். அழகான & பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரசன்னாவைச் சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பிரசன்னாவே விழுந்தது சுலோச்சனாவைப்... Continue Reading →
தாலிபன் : ஓர் அறிமுகம்
#paragavan #taliban_oor_arimugam அந்த நடுநிசி நேரத்தில்.. தெருவில் இரண்டு பெண்களை பெயர் தெரியாத ஏதோ ஒரு போராட்டக் குழு வன்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இது நடந்தது ஆப்கானிஸ்தானில். தன் கண் முன்னே விரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து, அந்த நிமிடம் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது அந்த இளைஞன் ஓமரால். தன்னுடைய நாட்டின் மோசமான நிலையை எண்ணி கலங்கிய ஓமர் அடுத்த நிமிடம் குதிரையில் அதிவேகமாகப் போய்க்கொண்டிருந்தார். சோவியத் யூனியனும் அமெரிக்காவும் முடிந்தவரை ஆப்கானிஸ்தானை வைத்துப் பந்தாடிச் சென்ற... Continue Reading →
ராணி 2000..?!!
இந்தியாவிற்கென ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் மூழ்கியிருக்கிறாள் ராணி. சிறுவயது முதலே கம்ப்யூட்டர் துறையில் பூந்து விளையாடும் ராணி உலகம் முழுவதும் பேமஸ். இப்போது அவளுடைய திருமண வரவேற்பில் அவளைச் சந்திப்போம். ராணியின் திருமணத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் முதல் அமெரிக்க நண்பர்கள் வரை அனைவரும் ராணியைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டு செல்ல, ரவிச்சந்திரனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. முதலிரவிலேயே அவளுடைய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான் ரவிச்சந்திரன். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பெருமைப்படாமல் தனக்கு... Continue Reading →
விதி புதிது..!
பெற்றோரை இழந்த வசந்தி சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். தோழி கல்பனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தகவல் கொடுக்காமல் இரவில் அவள் வீட்டை அடைகிறாள் வசந்தி. கல்பனாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. விவரம் அறியாத வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த தேவ்-ரஷ்மி இருவரும் கல்பனாவைத் தேடி வந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். கல்பனாவிற்கு தெரிந்தவர்கள் என்று நம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் வசந்தி. ஆனால், பலான தொழில் செய்யும் தேவ்-ரஷ்மி இருவரும் அவளை இந்தத் தொழிலுக்குத் தள்ளத் திட்டம்... Continue Reading →
கேம் சேஞ்சர்ஸ்
சின்ன வயசுல நம்ம எல்லாருக்குள்ளேயும் Fantasy, Magic மேல ஒரு அதீத ஆசை இருந்திருக்கும். உதாரணமா 90's kids-க்கு ஜீபூம்பா பென்சில் மேல அவ்வளவு ஆசை இருந்திருக்கும். எதையாவது வரைஞ்சு மந்திரம் சொன்னா அது நிஜமா வந்துரும். அந்த மந்திரத்தை உச்சரிக்காத நாளே இருந்திருக்காது. உதாரணத்துக்கு Harry Potter படத்துல வர்ற மாதிரி 😊 வளர்ந்த பிறகு நம்ம சின்ன வயசு ஆசைகளையும் எண்ணங்களையும் நினைச்சா நாம சின்ன வயசிலேயே இருந்திருக்கலாம்னு தோணும். நமக்கு கஷ்டங்கள் வரும்போது... Continue Reading →
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்..!?
“அடுத்து படிக்கப்போகும் அந்த சூழ்நிலையில் உங்களை வைத்து உங்களுக்குள் கற்பனை செய்துகொள்ளுங்கள்” “ஓர் இரவில், தனிமையை உணர்ந்து, சில சிந்தனைகளின் உந்துதலில், உங்கள் காரை எடுத்துக்கொண்டு யாரும் இல்லா தார்ச்சாலைகளில் மெதுவாக நகன்று சென்றுகொண்டிருக்கும் போது… அப்போது ஒரு சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு நபர் (ஆண் அல்லது பெண் உங்கள் கற்பனைக்கு..) உங்கள் காரை மறித்து, தனது மொபைல் ஆஃப் ஆகிவிட்டதாகவும், வெகுநேரம் நடந்து களைத்து விட்டதாகவும், இரவு நேரமாதலால் தன்னை வீட்டில் விடும்படி லிஃப்ட்... Continue Reading →
மிஸ். ப்ரீதி, 545, பீச் ரோடு, மும்பை
கலெக்டர் வகுளாபரணன் முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் செய்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான தகவலோடு ப்ரீதி என்ற ரிப்போர்ட்டர் பெண் கலெக்டரை சந்திக்க வருகிறாள். நீண்டகாலமாக கலெக்டர் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மக்ளர் சத்ரபதியைப் பற்றித் துப்பு கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி கலெக்டரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறாள். அனுமதி கிடைத்ததும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறாள் ப்ரீதி. ஸ்மக்ளர் சத்ரபதியின் மகள் தான் ப்ரீதி என்பதே பிறகு தான் கலெக்டருக்கே தெரியவருகிறது. கலெக்டர் வகுளாபரணனின் பெண் மதுமிதாவைக் கடத்தி வைத்துக்கொண்டு ஒரு... Continue Reading →
நீ..நான்..தாமிரபரணி.!
25 வருடங்களுக்கு முன்.. காதலை மையப்படுத்தி சேதுபதி எழுதிய நீ..நான்..தாமிரபரணி.. நாவல் வெகுவாகப் பிரபலமாகிறது. ஆனால், சில நாட்களிலேயே நாவல் எழுதிய ரைட்டர் சேதுபதி காணாமல் போகிறார். ரைட்டரைத் தேடிச் சென்ற சிலருக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டலும் எச்சரிக்கையும் வந்த வண்ணம் இருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு.. சேதுபதியைத் தேடும் பொறுப்பை தன்னுடைய “உண்மை” பத்திரிக்கையின் துடிப்பான ரிப்போர்ட்டரான அருணிடம் ஒப்படைக்கிறார் ஆசிரியர் அம்பலவாணன். அவரும் ஒரு காலத்தில் சேதுபதியைத் தேடச் சென்று எதிரிகளின் கோபத்தை... Continue Reading →
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?!
பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான். தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.... Continue Reading →
ஜீவா ஜீவா ஜீவா
டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவுபகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல். டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று... Continue Reading →
ப்ராஜக்ட் ஃ
சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின் குறிப்பை விட்டுச்சென்ற தாத்தா, அந்தப் புதையலால் வரும் ஆபத்தையும்... Continue Reading →
சிவப்பு விளக்கு எரிகிறது..!!
புத்தகத்தோட தலைப்பைப் படிச்ச உடனே இந்தப் புத்தகம் எதைப் பற்றியது என்று வாசகர்களில் நிறைய பேர் இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஆம்..இந்தப் புத்தகம் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் பெண்களைப் பற்றியது தான். அதுவும் வேறு வழியின்றி இந்த இழிதொழிலுக்குத் தள்ளப்பட்ட அபலைப் பெண்களைப் பற்றியது தான். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் காதல் வலையில் விழுந்த பெண்கள், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதை விடுதிகளில் இருக்கும் பெண்கள்,... Continue Reading →
Bynge App
தொடர்கதைகளுக்கென உருவாக்கப்பட்ட ஒரு செயலியாக Bynge இருப்பது, தமிழ் இலக்கிய எழுத்துலக வரலாற்றில் புதுமையான மற்றும் வரவேற்கத்தக்க முயற்சியாகும். தமிழ் இலக்கிய வாசகர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், முன்னணி எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், அராத்து, இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத் போன்றவர்களின் நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்து செயலியை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது எழுத்தாளர்கள் எழுதிவரும் Bynge செயலியில் தற்போது வலம் வருபவை பற்றிய சிறு குறிப்பு.. எழுத்தாளர்களும் - அவர்களின் எழுத்துக்களும்.. ராஜேஷ்குமார் – நள்ளிரவுச் செய்திகள்... Continue Reading →
Buy Your Favorite Books @ Minimal Price
To create your own library, this is the right place to buy books. Variety of books available in this site for Kids, Crime thriller, Literature, Non-Fiction, Romantic, Adult, Fantasy, Marketing, Mystery, Self Help, Spirituality and Science Fiction. You can find different language books like English, Tamil, Kannada and Hindi. eBooks also available here in discount... Continue Reading →
சர்வைவா
கற்பனைகள்… பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும் மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான். who knows…?! நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில்... Continue Reading →
பெண்ணொன்று கண்டேன்..?!
மனிதன் இரசிக்கவே இரவுகள் பிறந்ததோ? அடடே..! எத்தனை அமைதி! இவ்வுலகிலும், என்னுள்ளத்திலும்! காரணம் அவள்தான். தொட்டிலில் படுத்துறங்கும் அளவிற்கு வயதில்லை. இருந்தும் தூக்கம் இல்லாமல் தடுமாறும் போதெல்லாம் தாலாட்டு பாடி கண்ணுறங்க செய்திருக்கிறாள். காலையில் தோன்றும் சூரியனை நான் கண்டதில்லை. காரணம், என்னை அவள் மடியில் இருந்து பிரிக்க அந்த சூரியனுக்கும் விருப்பமில்லை. முதலில் கண்ட முகமும் அவள்தான்; முதலில் நான் காணும் முகமும் அவள்தான். காணும் இடமெல்லாம் அவள் மட்டுமே தெரிந்தாள். நான் யாரென்று அவளிடம்... Continue Reading →
எழுதுவோம் பதில்கள்
STORY 1 : Name : Jorge William Push Title : One of the Minute Story : As they sow ,so let them reap This sentence is very correct. And change in our lifestyle. One of the minute to change. STORY 2 : Name :ராகவி Title : முகமூடி Story : சமீபத்தில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தைப் பார்த்துக்... Continue Reading →
நிழலின் குரல்
சேகர் கிருஷ்ணாவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ் அடித்த நிலையில், சேகர் கிருஷ்ணாவின் இரங்கல் செய்தி அடுத்த நாள் பேப்பரில் வெளியாகி சுகன்யாவையும் அவள் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. ஆனால், அது போலியான செய்தி என பின்னர் தெரியவர இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்றைய இரவே சேகர் கிருஷ்ணா கொலை செய்யப்படுகிறான். சேகர் கிருஷ்ணாவின் அப்பா ஐராவதமும் தம்பி முரளிகிருஷ்ணாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். நடந்தகொலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார்? கொலைகளின் நோக்கம் என்ன? விவேக்கிடம் குற்றவாளி... Continue Reading →
விகடன்
தமிழகத்தின் #1 வார இதழ் அரசியல், பொது கருத்து, சினிமா, பயனுள்ள கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வாசகர் மேடை, கார்ட்டூன்கள் இன்னும் பல பல வாசிக்க அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் வார இதழ். இப்போ எதுக்காக ஆனந்த விகடன் பத்தி சொல்லிட்டு இருக்கான்னு யோசிக்கறீங்களா…? காரணம் இருக்கு. ஆனந்த விகடன் வெளியிடற நிறைய கட்டுரைகள் மற்றும் தொடர்களின் தொகுப்புகள் புத்தகங்களாக வெளிவரும்போது மிகவும் பிரபலமாகவும், தரமாகவும் அமையும். உதாரணம் கி.மு - கி.பி, வந்தார்கள் வென்றார்கள், மனிதன்... Continue Reading →
மனிதன் மாறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் தனக்குத்தானே மேம்பட்டவனாகப் பார்க்கப் பழகிவிட்டான். ஆனால், இயற்கை எல்லோரையும் சமமாகத் தான் வைத்திருக்கிறது. ஆயிரம் தான் பூசி மொழுகினாலும் பிறவிகுணம் கண்டிப்பா போகாது. அந்த மாதிரி கற்கால மனிதனிலிருந்து இக்கால மனிதனை எல்லா வகையிலும் செய்யும் ஒப்பீடே வெ.இறையன்பு எழுதிய “மனிதன் மாறிவிட்டான்”. இது ஒரு சிறப்பான முயற்சி. நம் உடல்மொழி, உறுப்புகள், நம் இயல்பான... Continue Reading →
விதைகள் எங்கே போகின்றன..?
மண்ணில் விழுந்தால் மக்காத பொருள் ஒன்றை கூறுங்களேன்…?"நெகிழி"வேறு பதில்.."இரப்பர்"வேறு............ என்னைக் கேட்டால் என் பதில்.."விதை".மண்ணில் விழுந்தும் மக்காமல் துளிர்விடும் இயற்கையின் அற்புத செயலிதான் விதை..விதைகளை சூழ்ந்த நாகரீகம், பழக்கவழக்கங்கள், காணாமல் போன சில விதைகள் பற்றி அன்று முதல் இன்று வரையிலான ஒருமித்த ஆராய்ச்சி அல்லது வாசிப்பிற்கினிய விதை தொகுப்பு என்றே சொல்லலாம். இந்த "விதைகள் எங்கே போகின்றன?"குடமுழுக்கு செய்வதன் உண்மை விளக்கம்?போன்ற பல பல விதைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைப்பதற்கான அறிய வாசிப்பாக அமையும்.... Continue Reading →
சீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்
கணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும். This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician - Srinivasa Ramanujan.What is so great... Continue Reading →
நினைவாற்றல் பெருக மனப் பயிற்சிகள்
மனிதன் தனக்காக சேர்த்து வைப்பது ஒன்றுதான் நினைவுகள்(memories)... நினைவாற்றல் மிக்கவர்கள் அதிகமான துறைகளில் சாதிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நினைவாற்றல் சற்றே குறைவான சிலர் தாழ்வு மனப்பான்மையில் மேலும் மறதிக்கு தீனி போடுகிறார்கள். ஆனால் மறதி ஒரு கவனக்குறைவே ஒழியகுறைபாடில்லை என பி.எஸ்.ஆச்சாரியா இந்த புத்தகத்தில் நினைவாற்றல் பற்றிய விளக்கங்களையும் அதை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் எழுதியுள்ளார். #one minute one book #tamil #book #review #p.s.aachariya #ninaivaatral peruga mana payirchigal #memory power increasing practices... Continue Reading →
வாவ் 2000
“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான்! வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி! இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர்! தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன்! அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன்! பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்! மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்!” இன்னும்... இன்னும்...... Continue Reading →
திருப்பாவை
வைணவர்கள் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவர் பாடிய திருப்பாவை, 30 பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கி, 30 நாட்கள் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருந்து, மாதவனை வேண்டிப் பாடுவதே திருப்பாவை. பாவை நோன்புக்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் எல்லாப் பெண்களும் கடைபிடிக்கக் கூடியவை. கன்னிப் பெண்கள் பொழுது விடியுமுன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி மாதவனைத் துதித்து வழிபடுவர். நோன்புக் காலத்தில் பெண்கள்... Continue Reading →
கிமு.கிபி.
ஒரு ஊர்ல “குரங்குல இருந்து மனுஷன் வந்தான்”னு ஒரு கூட்டமும், “ஆதாம் ஏவாளுக்கு பொறந்தவங்க தான் மனுசங்க”ன்னு ஒரு கூட்டமும் சொல்லிக்கிட்டு சண்டை போட, பஞ்சாயத்து முத்தி போக ரெண்டு டீமும் நாட்டாமை கிட்ட போனா............அந்தாளு “ஆதாரம் இருக்கா”ன்னு கேட்க, எலுமிச்சம்பழத்தை நசுக்கி பயணத்தை ஆரம்பிக்குது கிமு. கிபி. பயணத்திட்டம்.. சாயங்காலம் லூசி கூட கடல் காத்து வாங்கிட்டு, நைல் நதி ஓரமா டென்ட் போட்டு தங்கிட்டு, காலைல எகிப்து போயி மம்மி கூட செல்பி எடுத்திட்டு,... Continue Reading →
100/100 அறிவியல் : மரபியல்
ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க..? ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →
யாருக்கும் வெட்கமில்லை
‘சோ’ இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. இவர் பேனா புரட்சியையோ, பகுத்தறிவையோ, நம்பிக்கையையோ சார்ந்து எழுதவில்லை. இவர் எடுத்திருப்பது உண்மைகளையே. அதோட பிம்பங்கள்ள ஒண்ணுதான் “யாருக்கும் வெட்கமில்லை”. இதப் பாத்ததும் பலருக்கு பலவித எண்ணங்கள் அல்லது ஒரு நிமிஷம் உங்கள நிறுத்தி கூட இருக்கலாம். அதுதான் உண்மையோட மேஜிக். “உண்மை பேசும் தைரியம் இந்த சோ ராமசாமிக்கு அதிகம்” என அவருடைய முன்னுரை எழுத்துக்களை வெச்சே நிரூபிச்சிருப்பார். இக்கதை எளிமையான குடும்ப சூழலில் தொடங்கி பெண்ணியத்தையும், சமூகப்... Continue Reading →
வெக்கை
"The novel questions the ethics of the politics of revenge." “கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு” இந்த கருத்து ஒரு பக்கம் இருக்க நகரவாசிகளாக நாம் கிராம மக்களை காட்டுமிராண்டிகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் பார்க்கவும், சித்தரிக்கவும் பழகிவிட்டோம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழத்தெரிந்த அவர்களே தமிழினத்தின் தொன்மை, மரபு, விவசாயம், பழக்கம், மனிதம், சாமர்த்தியம், கட்டுப்பாடு, வெறித்தனம் மற்றும் வீரம் சுமப்பவர்கள். சிதம்பரம் என்கிற 16 வயது சிறுவனையும் அவன் சுற்றங்களையும் மையமாக வைத்து 1980-களில்... Continue Reading →
எளியோருக்கான சட்டங்கள்..!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி? வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? இரயில் விபத்து... Continue Reading →
ருத்ரவீணை
“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” அன்று! 300 வருடங்களுக்கு முன்பு..கண்களில் தேஜஸ், தளர்ந்த நடை, தோளில் சுமை, அதில் பெருமை வாய்ந்த வீணையுடன் தஞ்சாவூர் வீதிகளில் தோடிபுரத்திற்கு வழிதேடி அந்த இஸ்லாமியர் அலைந்து கொண்டிருந்தார். நாத அதிபதி தோடீஸ்வரன் குடிகொண்டிருக்கும் வறண்ட பூமியாக இருந்த தோடிபுரத்தை வந்தடைந்த அந்த மாயாஜால மனிதரை அனைவரும் பாபா என்றழைத்தனர். அவர் சுமந்துவந்த வீணை சாதாரண வீணை அல்ல, அந்தப் பரமனே தனது இணையான உமையை வைத்து உருவாக்கிய... Continue Reading →
சித்திரப்பாவை
அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக்... Continue Reading →
நாகர்களின் இரகசியம்
தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →
கொலையுதிர் காலம்
கணேஷிற்கும் வசந்திற்கும் குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள், கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள். கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது. “இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்? 4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா? அல்லது வியாசர்களால் கொல்லப்பட்ட புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?” “விஞ்ஞானமா? பைசாசமா?” சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்...காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்? குமாரவியாசன்,... Continue Reading →
புத்தம் சரணம் கச்சாமி!
திபெத்தை தன் வசப்படுத்த சீனர்கள் கௌதம புத்தரின் மறுபிறப்பான மைத்ரேயரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம் தீட்டினர். சீனாவின் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த திபெத்தியர்கள், தங்களுடைய கடவுளாக கருதும் மைத்ரேய புத்தருக்கு சீன உளவுத்துறை மூலமாக ஆபத்து வரவிருப்பதை உணர்ந்தார்கள். பத்து வயதே ஆன இளம் மைத்ரேயரைக் காப்பாற்ற பிரதமரிடம் ஆலோசித்து அமானுஷ்யனிடம் உதவி கோருகிறார், தலாய்லாமா. தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த அமானுஷ்யன், அந்த அழைப்புக் கடிதம் வந்தபோது தான் திபெத்தில் ஆரம்ப காலத்தில்... Continue Reading →
வாயுபுத்ரர் வாக்கு
பிரகஸ்பதி.. தன் நண்பன் உயிரோடு கிடைத்த சந்தோஷத்தை விட, ஐந்து வருடங்களாக மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவனைத் துளைத்தெடுக்கிறது. மேலும் பஞ்சவடியில் தங்களைக் கொல்வதற்கு எதிரிகளான சக்ரவர்த்தி தக்ஷரும், அயோத்தி அரசர் திலீபரும் கைகோர்த்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சதி திட்டத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கும் ஒரு சூத்திரதாரி இருப்பதை சிவன் உணர்ந்தார். ஒரு யுகத்தின் மிகப்பெரிய நன்மையே(சோமரசம்) தீமையாக மாறும் என்பதை அறிந்த சிவனுக்கு... Continue Reading →
World Wide Book Finding #1
Some Years Before The Partiality had spread world wide by the colour, language, work. They are called poor by rich. Their only option to follow the rules, work to rich people. The riches are rule poor as a boss. But Now a days those things are changed. I Believe Those Change had happened by "Books".... Continue Reading →
World Book Day 2020
#one_minute_one_book #tamil #book #review #world_book_day_2020
Thankful Moment..
This is unforgettable moment in my life. Thank you my dear followers, visitors and friends who following and commenting one minute one book regularly and encouraging me to write more and more. Without you I cannot be here. I need your support for everyday to engrave myself. Once again thank you all..
Full Pink Moon 2020
Full Pink Moon appeared in many countries from April 7 night to April 8 morning. But in India it appears at 8.05 am. So, we can’t see the beauty of Pink Moon. This unseen Pink Moon video taken by iPhone SE. https://youtu.be/G_NnViSwel8 Scientific Reason behind this Full Pink Moon : Full Moon : The point... Continue Reading →
Dear CORONA..
இந்தப் பதிவு எழுதப்படுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸினால் என்னுடைய மனநிலை குறித்து எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம். அது உங்களது மனதையும் பிரதிபலிக்கலாம். எண்ணங்கள் செயல்படும் வேளை இது. முதலாவதாக சுய ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கும் நன்றி. ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறெல்லாம் நிகழும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களிடம் கேலிச் சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்திருப்பேன். இன்று 25... Continue Reading →
Due to CORONA
International Book Fair 2020 of The London Book Fair-UK, The Leipzig Book Fair-Germany, Paris Book Fair-France, Bologna Children’s Book Fair-Italy planning to takes place between 10 March 2020 to 02 April 2020 will be cancelled following the rapid increase of COVID-19 Coronavirus. Following government decisions to ban gatherings of more than 5000 people in confined... Continue Reading →
என்ன பொண்ணுன்னு நினைச்சியா..?நான் பேய்டா..!
கார்த்திக்கும் அவன் பள்ளித் தோழி மீராவும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்தனர். ஆபிசில் மூன்றுநாள் விடுமுறை கிடைக்க தன்னுடைய ஊருக்குப் புறப்பட்ட மீரா, அன்றைய தினமே ஒரு ஆக்சிடென்ட்டில் இறக்க நேரிடுகிறது. அதையறியாத கார்த்திக் வேலை முடிந்து செல்லும் வழியில் கீர்த்து என்றொரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். கீர்த்துவிடம் மனதைப் பறிகொடுத்த கார்த்திக், மீராவிற்கு கால் செய்து தான் கீர்த்துவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். இதனிடையே அந்த ஹாஸ்டலில் கீர்த்து என்று யாரும் தங்கியிருக்கவில்லை என்ற உண்மை... Continue Reading →
உலராத ரத்தம்
விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரி கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம். இவையனைத்தும் நம்பூதிரி சொல்படி இது ‘பச்சோரா’ வகை ஆவியின்... Continue Reading →
நாகர்களின் இரகசியம்
தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →
பட்டம்
நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் ஏதோ ஒரு தருணத்தில் தினசரி நாளிதழ்களில் நம்மை நாமே மூழ்கடித்திருப்போம். தொடர்கதைகள், தகவல் துணுக்குகள், அறிவியல் கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடி, மேலும் பல.. சிறுவர்களுக்கான வார இதழ் வரிசையில் ‘பட்டம்’ தனக்கான தனிப்பாதையில். இதில் நாளும் செய்தியும், வெங்கியைக் கேளுங்கள், கணித கற்கண்டு, நீங்களும்-நாங்களும், படக்கதை-பயன்கதை, வெற்றிப்பாதை,இன்தமிழ்-என்தமிழ், கதிர்கனவுகள், இயற்கை நம் நண்பன் என ஒவ்வொரு தொகுப்பிலும் தகவலையும், மலைப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு தினமலர் வெளியீடு.... Continue Reading →
கீழடி பதிப்பகம்
புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவரும் நம் காலத்தில் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனுடனே செலவு செய்கிறோம். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நம்மைச் சுற்றி பல முயற்சிகள் பலர் எடுத்தாலும் நம் பார்வை தொடுதிரையை விட்டு விலகுவதாக இல்லை. அடுத்த பெரும் முயற்சியாக மீண்டும் வாசிப்பை மேம்படுத்த காகிதப் புத்தகங்கள் பெரும்பாலனவை மின் புத்தகங்களாக மாற்றம் செய்யப்பட்டும், இணையத்தில் வெளியிடப்பட்டும் வாசிப்பின் மீதான கவர்ச்சியை ஈர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தும் மீம்ஸ், வதந்தி போன்ற கேலிக்கூத்துகளுக்கு... Continue Reading →
காற்று அடைத்த பையடா
சிறுகதைகள் மூலமாகவும் க்ரைம் கதைகளை வாசகர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்று இந்தக் கதையின் வழியே நிரூபித்துள்ளார் எழுத்தாளர் ர.சிவக்குமார். நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறிய தேவா மற்றும் சுபா என்ற இரண்டு கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த சிறுகதை க்ரைம் கதையாகும். பிறந்தநாள் பரிசாக தேவா கொடுத்த கிஃப்டே சுபாவின் மரணத்திற்கு காரணமாகி, கொலையாளியை நெருங்கவும் காரணமாக இருக்கும். சுபா இறந்த பிறகு கதையில் வேகம் கூடி குற்றவாளியைப் பிடித்த தேவாவின் அண்ணன் சிஐடி... Continue Reading →
மெலூஹாவின் அமரர்கள்
மெலூஹா! உன்னத வாழ்வை உணர்ந்த தேசம்.. மெலூஹாவில் வாழும் மக்கள் சூர்யவம்சிகள். சூரியனின் வழிவந்த அரசர்களின் மக்கள். நேர்மையானவர்கள். அரசின் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் மதித்து வாழ்பவர்கள். தீமையின் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற முக்கியமான ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெலூஹர்களிடம் வந்து சேர்கிறார், சிவன். சோமரஸத்தின் உதவியால் நீலமாக மாறிய சிவனின் கழுத்து. நீலகண்டர்.. தீமையை அழித்துத் தங்களை உய்விக்க வந்த கடவுளாகவே சிவனைக் கருதும் சூர்யவம்சிகள் சிவனிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர். கடவுளாகவே இருந்தாலும் காதல் வயப்படுவது இயல்பே.... Continue Reading →
நில்..கவனி..தாக்கு!
ஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் சுவைத்தோம், லயித்தோம், பெற்றோம் அறிவை என இருப்பது பயன். சுஜாதாவின் எழுத்தில் உருவானவன் நான். நான் யார், யாராகவோ இருக்கலாம். அவற்றில் அவரின் கதாப்பாத்திரங்களில் கதாநாயகன் இக்கதையில்.. கதைத் தலையில் பிக்கப், ட்ராப் செய்யும் பணிக்கு வந்திருக்கும் சொல்லப்படாத மத்திய அரசுத் துறையின் அதிகார ஆசாமி. முதலிலேயே என்னைப் பார்த்து கண் போன்ற கடமையை நழுவவிட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து செல்ல சில அத்தியாயங்கள் சுவாரஸ்யமானதாக, மசாலா, ஹவாலா, சவாலா... Continue Reading →